அமேசான், 2015 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில், அமேசான் குளோபல் செல்லிங் திட்டம் உட்பட, 2 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய ஏற்றுமதியாளர்கள் இணைந்து மொத்தமாக 20 பில்லியன் டாலர் மதிப்பிலான இ-காமர்ஸ் ஏற்றுமதியை எட்ட உதவியுள்ளதாக அறிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டில், 2025க்குள் இந்தியாவிலிருந்து 10 பில்லியன் டாலர் மதிப்பிலான மொத்த இ-காமர்ஸ் ஏற்றுமதியை எட்டும் என அமேசான் உறுதியளித்திருந்தது. பின்னர், அதே காலக்கெடுவில் அந்த இலக்கு 20 பில்லியன் டாலர்கனாக உயர்த்தப்பட்டது. இந்த உறுதியை அமேசான் திட்டமிட்ட காலத்திற்கு முன்னரே நிறைவேற்றியுள்ளது. 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அமேசானின் முதன்மை இ-காமர்ஸ் ஏற்றுமதி திட்டமான அமேசான் குளோபல் செல்லிங், உலகம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு, 75 கோடிக்கும் அதிகமான ‘மேக் இன் இந்தியா’ தயாரிப்புகளை ஏற்றுமதியாளர்கள் மொத்தமாக விற்பனை செய்ய உதவியுள்ளது. இந்த திட்டத்தில் உள்ள மொத்த விற்பனையாளர்களின் எண்ணிக்கை கடந்த ஒரு ஆண்டில் 33%-க்கும் அதிகமாக வளர்ச்சியடைந்துள்ளது.
தற்போது, அமேசான் குளோபல் செல்லிங் திட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 7,000-க்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்கள் இணைந்துள்ளனர். இந்த திட்டம் நாடு முழுவதும் வலுவான வரவேற்பைப் பெற்றுவருகிறது; தற்போது இந்தியாவின் 200-க்கும் மேற்பட்ட நகரங்களைச் சேர்ந்த விற்பனையாளர்கள் இதில் இணைந்துள்ளனர். இந்த திட்டத்தின் மூலம், மாநிலத்தின் சிறிய நகரங்களான கரூரிலிருந்து ஏற்றுமதியாளர்கள் 2024 ஆம் ஆண்டில் 147 மில்லியன் டாலர்களைக் கடந்த விற்பனையை அடைந்துள்ளனர்.
அதேபோல் ஈரோடிலிருந்து ஏற்றுமதியாளர்கள் 34 மில்லியன் டாலர் கடந்த விற்பனையை பதிவு செய்துள்ளனர். மேலும், அமேசான் குளோபல் செலிங், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவூதி அரேபியா, கனடா, மெக்சிகோ, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 18-க்கும் மேற்பட்ட அமேசான் உலக சந்தைகளில், நூற்றுக்கணக்கான மில்லியன் வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்வதன் மூலம், விற்பனையாளர்கள் உலகளாவிய பிராண்டுகளை உருவாக்க உதவுகிறது.
அமேசான் குளோபல் செல்லிங் இந்தியாவின் தலைவர் ஸ்ரீநிதி கல்வபுடி கூறுகையில், இந்த மைல்கல், அமேசான் 2025க்காக நிர்ணயித்த இலக்கு, ஆனால் இது முன்னரே எட்டப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சி, இந்திய தொழில்களின் முனைப்பையும், உலக வர்த்தகத்தில் இ-காமர்ஸ் ஏற்றுமதியின் அதிகரித்து வரும் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது. இந்த வெற்றியை மேலும் மேம்படுத்தி, 2030க்குள் எங்களின் 80 பில்லியன் டாலர் இலக்கை நோக்கி முன்னேறும்போது, தொழில்நுட்ப புதுமைகள், திறன் மேம்பாடு மற்றும் சூழலமைப்பு கூட்டாண்மைகள் மூலம் இ-காமர்ஸ் ஏற்றுமதிகளை எளிமைப்படுத்துவதில் நாம் கவனம் செலுத்தி வருகிறோம். மேலும், 2030க்குள் 200 முதல் 300 பில்லியன் டாலர் என்ற இந்திய அரசின் இலக்குக்கு இணங்க, இந்தியாவின் இ-காமர்ஸ் ஏற்றுமதி வளர்ச்சியை முன்னெடுக்க எங்கள் உறுதிப்பாட்டை தொடர்ந்தும் காத்து வருகிறோம்” என்றார்.

0 கருத்துகள்