இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் க்ரூஸர் பைக்கான ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 நவம்பர் 2020-இல் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து உலகெங்கிலும் உள்ள பயணிகளின் நம்பிக்கையைப் பெற்று, தற்போது விற்பனை எண்ணிக்கையில் 6 லட்சம் என்ற மைல்கல்லை கடந்துள்ளது.
அதன் சௌகரியமான க்ரூஸிங் வசதி, மேம்படுத்தப்பட்ட புதிய இன்ஜின் மற்றும் சிரமமில்லா பயணத்தை வழங்குவதால், அனுபவம் வாய்ந்த மோட்டார் பைக் ஓட்டுநர்கள் மற்றும் புதிய ரைடர்கள் மத்தியில் விருப்பமான க்ரூஸர் மோட்டார்பைக்காக மீட்டியோர் 350 குறுகிய காலத்தில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளது.பல ஆண்டுகளாக, மோட்டார்பைக் துறையின் மதிப்புமிக்க விருதான ‘இந்தியன் மோட்டார்பைக் ஆஃப் தி இயர் 2021' விருது உட்பட பல உலகளாவிய பாராட்டுகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது; இது நடுத்தர அளவிலான (மிட்-சைஸ்) மோட்டார்பைக் பிரிவில் மிகவும் வெற்றிகரமான க்ரூஸர் பைக்குகளில் ஒன்றாக தனது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளது. மீட்டியோர் 350 அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, அனைத்து வயது பயணிகளுக்கும் எளிதான பயணத்தின் என்பதன் மறுபெயராக திகழ்ந்து வருகிறது. தினசரி நகர பயணமானாலும் சரி, நீண்ட நெடுஞ்சாலை பயணமானாலும் சரி, ஒரு பொருத்தமான க்ரூஸர் பைக்காக இது தன்னை நிலைநிறுத்தியுள்ளது.
ஜே-சீரிஸ் பிளாட்ஃபார்முக்கு மாறிய முதல் ராயல் என்ஃபீல்டு மோட்டார்பைக் என்ற முறையில், மீட்டியோர் 350 உடனடியாக நீண்ட தூர ரைடர்கள் மற்றும் மோட்டார் பைக் பிரியர்களின் மனத்தைக் கவர்ந்தது; அது மட்டுமல்லாமல், சௌகரியமான பைக் பயணம் மற்றும் மெக்கானிக்கல் ரிஃபைன்மென்ட்டை எதிர்பார்த்து முதல் முறை க்ரூஸர் பைக் வாங்கும் ஆர்வலர்களிடமும் மிகுந்த பாராட்டை பெற்றது. நகர போக்குவரத்தோ அல்லது திறந்த நெடுஞ்சாலை பயணமோ, எதுவாக இருந்தாலும், ஒரு சமநிலையுடன் கூடிய வசதியான பயண அனுபவத்தை வழங்குவதன் மூலம், மீட்டியோர் 350 புதிய பயணிகளை தன் வசம் ஈர்த்தது; இதனால் நடுத்தர அளவிலான க்ரூஸர் பைக் பிரிவை விரிவுபடுத்தவும் இது பெரிதும் உதவியது.
மீட்டியோர் 350 பைக்கானது ஃபயர்பால், ஸ்டெல்லார், அரோரா மற்றும் சூப்பர்நோவா என்கிற நான்கு தனித்துவமான ரகங்களில் வருகிறது; இந்தியாவில் அவற்றின் பிரத்தியேக ஷோரூம் விலை ரூ.1,95,546 முதல் ரூ.2,15,770 வரை உள்ளது. மீட்டியோர் 350 க்ரூஸர் 60+க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனையாகிறது; வலுவான டீலர் நெட்வொர்க்கின் ஆதரவுடன் இந்தியாவில் 2000-க்கும் மேற்பட்ட விற்பனை மையங்கள் மற்றும் சர்வதேச சந்தைகளில் 1000-க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களுடன் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்