டிஜிட்டல் துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் புதுமையாளர்களை கௌரவிக்கும் நோக்கில் DigitALL Awards 2026 விருது விழா நடைபெற உள்ளது.
நுறு ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் ஒரு அங்கமாக செயல்பட்டு வரும் அமைப்பு டிஜிட்ஆல். டிஜிட்டல் அறிவாற்றலை வளர்க்கும் நோக்கில் செயல்பட்டு வரும் இந்த அமைப்பு சார்பில் டிஜிட் ஆல் அவார்ட்ஸ் 2026 எனும் பிரமாண்ட விருது வழங்கும் விழா வரும் ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிமுக நிகழ்வு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தங்கமயில் ஜூவல்லரி லிமிடெட் துணைத் தலைவர் என்.பி.அருண் கலந்து கொண்டு விருது விழா போஸ்டரை வெளியிட்டார். டிஜிட்ஆல் தலைவர் ஜே.கே.முத்து, துணைத்தலைவர் ஷாகித் அலி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
டிஜிட்டல் உலகில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் Influencers, Trainers, Educational Institutes, SaaS Tools, Mobile Apps, Software Innovators மற்றும் DigitALL உறுப்பினர்கள் உள்ளிட்டோரின் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில், மொத்தம் 5 பிரிவுகளில் 26 விருதுகள் வழங்கப்பட உள்ளன.
இந்த விருதுகளுக்கான தேர்வு, துறைசார் நிபுணர்கள் அடங்கிய நம்பகமான நடுவர் குழுவின் (Jury) மதிப்பீட்டின் அடிப்படையில் நடைபெறும். மாநில அளவில் திறமைகளை வெளிக்கொணர்ந்து, சாதனையாளர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்குவதே இந்த விருது விழாவின் முக்கிய நோக்கமாகும்.
DigitALL Awards 2026 விருது வழங்கும் விழா வரும் ஆகஸ்ட் 8, 2026 (சனிக்கிழமை) அன்று மதுரை ஹட்சன் ஆடிட்டோரியத்தில் நடைபெற உள்ளது.
“இது வெறும் விருது அல்ல; உங்கள் முயற்சி, வளர்ச்சி மற்றும் சாதனைகளுக்கு கிடைக்கும் மாநில அளவிலான அங்கீகாரம்” என்று டிஜிட்ஆல் அமைப்பின் தலைவர் ஜே.கே.முத்து தெரிவித்தார்.
விருதுகளுக்கான பரிந்துரைகள் (Nominations) தற்போது வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்து இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு 97517 66440 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பங்களை https://www.digitallindia.org/digitall-awards என்ற லிங்க்கில் சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்