தென்னிந்தியாவில் முதல் ஷோரூமாக திருச்சியில் கேஸ் கன்ஸ்ட்ரக்‌ஷன் எக்யூப்மெண்ட் கடை திறப்பு

தென் இந்தியாவுக்கான தனது நீண்டகால அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், சிஎன்எச் நிறுவனத்தின் ஒரு பிராண்டான கேஸ் கன்ஸ்ட்ரக்‌ஷன் எக்யூப்மெண்ட், திருச்சிராப்பள்ளியில் தனது நிறுவனத்திற்கு சொந்தமான மற்றும் நிறுவனமே இயக்கும் முதல் பிராண்ட் ஸ்டோரை திறந்து வைத்துள்ளது. இதன் மூலம், அந்தப் பகுதியில் கேஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ முன்னிலையை குறிப்பிடத்தக்க அளவில் விரிவுபடுத்தியுள்ளது. இந்த புதிய வசதி, தமிழ்நாடு மற்றும் அண்டை சந்தைகளில் கேஸ் நிறுவனத்தின் இருப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ஒரு முக்கிய மூலோபாய மையமாக செயல்படும்.

திருச்சி, திண்டுக்கல் சாலையில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள இந்த பிராண்ட்ஷாப், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட உயர்ந்த வளர்ச்சி வாய்ப்புள்ள கட்டுமான பகுதிகளுக்கும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் அருகாமையில் அமைந்துள்ளது. இந்தியாவின் உட்கட்டமைப்பு வளர்ச்சி வழித்தடங்களில் நம்பகமான உபகரணங்கள் மற்றும் விரைவான சேவைகளுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், தொழில்துறை தேவைகள் தொடர்ந்து மாறிக்கொண்டிருப்பதை கருத்தில் கொண்டு, கேஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர் ஈடுபாட்டு மாடலை விரிவுபடுத்தி வருகிறது.

இந்த வளர்ச்சியை குறித்து கருத்து தெரிவித்த கேஸ் கன்ஸ்ட்ரக்‌ஷன் எக்யூப்மெண்ட் நிறுவனத்தின் கட்டுமான பிரிவு துணைத் தலைவர் எம்ரே கராஸ்லி,“ இந்தியா கேஸ் நிறுவனத்தின் உலகளாவிய அளவில் மிக முக்கியமான மூலோபாய சந்தைகளில் ஒன்றாக உள்ளது. இது உள்கட்டமைப்பு வளர்ச்சியின் பரந்த அளவுக்காக மட்டுமல்லாமல், எங்கள் உலகளாவிய செயல்பாடுகளுக்கு இந்தியா வழங்கும் ஆழமான திறன் காரணமாகவும் முக்கிய சந்தையாக உள்ளது. புதிய திருச்சி கோகோபிராண்ட்ஷாப், இந்தப் பகுதியில் உள்ள வாடிக்கையாளர்களுடன் எங்களின் நெருக்கத்தை மேலும் வலுப்படுத்துவதோடு, கேஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளில் இந்தியாவின் முக்கிய பங்களிப்பையும் உறுதிப்படுத்துகிறது” என்றார்.

சுமார் 5,300 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த வசதியில், முழுமையாக அமைக்கப்பட்ட இரண்டு சேவை பேக்கள், தனிப்பட்ட வொர்க் ஷாப் மற்றும் சுமார் 700 வகையான உதிரிப்பாகங்கள் கொண்ட வேர்‌ஹவுஸ் உள்ளன. இந்த புதிய கடைக்கு பயிற்சி பெற்ற சேவை பொறியாளர்கள், சேவை வாகனங்கள் மற்றும் மேம்பட்ட கண்டறிதல் (டயக்னோஸ்டிக்) கருவிகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளன.

திருச்சிராப்பள்ளியில் உள்ள பிராண்ட்ஸ்டோர், ஸ்டேஜ் 5 விதிகளுக்கு ஏற்ப செயல்படும் இயந்திரங்களை அறிமுகப்படுத்துகிறது. சுற்றியுள்ள மாவட்டங்களோடு மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுக்க உள்ள வாடிக்கையாளர்களுக்குப் பொதுவான உதிரிப்பாகங்கள் ஆதரவையும் வழங்குகிறது. மேலும், திருநெல்வேலி கிளை கூடுதல் உதிரிப்பாக ஆதரவைக் கொண்டு, அந்த பகுதியில் சேவை அணுகலை நிறைவு செய்து, வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு விரைவான பதிலளிப்பை உறுதிப்படுத்துகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu