ஆதித்யா பிர்லா குழுமம் (Aditya Birla Group) தமிழ்நாட்டின் பள்ளிபாளையத்தில் ஒரு புதிய ‘ஆதித்யா பிர்லா பொதுப் பள்ளி’ (Aditya Birla Public School (ABPS) தொடங்கப்படுவதாக அறிவித்துள்ளது. கிராசிம் நிறுவனத்தின் ‘ஜன சேவா டிரஸ்ட்’ (Jan Seva Trust)-ன் கீழ் தொடங்கப்பட்டுள்ள இந்த இருபாலர் கல்வி நிறுவனம் (co-educational institution), முதலாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை கல்வி பயிற்றுவிக்கவுள்ளது. இந்தப் புதிய பள்ளியின் தொடக்கத்தின் மூலம், ஆதித்யா பிர்லா குழுமத்தின் கல்வி நெட்வொர்க் இப்போது தமிழ்நாட்டில் மூன்று ஆதித்யா பிர்லா பொதுப் பள்ளிகளுடனும், 14 மாநிலங்களில் 56 பொதுப் பள்ளிகளுடனும் இந்தியாவில் பரவலாக விரிவடைந்துள்ளது.
இப்பகுதியில் உள்ள மக்களின் நீண்டகால ஆசைகளை நிறைவேற்றும் அதே வேளையில், உயர்தர சமூகக் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் ஆதித்யா பிர்லா குழுமத்திற்கு இருக்கும் அர்ப்பணிப்பை இந்த முயற்சி பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.. கல்வித் துறையில் இக்குழுமத்திற்கு இருக்கும் வலுவான நற்சான்றுகளின் அடிப்படையில், இந்த புதிய பள்ளி உள்ளூர் மக்களுக்கு கல்வி கற்பதற்கான வாய்ப்புகளையும், வசதிகளையும் மிகச்சிறப்பான முறையில் உருவாக்கும். இதன் மூலம் எதிர்கால சந்ததியினரை கல்வியறிவுமிக்கவர்களாக வடிவமைக்கும்.
கிராசிம் நிறுவனத்தின் 'பல்ப் & ஃபைபர்' (Pulp & Fibre) வணிகத்தின் மூலம், ஆதித்யா பிர்லா குழுமம் ஈரோடு பகுதியின் தனிச்சிறப்பாக இருக்கும் உற்பத்தி துறையின் வளர்ச்சியுடன் பல ஆண்டுகளாக இணைந்து செயல்பட்டு வருகிறது. இது இந்தியாவின் முன்னணி ஜவுளி தொழில் மையங்களில் (textile clusters) ஒன்றான ஈரோடு பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கியப் பங்களிப்பை அளித்துள்ளது.
ஆதித்யா பிர்லா பொதுப் பள்ளியின் (Aditya Birla Public School) தொடக்கம் குறித்து ஆதித்யா பிர்லா சமூக முயற்சிகள் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான மையத்தின் தலைவரான திருமதி. இராஜஸ்ரீ பிர்லா (Mrs. Rajashree Birla, Chairperson, Aditya Birla Centre for Community Initiatives and Rural Development) பேசுகையில், "பள்ளிபாளையத்தில் ஆதித்யா பிர்லா பொதுப் பள்ளியைத் தொடங்குவது, அனைவருக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்யும். மேலும், கல்வி கற்பதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதில் நாங்கள் மேற்கொண்டுவரும் முயற்சிகளில் மற்றுமொரு மைல்கல்லாக அமைந்திருக்கிறது. கல்வி என்பது வாழ்க்கையை சிறப்பாக மாற்றியமைக்கக்கூடியது. அதேநேரம், அடுத்து வரவிருக்கும் தலைமுறையினருக்குப் பல நல்வாய்ப்புகளை உருவாக்கும் ஆற்றல் கொண்டது என்று நாங்கள் நம்புகிறோம். இக்கல்வி நிறுவனத்தின் மூலம், குழந்தைகள் கற்றுக் கொள்ளவும், வளர்ச்சியடையவும், தங்களின் முழுத் திறனையும் உணர்ந்து கொள்ளவும் ஊக்குவிக்கப்படும் ஒரு சூழலை உருவாக்குவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். எங்களது முயற்சி வெறும் கல்விச் சிறப்பை மட்டும் வளர்ப்பது அல்ல, அதோடு சேர்த்து நற்பண்புகள், தன்னம்பிக்கை மற்றும் கற்றலின் மீது வாழ்நாள் முழுமைக்குமான ஆர்வத்தையும் வளர்ப்பதாகும். இந்தப் பள்ளி எதிர்கால இந்தியாவின் இளம் மனங்களை வடிவமைப்பதிலும், இப்பகுதியின் வளர்ச்சிக்கு பங்களிப்பதிலும் ஒரு அர்த்தமுள்ள பங்கை வகிக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்." என்றார்.
கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பல்ப் & ஃபைபர் பிரிவின் வணிகத் தலைவர் திரு. வாதிராஜ் குல்கர்னி (Mr Vadiraj Kulkarni, Business Head, Pulp & Fibre, Grasim Industries) பேசுகையில், "இப்பகுதியில் ஆதித்யா பிர்லா பொதுப் பள்ளியின் தொடக்கமானது, எங்களது பயணத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் உள்ளூர் சமூகங்களின் மீது நாங்கள் கொண்டிருக்கும் அக்கறையையும், அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது. இங்கு வியந்து பார்க்க வைக்கும் ஜவுளித் தொழிலுக்கான சூழல் எங்களது வணிகத்துடன் நெருங்கிய தொடர்புடையது. இந்த முயற்சியின் மூலம், தரமான கல்வியில் முதலீடு செய்வதன் வழியாகவும், எதிர்கால சந்ததியினருக்கு அதிகாரமளிக்கும் வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமாகவும், இப்பகுதியின் நீண்டகால வளர்ச்சியை முன்னெடுப்பதை எங்களது நோக்கமாகக் கொண்டுள்ளோம்." என்றார்.
பள்ளிபாளையம், ஆதித்யா பிர்லா பொதுப் பள்ளி தேசிய கல்விக் கொள்கையின் (National Education Policy (NEP)) கோட்பாடுகளுக்கு இணங்க சிபிஎஸ்இ (CBSE) பாடத்திட்டத்தைப் பின்பற்றும். இப்பள்ளியின் தொலைநோக்குப் பார்வை அதன் கொள்கை அறிக்கையில் பிரதிபலிக்கிறது: "பள்ளிபாளையம், ஆதித்யா பிர்லா பொதுப் பள்ளி என்பது வருங்காலத் தலைவர்கள், தொழில்முனைவோர் மற்றும் மாற்றத்தை உருவாக்குபவர்களை வளர்த்தெடுக்கும் ஒரு கல்விநிறுவனத்தை உருவாக்குவதற்கான ஒரு கனவின் வெளிப்பாடாகும். கல்வி, விளையாட்டு அல்லது கலை என எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு குழந்தையும் குறைந்தது ஒரு துறையிலாவது சிறந்து விளங்குவதற்கான ஒரு இடத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்."
இந்தத் தொலைநோக்குப் பார்வையைப் பிரதிபலிக்கும் வகையில், கல்விச் சிறப்போடு விளையாட்டு, கலை மற்றும் இதர பாடநெறி செயல்பாடுகளில் (co-curricular pursuits) தனிப்பட்ட வளர்ச்சிக்கான வாய்ப்புகளையும் சமநிலைப்படுத்தி, மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியை (holistic development) ஊக்குவிக்கும் வகையில் இப்பள்ளி வடிவமைக்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தில் குழந்தைகளுக்கு உகந்த கற்றல் இடங்கள், சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமையான மற்றும் ஆற்றல் திறன் கொண்ட வசதிகள், மற்றும் சரிவுப் பாதைகள் (ramps) மற்றும் லிஃப்ட்கள் மூலம் எவ்விதத் தடையுமில்லாமல் பள்ளிக்கு எளிதில் வந்தடையும் வசதிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. தனது சிபிஎஸ்இ பாடத்திட்டம் மற்றும் நவீன கற்றல் சூழல் மூலம், பள்ளிபாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாணவர்களுக்குப் பெரிய நகரங்களில் உள்ள முன்னணி நிறுவனங்களுக்கு இணையான கல்வி அனுபவத்தை வழங்குவதை இப்பள்ளி நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் ஆதித்யா பிர்லா பொதுப் பள்ளி, உயர்தர பள்ளிச் சூழலை அவர்களின் வீடுகளுக்கு அருகிலேயே சாத்தியமாக்கியுள்ளது.
இந்த ஆதித்யா பிர்லா பொதுப் பள்ளி தொடக்க விழாவில், பள்ளியை நிறுவுவதில் மிக முக்கியப் பங்கு வகித்த குழுமத்தின் கல்வி ஆலோசகர் டாக்டர் ஷியாம்லால் கங்குலி (Mr. Shyamlal Ganguli, Group Advisor - Education); கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் பல்ப் & ஃபைபர் பிரிவின் முதன்மை சந்தைப்படுத்தல் அதிகாரி திரு. மன்மோகன் சிங் Mr. Manmohan Singh, Chief Marketing Officer, Pulp & Fibre, Grasim Industries);; மற்றும் இப்பகுதியைச் சேர்ந்த முன்னணி தொழிலதிபர்கள், ஜவுளி சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் முதலாம் ஆண்டில் பள்ளியில் சேரும் மாணவர்களின் குடும்பத்தினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்