இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனத் துறையில் உலகளவில் முன்னணியில் உள்ள டிவிஎஸ் மோட்டார் நிறுவனமும், எக்ஸலென்ஷியாவும் இணைந்து, வேட்டிகன் நகர ஆளுநரகத்திற்கு இரண்டு டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வழங்குவதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு உகந்த, நிலைத்தன்மையைப் பாதுகாக்கும், சமூகப்பொறுப்புணர்வுடன் கூடிய போக்குவரத்திற்கான தங்கள் உறுதிப்பாட்டை வலுப்படுத்தியுள்ளன.
கடந்த பிப்ரவரி 5ம் தேதி நடைபெற்ற டிவிஎஸ் ஐக்யூப் வாகனங்களின் இந்த அதிகாரப்பூர்வ விநியோகம், வேட்டிகன் மற்றும் எக்ஸலென்ஷியா இடையே ஏற்கனவே உள்ள ஒருங்கிணைந்த கூட்டுசெயல்பாட்டின் ஒரு பகுதியாகும். இந்த ஒத்துழைப்பு நடவடிக்கையானது ஏற்கனவே புதுமையான தயாரிப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த திட்டங்களில் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
டிவிஎஸ் மோட்டார் இத்தாலியாவுடனான எக்ஸலென்ஷியாவின் கூட்டு செயல்பாட்டின் மூலமான இந்த முன்னெடுப்பு, வேட்டிகன் நகர ஆளுநரகம் ஏற்கனவே மேற்கொண்டுள்ள சுற்றுச்சூழலியல் மாற்ற செயல்முறையில் ஒரு உறுதியான அடுத்தகட்ட நகர்வாக அமைந்திருக்கிறது. வேட்டிகன் போன்ற தனித்துவமான நகர ஆளுநரக சூழலில் செயல்திறன், நம்பகத்தன்மை மற்றும் மனிதர்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மரியாதை ஆகியவை முக்கிய மதிப்புகளாகக் கருதப்படுகின்றன. இத்தகைய சூழலின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட 'பூஜ்ஜிய-உமிழ்வு' போக்குவரத்து தீர்வுகளை (zero-emission mobility) முன்னெடுப்பதை இந்த கூட்டு நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நிகழ்வின் முக்கியத்துவம் குறித்து, டிவிஎஸ் மோட்டார் இத்தாலியாவின் பொது மேலாளர் ஜோவானி நோட்டர்பர்டோலோ டி ஃபர்னாரி கூறுகையில், "வேட்டிகன் போன்ற ஒரு பெரும் கெளரவமிக்க நகரத்தில் டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களைப் பயன்படுத்துவது, அதன் மீதான நம்பகத்தன்மையையும், நகர்ப்புற எலக்ட்ரிக் போக்குவரத்து குறித்த எங்கள் பார்வையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. இது சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பயன்பாடு மற்றும் உலகத் தரம் வாய்ந்த தரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது" என்றார்.
எக்ஸலென்ஷியாவின் நிறுவனர் மற்றும் உரிமையாளர் ஜோவானி ஸாப்பியா கூறுகையில், "வேட்டிகன் நகர ஆளுநரகத்துடன் மேற்கொள்ளப்பட்ட இந்த கூட்டு செயல்பாடு குறிப்பாக நகர்ப்புற போக்குவரத்து மற்றும் மக்கள் அதிகம் இயங்கும் அமைப்பு ரீதியான சூழல்களுக்கு முழுமையாகப் பொருந்தக்கூடிய மேம்பட்ட, நம்பகமான போக்குவரத்திற்கு ஒரு சிறந்த உதாரணமாக உள்ளது. இதை வெளிப்படுத்தும் வகையில் தனது பங்களிப்பை எக்ஸலென்ஷியா வழங்குவதற்கு இந்த நடவடிக்கை ஒரு அருமையான வாய்ப்பாக அமைந்திருக்கிறது" என்றார்.
டிவிஎஸ் ஐக்யூப்: பூஜ்ஜிய-உமிழ்வு போக்குவரத்தின் முன்னோடி
டிவிஎஸ் ஐக்யூப் அதனுடைய செளகரியமான, மன நிம்மதியுடன் பயணிக்க உதவும் இரைச்சல் இல்லாத அமைதியுடன் கூடிய செயல்திறன் மற்றும் நவீன தொழில்நுட்பத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இது வேட்டிகனின் வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் மக்கள் அதிகம் வந்துப் போகிற, சுற்றுச்சூழலுக்கேற்ற மிகப் பொருத்தமான இரு சக்கர வாகனமாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஈகோ மோடில் (Eco mode) 100 கி.மீ வரை செல்லும் திறனுடன், இது செளகரியம் மற்றும் மேம்பட்ட வசதியை அளிக்கும் போக்குவரத்து சாதனமாகும். டிஎஃப்டி (TFT) டிஸ்ப்ளே மற்றும் பிரத்தியேக செயலி மூலம் பயன்படுத்தக்கூடிய SmartXonnect அமைப்பால் உருவாக்கப்பட்ட இன்டலிஜென்ட் கனெக்ட்டிவிட்டி எனப்படும் அறிவார்ந்த இணைப்பு தொழில்நுட்ப வசதியையும் இது கொண்டுள்ளது.
மக்கள் நடமாட்டம் மற்றும் போக்குவரத்து அதிகமுள்ள நகர்ப்புற போக்குவரத்து மற்றும் குறுகிய தூரத்திலான பயணங்களை எளிதாக மேற்கொள்ளும் வகையில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட டிவிஎஸ் ஐக்யூப் இருசக்கர வாகனத்தில் இடம்பெற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்?
- வாகனம் ஓட்டுபவர்களுக்கு இதுவரையில்லாத மேம்பட்ட செளகரியம் மற்றும் வசதி (Driving comfort)
- அன்றாட பயணங்களுக்கு ஏற்ற வகையில் எளிதில் பயன்படுத்தும் நடைமுறை அம்சங்கள் (Practicality of use)
- அபாரமான செயல்திறனை வெளிப்படுத்தும் செயல்பாட்டு தொழில்நுட்பம் (Functional technology)
- கார்பன் உமிழ்வு மற்றும் இரைச்சல் இல்லாத செயல்பாடு (Total absence of emissions and noise)
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இந்தியாவில் நிறுவப்பட்டது. தற்போது 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் சர்வதேச அளவில் செயல்பட்டு வரும் இந்நிறுவனம், லட்சக்கணக்கான மக்களின் உண்மையான, அன்றாடத் தேவைகளுக்கு ஏற்ற நம்பகமான வாகனங்களின் ப்ராண்ட்டாக மக்களிடையே பெரும் அங்கீகாரம் பெற்றுள்ளது.
நாட்டின் கடைக்கோடிப் பகுதி வரை செல்லும் ’கடைசி மைல்" (last-mile) போக்குவரத்தில் சிறப்பு பங்குதாரரான எக்ஸலென்ஷியா, நம்பகமான, எளிதில் பயன்படுத்தக்கூடிய மற்றும் நகர்ப்புற போக்குவரத்திற்கான இருசக்கர வாகனம் என்ற நோக்கத்திற்குள் டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அதன் மிகச் சிறந்த வடிவத்தில் கொண்டு வருகிறது.

0 கருத்துகள்