டிவிஎஸ் மோட்டார் கம்பெனி அறிமுகப்படுத்தும் ஆர்பிட்டர் வி1

இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியில் உலகளாவிய முன்னணி நிறுவனமாக திகழும் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, 1.8  கிலோவாட் திறன் கொண்ட 'டிவிஎஸ் ஆர்பிட்டர் வி1' மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், சந்தையில் தனது எலக்ட்ரிக் வாகனத் தயாரிப்புகளின் வரிசையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இந்நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலேயே அனைவராலும் எளிதில் வாங்கக்கூடிய ஒரு என்ட்ரி-லெவல் மாடலாக இது வெளிவந்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு புதிய மற்றும் செளகரியமான  வாகன உரிமையாளர் மாடலை வழங்கும் நோக்கில், தனது அனைத்து இவி மாடல்களுக்கும் 'பேட்டரி அஸ் ஏ சர்வீஸ்' திட்டத்தையும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

டிவிஎஸ் ஆர்பிட்டர் வி1 இருசக்கர வாகனத்தின் வருகை மற்றும் பாஸ் திட்டத்தின் அறிமுகம் ஆகியவற்றின் மூலம், டிவிஎஸ் மோட்டாரின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் ஆரம்ப விலை இப்போது ரூ.49,999 (டெல்லி எக்ஸ்-ஷோரூம், பிரதமரின் இ டிரைவ் சலுகை உட்பட). இந்த பாஸ் திட்டம் ஸ்கூட்டரை வாங்கும்போதான ஆரம்பச் செலவைக் குறைப்பதோடு, வாடிக்கையாளர்களுக்கு நீண்ட கால பேட்டரி உத்தரவாதத்தையும், எந்தவித கவலையுமற்ற மனநிம்மதியையும் அளிக்கிறது. பாஸ் திட்டம் இல்லாமல் டிவிஎஸ் ஆர்பிட்டர் வி1 ஸ்கூட்டரை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள், அதனை ரூ.84,500 என்ற விலையில் (டெல்லி எக்ஸ்-ஷோரூம், பிரதமரின் இ டிரைவ் சலுகை உட்பட) பெற்றுக்கொள்ளலாம்.

1.8 கிலோவாட் பேட்டரித் திறனுடன் வெளிவந்துள்ள டிவிஎஸ் ஆர்பிட்டர் வி1, நகர்ப்புற பயணிகளின் அன்றாட எலக்ட்ரிக் பயணத்தை எளிமையாகவும், நடைமுறைக்கு ஏற்றதாகவும் மாற்றும் வகையில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அறிமுகத்தின் மூலம், டிவிஎஸ் ஆர்பிட்டர் வாகன வரிசையானது இப்போது 1.8 கிலோவாட் திறன் கொண்ட வி1 மற்றும் 3.1 கிலோவாட்திறன் கொண்ட வி2 என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

அன்றாடம் நாம் மேற்கொள்ளும் நகர்புறப் போக்குவரத்துகளுக்காகவே தனித்துவமிக்கதாக வடிவமைக்கப்பட்டுள்ள டிவிஎஸ் ஆர்பிட்டர் வி1, சான்றளிக்கப்பட்ட 86 கி.மீ ஐடிசி ரேஞ்சை வழங்குகிறது. மேலும், 0 முதல் 80% வரை சார்ஜ் ஆவதற்கு சுமார் 2 மணி 20 நிமிடங்கள் எடுத்துக்கொள்வதால், இது அன்றாடப் பயணத் தேவைகளுக்கு மிகவும் ஏற்றதாக அமைகிறது. நிம்மதியான பயணத்தை உறுதி செய்யும் செளகரியத்தையும், வாகனம் ஓட்டுபவர்களின் அனுபவத்தையும் மேம்படுத்தும் வகையில், கனெக்டெட் மொபைல் ஆப், வைசருடன் கூடிய முன்பக்க எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் நமக்கு வரும் போன் அழைப்புகளைக் காட்டும் வண்ண எல்சிடி கிளஸ்டர் உள்ளிட்ட பல மேம்பட்ட அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

டிவிஎஸ் ஆர்பிட்டர் வி1,  வாகன உரிமையாளர்களை மனதில் கொண்டு வடிவமைப்பை பிரத்தியேகமாக மேற்கொண்டுள்ளது.   அழகியலை வெளிப்படுத்தும் அம்சங்கள் மற்றும் நம்முடைய அன்றாட பயன்பாட்டிற்கு இடையே சரியான சமநிலையை உருவாக்கும் ஒரு நவீனமயமான, நேர்த்தியான மற்றும் வாகனம் ஓட்டுபவர்களுக்கு மேம்பட்ட அனுபவத்தை வழங்கவேண்டுமென்ற நோக்கமுள்ள வடிவமைப்புத் தத்துவத்தைப் பின்பற்றுகிறது.

இதில் உள்ள 845 மிமீ நீளமுள்ள தட்டையான இருக்கை, ஓட்டுநருக்கும் பின்னால் அமர்பவருக்கும் பயணத்தின் போது செளகரியத்தையும்,  நிம்மதியையும் உறுதி செய்கிறது; அதே நேரத்தில், 290 மிமீ நேரான ஃபுட்போர்டு கால்களை தாராளமாக வைத்துக்கொள்ள போதுமான இடவசதியைத் தருகிறது. அகலமான மற்றும் நேராக நிமிர்ந்திருக்கும் ஹேண்டில்பார்உடலுக்கு ஏதுவாக, வாகனம் ஓட்டுபவர் செளகரியமாக அமரும் வசதியை வழங்குவதால், தினசரி பயணங்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் அமைகின்றன. இரண்டு ஹெல்மெட்களை வைக்கும் அளவிற்குப் போதுமான இடவசதியுடன் கூடிய 34 லிட்டர் அண்டர்-சீட் ஸ்டோரேஜ் இந்த ஸ்கூட்டரில் உள்ளது, இது அன்றாடப் பயன்பாட்டை மேலும் சிறப்பாக்குகிறது.

டிவிஎஸ் மோட்டார் தனது அனைத்து இவி மாடல்களிலும் பாஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது; இது வாடிக்கையாளர்கள் பேட்டரிக்கான முழுத் தொகையையும் முன்கூட்டியே செலுத்தாமல், பேட்டரி பயன்பாட்டிற்கான சந்தாவை மட்டும் செலுத்தும் வசதியை அளிக்கிறது.  அதாவது குறைவான வாகனம் வாங்கும் தொகை, ரூ.49,999 முதல் துவங்கும். மாதம் ரூ.862  முதல் தொடங்கும், வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ற, விருப்பத்தேர்வுகளுடன் கூடிய சந்தாக் காலத் திட்டங்கள். பாஸ் சந்தாவில் 5 ஆண்டுகள் / 70,000 கி.மீ வரையிலான நீட்டிக்கப்பட்ட வாரண்டி அடங்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட பாஸ் சந்தாக் காலம் முழுவதும் எவ்வித கட்டுப்பாடும் இல்லாத மாதாந்திரப் பயன்பாடு உறுதி செய்யப்படுகிறது, என்று டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் இந்திய இருசக்கர வாகன வணிகப் பிரிவின் தலைவர் கௌரவ் குப்தா தெரிவித்துள்ளார். 

பாஸ் போன்ற விருப்பத்தேர்வுகள் அளிக்கும் வசதியானது, வாகன உரிமையாளர் மாடல்களுடன் இணைவதன் மூலம், டிவிஎஸ் இவி தயாரிப்பு வரிசையானது இந்தியா முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான வரவேற்பை உருவாக்குவதோடு, அவற்றின் பயன்பாட்டைத் தொடர்ந்து துரிதப்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் கம்யூட்டர் & இவி பிசினெஸ் பிரிவின் ஹெட் மற்றும் கார்ப்பரேட் பிராண்ட் & மீடியா பிரிவின் ஹெட் அனிருத்தா ஹல்தார் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu