ஆலங்குளத்தில் தவெகவில் இணைந்த அதிமுக நிர்வாகிகள்

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அக்கட்சியில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். தவெகா மாவட்ட செயலாளர் டிபிவி விபின் சக்கரவர்த்தி முன்னிலையில் இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

தொழிலதிபர்கள் வி.டி. தங்கராஜ், வி.டி.ரமேஷ்ராம், ஜெய வெங்கடேஷ் மற்றும் பாக்கியராஜா, ஜெய விக்ரன், ஜெயவரன் உள்ளிட்ட மாற்றுக் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் தவெகவில் தங்களை இணைந்த்துக் கொண்டனர்.

மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை தவெக மாவட்ட செயலாளர் வரவேற்றுப் பேசினார். அப்போது தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் தலையிலான அரசு கொண்டு வரும் நலத்திட்டங்களை மக்களிடையே கொன்டு சேர்க்கும் பணியை அனைவரும் ஒன்றிணைந்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu