இந்தியாவின் முன்னணி வேளாண் வணிக நிறுவனங்களில் ஒன்றான கோத்ரேஜ் அக்ரோவெட் லிமிடெட் (Godrej Agrovet), நெல் பயிர்களுக்காக உருவாக்கப்பட்ட புதிய பூச்சிக்கொல்லியான 'டக்காய்' (TAKAI) ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. ISK ஜப்பான் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட சைக்லாப்ரின்™ தொழில்நுட்பத்தில் செயல்படும் இந்த 'டக்காய்', நெற்பயிரின் முக்கிய பூச்சிகளான தண்டுத் துளைப்பானுக்கு எதிராக செயல்படுகிறது மற்றும் இலைசுருட்டிப் புழுக்களை கட்டுப்படுத்தும் திறன் பெற்றது. நாற்று நடப்பட்ட 15-30 நாட்களுக்குப் பிறகு முதல் தடவையாகவும், மறுபடியுமாக 40-60 நாட்களுக்குப் பிறகு இரண்டாம் தடவையாகவும், 160 மில்லி என்ற ஒரு அளவில் தெளித்தால், நெற்பயிருக்கு ஒரு நீடித்த பாதுகாப்பை இது வழங்கும். சோயாபீன்ஸ், கொண்டைக்கடலை, கேரட், சர்க்கரை வள்ளி, கார மிளகாய், மக்காச்சோளம் போன்ற பயிர்களுக்கும் 'டக்காய்' பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்த அனுமதி கோரி இந்த நிறுவனம் முறைப்படி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
தண்டு துளைப்பான் கடுமையான தாக்கங்களின் போது 30% - 40% வரை விளைச்சல் இழப்பை ஏற்படுத்துகிறது, அதே நேரத்தில் இலைசுருட்டிப் பூச்சியின் தாக்கம் கடுமையான சூழ்நிலைகளில் 20% - 30% விளைச்சல் இழப்பை ஏற்படுத்தும். பெரும்பாலும் இவற்றை கண்டறிந்து சரியான நேரத்தில் தடுப்பு நடவடிக்கை எடுப்பது கடினமாக உள்ள அறுவடை காலத்தின் தொடக்க மற்றும் நடு நிலைகளில் தாக்குகின்றன. எனவே, 150.18 மில்லியன் டன்கள் உற்பத்தியுடன் இந்தியா உலகின் மிகப்பெரிய நெல் உற்பத்தி நாடாக இருப்பினும், அதன் ஹெக்டேருக்கு சுமார் 2.9 டன் எனும் விளைச்சல் உலகின் சிறந்த விளைச்சலான ஹெக்டேருக்கு 5 டன்களுடன் ஒப்பிடும்போது கணிசமாக குறைவாகவே உள்ளது.
கோத்ரெஜ் அக்ரோவெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சுனில் கடாரியா கூறுகையில், "செயல்திறன் மிக்க பூச்சி கட்டுப்படுத்தும் மேலாண்மையே இந்திய நெல் விவசாயியின் வெற்றியை தீர்மானிக்கிறது. டக்காய் மூலம், நெல் விவசாயிகளுக்கு விரைவான கட்டுப்பாட்டை வழங்கும் மற்றும் நீண்ட காலத்திற்குப் பயனுள்ளதாக இருக்கும் ஒரு தீர்வை வழங்குவதன் மூலம், பூச்சித் தாக்குதல்களிலிருந்து அவர்களின் பயிர்களைப் பாதுகாக்க நாங்கள் நோக்கம் கொண்டுள்ளோம். இதன்மூலம் பயிர்களின் ஆரோக்கியம் மேம்படும்.” என்று கூறினார்.
“கோத்ரேஜ் அக்ரோவெட் நிறுவனத்தில், நமது விவசாயிகள் எதிர்கொள்ளும் சுற்றுச்சூழல் மற்றும் சந்தை சவால்களை நிவர்த்தி செய்யும் பயிர் பாதுகாப்புத் தீர்வுகளை வழங்குவதே எங்கள் முயற்சியாகும். எங்கள் ஆராய்ச்சி-நிபுணத்துவம் மற்றும் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும் மற்றும் விவசாய குடும்பங்களை உயர்த்துகிற நல்லா இருக்கு வலுவான நிலப்பரப்பு அணுகல் ஆகியவற்றைப் பயன்படுத்தி முக்கிய பயிர்களில் நமது தொகுப்பை வலுப்படுத்தும் எங்கள் உத்தியுடன் இன்றைய டக்காய் இன் அறிமுகம் ஒத்திசைகிறது. ,” என்று அவர் கூடுதலாகக் கூறினார்.
நெல் காரீஃப், ரபி மற்றும் கோடைப் பருவங்களில் பயிரிடப்படும் ஒரு பல பருவப் பயிர் என்பதால், வெப்பமான, ஈரப்பதமான மற்றும் நீர் தேங்கியுள்ள சூழ்நிலைகளில் பயிரிடப்படுகிறது. இது ஆண்டு முழுவதும் பூச்சித் தாக்குதல்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்குகிறது. ஆரம்ப முக்கியமான கட்டத்தில், அதாவது நடப்பட்டு 15-30 நாட்களுக்குப் பிறகு (DAT) தாவர வளர்ச்சிக் கட்டத்தில், தண்டு துளைப்பான் தாவரத்தைச் சேதப்படுத்துகிறது, மேலும் விவசாயிகளுக்கு ஆரம்பத்தில் கண்டறிவதை கடினமாக்குகிறது. பின்னர் 40-60 DAT-ல் இனப்பெருக்க கட்டத்தில், தண்டு துளைப்பான் மற்றும் இலை இலைசுருட்டிப் பூச்சி ஆகிய இரண்டும் தாவரத்தைத் தாக்குகின்றன. இலை சுருட்டிப் பூச்சி இலைகளை மடித்து இலைத்
திசுக்களை உண்ணுகிறது, இதனால் தாவரத்தின் ஒளிச்சேர்க்கைப் பரப்பும், அதனால் பயிர் வளர்ச்சியையும் குறைக்கிறது. இந்த கட்டங்களில்தான், பயிர் 15-30 நாட்கள் பருவமடையும் போதும், மீண்டும் 40-60 DAT-ல், TAKAI-யை 160 மில்லி அளவில் பயன்படுத்த வேண்டும்.
டக்காய் இன் அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்த கோத்ரெஜ் அக்ரோவெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி - பயிர்ப் பாதுகாப்பு வணிகம், என்.கே. ராஜவேலு கூறுகையில், "நாங்கள் அறிமுகத்திற்கு முன் நடத்திய நெல் விவசாயிகளுக்கான கணக்கெடுப்பில், 77% விவசாயிகள் விரைவான பூச்சிக் கட்டுப்பாடு, நீடித்திருக்கும் விளைவுகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பயிர் ஆரோக்கியம் ஆகியவற்றை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுவது தெரியவந்தது. எனவே, ISK ஜப்பான் நிறுவனத்துடனான கூட்டாண்மையின் மூலம், இந்திய விவசாயிகளுக்காக டக்காய் ஐ வெளியிடுகிறோம். சைக்லாப்ரின்™ தொழில்நுட்பம் மூலம் வலுவூட்டப்பட்ட இந்த தயாரிப்பு, பூச்சிகள் உண்பதை விரைவாக நிறுத்துவதோடு நீண்ட காலத்திற்கு நிலையான பூச்சிக் கட்டுப்பாட்டையும் வழங்குகிறது. இந்த அணுகுமுறை பயிர்களை பலப்படுத்துகிறது, விவசாயிகள் உள்ளீட்டுச் செலவுகளை உகந்ததாக்குகிறது மேலும் நிலையான மற்றும் உயர்தர விளைச்சலைப் பெறவும் உதவுகிறது. சோளம், மிளகாய், முட்டைக்கோஸ், சோயாபீன், கொண்டைக்கடலை மற்றும் கரும்பு போன்ற பயிர்களுக்கும் விரைவில் லேபிள் அனுமதி கிடைக்கவுள்ள நிலையில், தொடர்ந்து மாறிவரும் விவசாய நிலைமைகளில், உற்பத்தித்திறனைப் பலப்படுத்துவதிலும் விவசாயக் குடும்பங்களை ஆதரிப்பதிலும் டக்காய் ஒரு அர்த்தமுள்ள பங்கை வகிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்."என்றார்.
இன்று டக்காய் வெளியீடு மற்றும் கடந்த ஆண்டு சோளக் களைக்கொல்லி அஷிடக்கா ஆகியவற்றுடன், கோத்ரேஜ் அக்ரோவெட் நிறுவனம், புதுமை மற்றும் விவசாயி- வழிநடத்தப்பட்ட தயாரிப்பு மேம்பாடு ஆகியவற்றின் மூலம் ஒரு அதிக உற்பத்தித்திறன் கொண்ட, நெகிழ்வுத்திறன் மிக்க மற்றும் நிலையான விவசாய சூழ்நிலைமண்டலத்தை உருவாக்குவதில் தனது உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது.

0 கருத்துகள்