பாரம்பரிய புகழ்பெற்ற ராயல் என்ஃபீல்டு ‘புல்லட் 650’ இந்தியாவில் அறிமுகம்

நடுத்தர அளவிலான மோட்டார் பைக் பிரிவில் (250சிசி முதல் 750சிசி) உலகளாவிய முன்னோடியாக விளங்கும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம், அதன் புகழ்பெற்ற 'புல்லட்' மோட்டார் பைக்கை இந்தியாவில் அதன் சக்திவாய்ந்த 650சிசி வடிவில் அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது; இது புல்லட்டின் ஒன்பது தசாப்தங்களுக்கும் மேலான பயணத்தில் ஒரு உற்சாகமான புதிய அத்தியாயத்தைத் துவங்கியுள்ளது.

முதன்முதலில் 1932-இல் அறிமுகப்படுத்தப்பட்ட புல்லட், கலாச்சார ரீதியாக தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தது. உலகின் மிக நீண்ட காலமாக தொடர்ச்சியாக உற்பத்தி செய்யப்படும் மோட்டார் பைக்கான இது, தற்போது அதன் உறுதியான பயணத்தின் 94வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது; பல தலைமுறைகளாக மோட்டார் பைக் பிரியர்களின் உலகில் தனக்கென ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. அதன் தனித்துவமான கம்பீரத் தோற்றம், மிடுக்கான நிலைப்பாடு மற்றும் புகழ்பெற்ற சப்தம் ஆகியவை அசல் மோட்டார் பைக் பயணத்தின் அடையாளமாகவே மாறின.

இப்போது, பாரம்பரிய வாகனத்திற்கு புதிய ஆற்றல் கிடைத்துள்ளது. புல்லட் மேலும் சக்திவாய்ந்த வாகனமாக உருவாகியுள்ளது; முன்பை விட வலுவாகவும், கம்பீரமாகவும் வரும் புல்லட், அதற்கே உரிய அடையாளமான அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது; அதன் புதிய 650சிசி தோற்றத்தில் புல்லட் அதன் அதிகாரப்பூர்வ பிரிட்டிஷ் வழித்தோன்றல்கள் மற்றும் ஒப்பற்ற இந்திய ஆன்மாவையும் தாங்கி நிற்கிறது. இதுவே புல்லட் பிரியர்களுக்கு ஆர்இ பிராண்டின் பாரம்பரிய சிறப்பினை கொண்டாடுவதற்கான ஒரு புதிய காரணமாகவும் அமைந்துள்ளது.

ஐஷர் மோட்டார்ஸ் லிமிடெட் நிறுவனத்தின், நிர்வாக இயக்குநரும், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலருமான பி.கோவிந்தராஜன் புல்லட் 650 பைக் குறித்து கூறுகையில், “தொண்ணூறு ஆண்டுகளுக்கும் மேலாக, புல்லட் அதன் நம்பகத்தன்மை, உறுதி மற்றும் கம்பீரத்தின் அடையாளமாக நிற்கிறது. ராயல் என்ஃபீல்டின் அசல் மோட்டார் பைக் ஓட்டுவதன் தத்துவத்த்தின் எடுத்துக்காட்டாகவும் உள்ளது. அனைத்திலும் புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 650 பைக்கைப் பொருத்தவரை, எங்களது அணுகுமுறையானது புல்லட் பைக்கை மாற்றி நிர்மாணிப்பது கிடையாது; ஆனால் அதனை நவீனம் மற்றும் அசலான அம்சங்களைக் கொண்டு மேம்படுத்துவதே ஆகும். இதன் ஒவ்வொரு அம்சங்களையும் -  அதாவது அதன் விகிதாசாரம் மற்றும் வடிவம் துவங்கி, அதன் கம்பீரத் தோற்றம், நுணுக்கமான வேலைப்பாடுகள் என ஒவ்வொன்றிலும் புகழ்பெற்ற புல்லட்டின் உண்மையான ஆன்மாவையும் அதன் குணாதிசயங்களையும் அப்படியே தகக்கவைத்து மிக கவனமாக மெருகேற்றியுள்ளோம். அதேவேளையில் பேரலல் ட்வின் 650சிசி பிளாட்ஃபார்மின் சக்தி மற்றும் புதுப்பித்தலுடன் சீராக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது,” என்று கூறினார்.

