இந்தியாவின் முன்னணி வங்கி சாரா நிதி நிறுவனங்களில் ஒன்றான எஸ்எம்எப்ஜி இந்தியா கிரெடிட் ஆனது, கால்நடை நலன் மற்றும் கிராமப்புற வாழ்வாதாரத்திற்கான தனது முதன்மைத் திட்டமான ‘பசு விகாஸ் தினம்’ நிகழ்வின் 8-வது எடிஷனை பிப்ரவரி 14, 2026 அன்று வெற்றிகரமாக நிறைவு செய்தது. ‘சர்வோத்தம் சேவா: பசு, பரிவார் அவுர் பிரகதி’ (மேலான சேவை: கால்நடை, குடும்பம் மற்றும் முன்னேற்றம்) என்ற தலைப்பில் அமைந்த இந்த முன்முயற்சி, கால்நடை ஆரோக்கியம், குடும்ப நலன் மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்தும். முழுமையான கிராமப்புற மேம்பாட்டிற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்புக்கு இந்நிகழ்வு ஒரு சான்று.
2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘பசு விகாஸ் தினம், கால்நடை உரிமையாளர்களுக்கு இலவச கால்நடை மருத்துவ சேவைகள் மற்றும் நிபுணர்களின் வழிகாட்டுதலை வழங்குவதன் மூலம் அவர்களின் அத்தியாவசிய சுகாதார தேவைகளை பூர்த்தி செய்கிறது. பல ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த முயற்சியானது, நாட்டின் மிகப்பெரிய ஒரு நாள் கால்நடை நலத்திட்டங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.எஸ்எம்எப்ஜி இந்தியா கிரெடிட் நிறுவனம் 1.55 லட்சத்திற்கும் அதிகமான மக்களின் வாழ்வில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் சுமார் 1.4 லட்சம் கால்நடைகளுக்கான சிகிச்சை மற்றும் 14,000-க்கும் மேற்பட்ட மக்களுக்கான சுகாதார ஆதரவு ஆகியவை அடங்கும்; இதன் மூலம் 30,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைந்துள்ளன. 16 மாநிலங்களில் உள்ள 510 எஸ்எம்எப்ஜி கிராமசக்தி கிளைகளின் வாயிலாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது, இது கிராமப்புற இந்தியாவில் இந்நிறுவனத்தின் வலுவான பிணைப்பை பறைசாற்றுகிறது.
தமிழ்நாட்டில், 68 இடங்களில் ‘பசு விகாஸ் தினம்’ நடத்தப்பட்டது. இதில் 21,000-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு அத்தியாவசிய சுகாதார சேவைகள் வழங்கப்பட்டதன் மூலம் 4,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைந்தன. ஒவ்வொரு முகாமிலும் உள்ளூர் கால்நடை மருத்துவர்கள் மூலம் இலவச கால்நடை பரிசோதனைகள், இலவச மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் விநியோகம், மற்றும் கறவை மாடுகளின் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான ஆலோசனைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டன.
எஸ்எம்எப்ஜி இந்தியா கிரெடிட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ரவி நாராயணன் கூறுகையில், "‘சர்வோத்தம் சேவா’ என்பது சேவையை மிக உயர்ந்த தரத்தில் வழங்குவதாகும் - எங்கே கருணையும் தாக்கமும் இணைகிறதோ, எங்கே நோக்கம் நிலையான மாற்றமாக மாறுகிறதோ அதுவே அச்சேவை. கிராமப்புற இந்தியாவில், கால்நடைகளின் ஆரோக்கியம், குடும்பங்களின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஆகியவை ஒன்றோடொன்று ஆழமாகப் பின்னிப் பிணைந்துள்ளன. கால்நடைகளைப் பராமரிப்பதன் மூலமும், வாழ்வாதாரங்களை வலுப்படுத்துவதன் மூலமும், சமூக நலனை மேம்படுத்துவதன் மூலமும் இந்தச் சூழலை வளர்ப்பதற்கான எங்கள் அர்ப்பணிப்பை ‘பசு விகாஸ் தினம்’ வெளிப்படுத்துகிறது. இந்த முன்முயற்சியின் மூலம், விவசாயக் குடும்பங்களுக்கு அதிகாரமளிக்கும் மற்றும் அடிமட்ட நிலையிலிருந்து அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கும் நிலையான முடிவுகளை உருவாக்குவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்,” என்றார்.
%20participating%20in%20a%20cattle-feeding%20activity%20at%20Pashu%20Vikas%20Day%20in%20Kanchipuram%20Chennai..jpeg)
0 கருத்துகள்