மதுரை மக்களுக்கு இசை, நடனம், நகைச்சுவை என மூன்று கலை விருந்துகளை ஒரே மேடையில் நேரடியாக அனுபவிக்கும் வகையில் பிரமாண்ட கலை விழா நடைபெறுகிறது.
மாமதுரையர் நிறுவனர் ஜே.ஜே.முத்து, அகில உலக தலைவர் முனைவர் ஜி.திருமுருகன், பொதுச்செயலாளர் சம்பத் யோகி, பொருளாளர் பி.சுப்பிரமணியன், இம்ப்ரெஸ் மீடியா ஒருங்கிணைப்பாளர் பூவரசன், அட்பஜார் மோனிசேகர் ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:
மதுரை மக்களுக்கு இசை, நடனம், நகைச்சுவை என மூன்று கலை விருந்துகளை ஒரே மேடையில் நேரடியாக அனுபவிக்கும் அரிய வாய்ப்பு கிடைக்க உள்ளது. வரும் பிப்ரவரி 14, சனிக்கிழமை மாலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை, மதுரை ஒத்தகடை வேலம்மாள் கிரவுண்டில் இந்த பிரமாண்ட கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
டிக்கெட் புக்கிங்கிற்கு 63811 86646, 81227 91697 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
மதுரை மற்றும் மதுரை மக்களின் வளர்ச்சியில் தொடர்ந்து பங்காற்றி வரும் மாமதுரையர் அமைப்பு மற்றும் இம்ப்ரஸ் பிலிம்ஸ் ஈவென்ட்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சியில் இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் பாடல்கள் மட்டுமே இசைக்க சிறப்பு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
“முத்த மழை” புகழ் பாடகி அமினா பங்கேற்று பாடல்களை வழங்க உள்ளார். மேலும், மதுரையில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு நடிகை ஓவியா மேடை ஏறி தனது நடனத்தால் ரசிகர்களை உற்சாகப்படுத்த உள்ளார்.
நகைச்சுவை ரசிகர்களுக்காக கேபிஒய் பாலா மற்றும் நடிகர் புகழ் இணைந்து கலக்கலான காமெடி நிகழ்ச்சியை வழங்க உள்ளனர். இவர்கள் இருவரும் ஒரே மேடையில் காமெடி ஷோ நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
இதோடு நடிகைகள் தீபா, மைனா நந்தினி உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ஆடல், பாடல், கலை நிகழ்ச்சிகளை வழங்க உள்ளனர்.
இதுவரை தனித்தனியாக நிகழ்ச்சிகள் நடத்தி வந்த பல கலைஞர்கள், இம்முறை ஒரே மேடையில் ஒன்று சேர்ந்து மக்களை மகிழ்விக்க உள்ளனர் இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சமாகும்.
நிகழ்ச்சிக்கான டிக்கெட் விலை ரூ. 500, 1000, 5000 என நிர்ணயிக்கப் பட்டுள்ளது..மொத்த எண்ணிக்கையில் வாங்குபவர்களுக்கு சிறப்பு தள்ளுபடியும் உண்டு
எப்போதும் பரபரப்பான வாழ்க்கையில் இருந்து சிறிது நேரம் ஒதுக்கி, இசை, நடனம், நகைச்சுவை நிறைந்த இந்த புத்துணர்ச்சி மாலையை தவறவிட வேண்டாம் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
மேலும் விபரங்கள் மற்றும் டிக்கெட் புக்கிங்கிற்கு 63811 86646, 81227 91697 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
Fot TICKET BOOKING : https://in.bookmyshow.com/events/valentines-special/ET00482925

0 கருத்துகள்