துல்லியமான 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்ட ட்வின் சிலிண்டர் பிளாட்ஃபார்மானது மென்மையான ஆற்றல் மற்றும் சிரமமின்றி ஆக்சிலரேஷனை வழங்குகிறது; இதனால் நிதானமான தொலைதூர பயணம் மற்றும் உற்சாகமான பயணம் என இரண்டிற்கும் இந்த பைக் ஏற்றதாக இருக்கும். இந்த மோட்டார் பைக் ஸ்டீல் ட்யூபுலர் ஸ்பைன் ஃபிரேமில், ஷோவா சஸ்பென்ஷனுடன் பொருத்தப்பட்டுள்ளதால் - இது பல்வேறு சாலை சூழலுக்கு ஏற்ப ஒரு இதமான மற்றும் நம்பிக்கையான பயண அனுபவத்தை வழங்குகிறது. அதன் பாரம்பரிய அம்சமான 19 அங்குல முன்புற மற்றும் 18 அங்குல பின்புற சக்கரங்களால் திடமான பயணத்திற்கு உதவுகிறது; மேலும் புல்லட்டின் மிடுக்கான சாலை இருப்பை நீண்ட காலமாக நிர்ணயித்து வரும் அதன் கிளாசிக் விகிதாச்சாரங்களும் அப்படியே பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த பைக்கின் ஒவ்வொரு வேலைப்பாடும் புல்லட்டின் தெளிவான வடிவமைப்பு மொழியை முன்னோக்கி அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது. அதன் விண்டேஜ்-ஸ்டைல் இறக்கை போன்ற பேட்ஜ், பளபளப்பாக கையால் வர்ணம் பூசப்பட்ட பின்ஸ்ட்ரிப்கள் மற்றும் பெஞ்ச் இருக்கை அம்சங்கள்  ஆகியவற்றுடன்  சேர்த்து, அதன் அடையாளமான டியர்டிராப் வடிவ ஃப்யூயல் டேங்க் ஓட்டுபவர்களுக்கு அதன் காலத்தால் அழியாத புல்லட்  அனுபவத்தை வழங்குகிறது. இந்த மோட்டார்பைக்கில் புகழ்பெற்ற "டைகர்-ஐ" பைலட் லேம்ப்ஸ் கொண்ட கேஸ்கெட்-பொருத்தப்பட்ட ஏல்இடி ஹெட்லேம்ப் உள்ளது. இது 1954-ஆம் ஆண்டுக்கு முந்தைய பாரம்பரியம் மிக்கது. இதன் உயரமான கைப்பிடிகள் மற்றும் நிமிர்ந்த பைக் ஓட்டும் தோரணை காரணமாக சாலையில் எப்போதும் புல்லட்டை ஒரு மிடுக்கான வாகனமாக தனித்துக் காட்டுகிறது.

ஒரு தெளிவான இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் அதன் அனலாக் வசீகரத்தை டிஜிட்டல் எல்சிடி டிஸ்ப்ளேவுடன் வழங்குகிறது; இதில் எரிபொருள் இருப்பு, ட்ரிப் மீட்டர், கியர் நிலை மற்றும் சர்வீஸ் குறித்த நினைவூட்டல்கள் போன்ற அத்தியாவசிய தகவல்கள் காட்டப்படுகின்றன. இவை யாவும் நவீன செயல்பாட்டை கிளாசிக் அம்சங்களுடன் இணைக்கிறது. புல்லட் 650 கேனன் பிளாக் மற்றும் பேட்டில்ஷிப் ப்ளூ ஆகிய இரண்டு அற்புதமான வண்ணங்களில் ரூ.3,64,856 என்கிற பிரத்தியேக ஷோரூம் விலையில் இந்தியா முழுவதும் அதன் அங்கீகரிக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு டீலர்ஷிப்களில் கிடைக்கிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu