பாவூர்சத்திரத்தில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை முன்னாள் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர் மோர், தர்ப்பூசணி பழங்களை வழங்கினார்.
கீழப்பாவூர் ஒன்றியம், கல்லூரணி ஊராட்சி பாவூர்சத்திரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் கல்லூரணி ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் ஏற்பாட்டில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. தொழிலதிபர் ஆர்.கே. காளிதாசன் தலைமை வகித்தார். தொழிலதிபர் சேவியர் ராஜன், பொதுக்குழு உறுப்பினர் அருள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் இளங்கோ, அருணோதயம், மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் ராஜ்குமார் வரவேற்றார்.
முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர், தர்ப்பூசணி பழங்களை வழங்கி பேசினார்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் அறங்காவலர் கால சாமி, முன்னாள் மாவட்ட பொறுப்புகுழு உறுப்பினர் மேகநாதன், முன்னாள் ஊராட்சி தலைவர் வின்சென்ட், ஒன்றிய கவுன்சிலர் சங்கர், அட்மா சேர்மன் குணசீலன், ஆலங்குளம் பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் தங்க செல்வம், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் தீபன் சக்கரவர்த்தி, மாவட்ட பிரதிநிதிகள் சமுத்திர பாண்டியன், வளர்மதி ராஜன், அன்பழகன், துரைப்பாண்டியன், ஸ்டீபன் சத்யராஜ், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் சொசைட்டி சுப்பிரமணியன், கிளை நிர்வாகிகள் காந்திராமன், வைத்திலிங்க ராஜா, பொட்டுத்தாய், சிவன் பாண்டியன், ரூபன், கண்ணன், முத்துப்பாண்டி, பீமன், சிவசக்தி, அருணாசலம், ஒயிட் ராஜா, பெரியார் திலீபன், அருள் ஜூலியஸ், ஒன்றிய பிரிதிநிதி சேர்மலிங்கம், அருள்பாண்டியன், கணேசன், சண்முக சுந்தர்ராஜ்,சேகர், பொன் செல்வம், தாசன், கதிரேசன், தினகரன் ,சுபாஷ், வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன், குறும்பை சமுத்திர பாண்டி, ஆனந்த், ஆல்வின், வினோத்,ஆசீர்,தமிழ்ச்செல்வன், பால்கனி, பரமசிவம், ஆனந்தராஜ், தனக்குமார், பாண்டி ஆசாரி, துரை பாண்டியன், வினைதீர்த்தான், ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அரிகிருஷ்ணன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்