பைக் சத்தத்தை தாளமாக மாற்றி, டிவிஎஸ் அப்பாச்சி, இன்று தனது முதல் அதிகாரப்பூர்வ கீதமான - ‘The Apache DNA’ -யை அறிமுகப்படுத்தியது. இது பிராண்டின் 20 ஆண்டுகால பாரம்பரியத்தைக் கொண்டாடுகிறது. இந்த கீதம், இந்தியாவிலும் உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு குறிப்பாக புதிய தலைமுறைக்கு - புதிய உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. இதனை இந்தியாவின் சிறந்த ராப் கலைஞர் மற்றும் பாடலாசிரியர்களில் ஒருவரான ப்ரோதா வி இயற்றியுள்ளார். ஆங்கிலம், இந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய 6 மொழிகளில் வெளியாகியுள்ள இந்த கீதம், டிவிஎஸ் அப்பாச்சி போன்ற ஒரு ரேசிங் மற்றும் செயல்திறன் மோட்டார் சைக்கிள் பிராண்டிற்கு ஒரு மைல்கல் தருணத்தைக் குறிக்கிறது.
டிஎன்ஏ கீதத்தின் வீடியோ லிங்க் : <https://www.instagram.com/reel/DULRnY-AfVu/>
இசை எப்போதும் ரைடர்களின் உற்சாகத்தைத் தூண்டும் சக்தியாக இருந்துள்ளது. TVS Apache தனது செயல்திறன் மையமான பாணியின் மூலம் அதே ஆற்றலை வெளிப்படுத்துகிறது. அச்சமற்ற மனப்பாங்கையும், ரேசிங் மரபையும் தன்னகத்தே கொண்ட TVS Apache, 60க்கும் மேற்பட்ட நாடுகளில் 6.5 மில்லியனுக்கும் அதிகமான ரைடர்களுக்கு செயல்திறன், தொழில்நுட்பம் மற்றும் புதுமையின் அடையாளமாக உருவெடுத்துள்ளது. இந்த கீதம் அந்த உற்சாகமான மனப்பாங்கை மேலும் வலுப்படுத்தி, பந்தையப் பாதையிலும், அதற்கு அப்பாலும் தன்னம்பிக்கை மற்றும் ஒப்பற்ற ஆற்றலின் துணிச்சலான வெளிப்பாடாக தன்னை நிலைநிறுத்துகிறது.
டிவிஎஸ் அப்பாச்சியின் முதல் அதிகாரப்பூர்வ கீதம் பற்றி கருத்து தெரிவித்த விமல் சும்ப்லி, “20 ஆண்டுகளாக, TVS Apache எங்கள் ரேசிங் DNA-வின் உயிரோட்டமான வெளிப்பாடாக இருந்து வருகிறது. உலகம் முழுவதும் உள்ள 6.5 மில்லியன் ரைடர்களை சக்திவாய்ந்தவர்களாக மாற்றிய மனப்பாங்கும் பாரம்பரியமும் இதுவாகும். ”தி அப்பாச்சி டிஎன்ஏ” கீதம் என்பது டிவிஎஸ் அப்பாச்சியின் தத்துவத்தை தன்னுள் கொண்டிருக்கும் ஒவ்வொரு ரைடருக்குமான எங்களின் சமர்ப்பணமாகும். ரேசிங் மரபில் உருவான தொழில்நுட்பத்தை அனைவருக்கும் எளிதில் கிடைக்கச் செய்வதற்கான எங்கள் முயற்சியை தொடர்ந்து கொண்டு செல்லும் போது, டிவிஎஸ் அப்பாச்சியின் இருப்பை இசை மற்றும் இளைஞர் கலாச்சாரத்திற்கும் விரிவுபடுத்தி வருகிறோம். தினமும் இந்த பிராண்டை உணர்ந்து வாழும் சமூகங்களுடன் மேலும் ஆழமான இணைப்புகளை உருவாக்குவதே எங்கள் நோக்கமாகும்” என்றார்.
‘தி அப்பாச்சி டிஎன்ஏ’ பாடல்வரிகள், டிவிஎஸ் அப்பாச்சியின் அடிப்படை தத்துவமான வேகம், துல்லியம் மற்றும் கட்டுப்பாட்டை பிரதிபலிக்கின்றன. இந்த கீதத்தின் அறிமுகத்துடன், TVS Apache தனது ரேசிங் DNA-வை மோட்டார் சைக்கிள்களைத் தாண்டி விரிவுபடுத்துகிறது. இதன் மூலம் ரைடர்களுடன் உள்ள உணர்வுப்பூர்வமான இணைப்பை மேலும் வலுப்படுத்தி, பல்வேறு இசை மூலம் சமூக வலைதளங்களிலும் தனது இருப்பை விரிவாக்குகிறது. செயல்திறன் மிக்க மோட்டார் சைக்கிள் உலகின் எல்லைகளை தொடர்ந்து மீறிக் கொண்டு செல்லும் இந்த பிராண்டு, டிவிஎஸ் அப்பாச்சியின் தன்னம்பிக்கை, இயல்புத்தன்மை மற்றும் தடுக்க முடியாத ரைடிங் மனப்பாங்கிற்கான அர்ப்பணிப்பை வலிமையான வெளிப்பாடாக ஒலிக்கச் செய்கிறது. இது அடுத்த தலைமுறை ரைடர்களின் மனதுடன் ஆழமாக ஒத்திசைவாக இணைகிறது.
0 கருத்துகள்