மருத்துவமனைகளுக்கு பொருட்கள் வாங்குவதில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க புதிய ஒப்பந்தம்

தமிழ்நாடு முழுவதும் மருத்துவத்துறையின் வினியோக சங்கிலியை மேம்படுத்தும் வகையில், அபோர்டுபிளான் மற்றும் இந்திய சுகாதார சேவை வழங்குனர்கள் சங்கத்தின்  தமிழ்நாடு கிளை ஆகியவை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. 

இதன் மூலம், இந்த சங்கத்தில் உள்ள மருத்துவமனைகள், அபோர்டுபிளானின் 'புரோகலிக்ஸ்' என்ற இணைய தளத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த இணைய தளம், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் சரியான விலை மற்றும் விவரங்களை அறிந்துகொள்ள உதவும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக மருத்துவத்துறையில், பொருட்கள் வாங்குவது குறித்த சரியான தரவுகள் ஒரே இடத்தில் கிடைப்பதில்லை. இதனால், ஒரே விதமான மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களுக்கு வெவ்வேறு விலைகளை மருத்துவமனைகள் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதைப் போக்கும் வகையில் அபோர்டுபிளான் புரோகலிக்ஸ் தளமானது, சந்தை விலைகளையும் பொருட்களையும் சரியாக ஒப்பிட்டுப் பார்ப்பதற்கான ஒரு வசதியை மருத்துவமனைகளுக்கு வழங்குகிறது. இந்த வெளிப்படைத்தன்மையின் மூலம், மருத்துவமனை உரிமையாளர்கள் மருத்துவச் சேவையின் தரத்தில் எந்த சமரசமும் செய்யாமல், சரியான விலையில் பொருட்களை வாங்கி தங்கள் செலவுகளைக் குறைக்க முடியும்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, இந்திய சுகாதார சேவை வழங்குனர்கள் சங்கத்தின்  தமிழ்நாடு கிளையில் உள்ள மருத்துவமனைகளுக்கு இந்தத் தளத்தைப் பயன்படுத்த முன்னுரிமை வழங்கப்படும். மேலும், இந்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அவர்கள் தங்களது அன்றாடப் பணிகளில் எளிதாக இணைத்துச் செயல்பட, தேவையான அனைத்து ஆதரவும் வழிகாட்டுதலும் வழங்கப்படும்.

சரியான தகவல்கள் கிடைக்காமல் இருக்கும் நிலையை மாற்றி, தரவுகளின் அடிப்படையில் சரியான முடிவுகளை எடுப்பதே இந்தக் கூட்டணியின் முக்கிய நோக்கமாகும். அபோர்டுபிளான் புரோகலிக்ஸ் தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், மருத்துவமனைகள் மருந்துகள் மற்றும் உபகரணங்களின் தற்போதைய சந்தை விலைகளை உடனுக்குடன் சரிபார்க்க முடியும். மருத்துவத்துறையின் விநியோக முறையில் ஏற்படும் இந்த முக்கியமான முன்னேற்றம், மருத்துவமனைகள் நீண்ட காலம் சிறப்பாகவும் தடையின்றியும் செயல்பட மிக அவசியமான ஒன்றாகும்.

இது குறித்து இச்சங்கத்தின் தமிழ்நாடு கிளையின் தலைவர் டாக்டர். சதீஷ் தேவதாஸ் கூறுகையில், "மருத்துவச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் இந்தச் சூழ்நிலையில், அபோர்டுபிளானின் இந்தத் திட்டம் எங்கள் சங்கத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு சரியான நேரத்திலும், மிகவும் தேவையான ஒன்றாகவும் அமைந்துள்ளது. இது, செலவுகள் குறித்த தெளிவை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நோயாளிகளுக்கான சிகிச்சையின் தரத்தில் எந்தவித குறையும் இல்லாமல், மருத்துவமனைகள் தங்கள் செலவுகளைச் சிறப்பாகக் கையாளவும் உதவுகிறது. இதுவே எங்கள் அமைப்பின் முக்கிய குறிக்கோளாகும்," என்றார்.

தமிழ்நாடு கிளையின் செயலாளர் அடெல் ஜே கூறுகையில், "இந்தியாவில் நீண்ட காலமாகவே மருத்துவப் பொருட்கள் வாங்கும் முறையில், தற்போதைய சந்தை விலைகளைச் சரியாக அறிந்துகொள்ளும் வசதி குறைவாகவே இருந்து வருகிறது. புரோகலிக்ஸ் தளம் இந்த நிலையை மாற்றுவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் தாங்கள் வாங்கும் பொருட்களுக்குக் கொடுக்கும் விலைக்கும், சந்தையில் உள்ள உண்மையான விலைக்கும் உள்ள வித்தியாசத்தை தரவுகளின் அடிப்படையில் தெளிவாகப் பார்க்க இது உதவுகிறது. இதன் மூலம், எங்கள் சங்கத்தில் உள்ள மருத்துவமனைகள் சரியான விலையில் பொருட்களை வாங்கவும், அதற்கேற்ப செலவுகளைக் குறைத்து நல்ல பலனைக் காணவும் முடியும்," என்றார்.

அபோர்டுபிளான் வினியோக பிரிவின் தலைவர் டாக்டர். விக்கி கோத்தாரி கூறுகையில், "மருத்துவமனைகளில் வழக்கமான முறையில் நேரடியாகப் பொருட்களை வாங்குவதால் ஏற்படும் கூடுதல் வேலைகள் மற்றும் சிரமங்களைக் குறைக்கும் வகையிலேயே இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மருத்துவமனை நிர்வாகிகள் தங்களுக்குத் தேவையான மிக முக்கியமான பொருட்களை, பாதுகாப்பான மற்றும் சரிபார்க்கப்பட்ட ஒரு டிஜிட்டல் தளத்தின் வழியாக மிகவும் எளிதாகவும் வேகமாகவும் வாங்க முடியும்," என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu