இந்தியாவின் மிகப்பெரிய வீட்டுமனைத் திட்ட மேம்பாட்டு நிறுவனமாக முன்னணி வகிக்கும் ஜி ஸ்கொயர் குரூப், [G Square Group], வேலம்மாள் மருத்துவக் கல்லூரி, மதுரையில் தனது புதிய ப்ரீமியம் வில்லா மனைத் திட்டமான 'ஜி ஸ்கொயர் வைகை க்ரெஸ்ட்' (G Square Vaigai Crest) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
மதுரையில் ஜி ஸ்கொயர் குரூப்பின் முதல் திட்டத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து இந்த புதிய 'ஜி ஸ்கொயர் வைகை க்ரெஸ்ட்' ப்ரீமியம் வில்லா மனைத்த்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய திட்டத்தில், "ரோட்டுக்கு காசு இல்ல"(No cost for road) என்ற தனித்துவமான சலுகைக்கு கிடைத்த ஏகோபித்த வரவேற்பினால் ஈர்க்கப்பட்டு, வெறும் 72 மணி நேரத்திற்குள் 533 மனைகள் மின்னல் வேகத்தில் விற்றுத் தீர்ந்தன. மதுரை மக்களுக்கு அதே சிறப்பு அம்சங்களுடன், தற்போது இந்த புதிய ப்ரீமியம் வில்லா மனைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலையில், வேலம்மாள் மருத்துவக் கல்லூரிக்கு அடுத்து அமைந்துள்ள இந்தத் திட்டம், சிறந்த போக்குவரத்து வசதிகளையும், மேம்பட்ட கட்டமைப்பு வசதிகளையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
'ஜி ஸ்கொயர் வைகை க்ரெஸ்ட்' ப்ரீமியம் வில்லா மனைத்திட்டத்தின் சிறப்பம்சங்கள்: மதுரை மாநகரத்துடனான சிறந்த போக்குவரத்து வசதிகள், எதிர்காலத்திற்கு ஏற்ற அதிநவீன உள்கட்டமைப்பு மற்றும் நீண்ட கால முதலீட்டு மதிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய வில்லா மனைத்திட்டமாக, மதுரையின் மிகவேகமாக வளர்ந்து வரும் குடியிருப்புப் பகுதியில் இது அமைந்துள்ளது.
பரப்பளவு: 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இத்திட்டத்தில் 234 ப்ரீமியம் வில்லா மனைகள் உள்ளன.
வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ற வகையில் மனை அளவு: 1.48 சென்ட் முதல் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ற வகையில் மனைகள் கிடைக்கின்றன.
கவர்ச்சிகரமான விலைச்சலுகை: மதுரை பிராந்தியத்திலேயே மிகவும் கவர்ச்சிகரமான விலையில், முதலில் மேற்கொள்ளப்படும் 25 முன்பதிவுகளுக்கு மட்டும் சென்ட் ஒன்றுக்கு ₹9.9 லட்சம் என்ற அசத்தலான சலுகை விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை: இத்திட்டம் RERA மற்றும் DTCP அங்கீகாரம் பெற்றது. சாலைகளுக்குக் கூடுதல் கட்டணம் கிடையாது மற்றும் 100% பணமில்லா பரிவர்த்தனை (Cashless transactions) மூலம் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் நம்பிக்கையுடன் தங்களது கனவு இல்லங்களுக்கான மனைகளை வாங்க இத்திட்டம் உதவுகிறது.
மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலையில், வேலம்மாள் மருத்துவக் கல்லூரிக்கு அடுத்து மிக அருகில் அமைந்திருக்கும் 'ஜி ஸ்கொயர் வைகை க்ரெஸ்ட்' (G Square Vaigai Crest) அறிமுகம் குறித்து ஜி ஸ்கொயர் குரூப் நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான திரு. பாலா ராமஜெயம் [Mr. Bala Ramajayam, Founder & Managing Director, G Square Group] கூறுகையில்: "மதுரையில் குடியிருப்புகளுக்கான தேவை மிகத் துரிதமாக அதிகரித்து வருகிறது. இருப்பினும், இங்குள்ள மக்களுக்கு ப்ரீமிய தரத்திலான மனைத்திட்டங்கள் நியாயமான விலையில் கிடைப்பது பெரும் சவாலாகவே இருந்து வருகிறது ஜி ஸ்கொயர் குழுமத்தின் புதிய. 'ஜி ஸ்கொயர் வைகை க்ரெஸ்ட்' மூலம், மிக வேகமாக வளர்ச்சிக் கண்டு வரும் பகுதியில் ப்ரீமியம் வில்லா வாழ்க்கை முறையை மக்கள் எளிதாகப் பெற வழிவகை செய்துள்ளோம். மற்ற வில்லா மனைத்திட்டங்களை விடக் குறைந்த விலையில், சட்டபூர்வமான வெளிப்படைத்தன்மை மற்றும் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புடன் இத்திட்டத்தை வழங்குகிறோம்." என்றார்.
அதிநவீன வசதிகள் மற்றும் உயர்தர சேவைகள்:
- ஜி ஸ்கொயர் வைகை க்ரெஸ்ட் திட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட வாழ்க்கை முறை வசதிகள் உள்ளன:
- ஒரு வருட இலவசப் பராமரிப்பு.
- தரமான தார் சாலைகள் மற்றும் சூரியசக்தி தெருவிளக்குகள்.
- CCTV கண்காணிப்பு, பூம் பேரியர் நுழைவாயில் மற்றும் 24x7 பாதுகாப்பு.
- நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட பசுமையான பூங்காக்கள்.
- பட்டா முதல் கிரகப்பிரவேசம் வரை வாடிக்கையாளர்களுக்கு அனைத்து அம்சஙக்ளிலும் உதவும் ஜி ஸ்கொயரின் பிரத்தியேக “ஜி ஸ்கொயர் பில்ட் அசிஸ்ட்” (G Square Build Assist) சேவை.
மதுரையில் வேகமாக வளர்ச்சிக் கண்டு வரும் இடத்தில் அமைந்திருப்பது, எந்தவிதமான ஒளிவு மறைவும் இல்லாத வெளிப்படையான விலை மற்றும் நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய 'ஜி ஸ்கொயர் வைகை க்ரெஸ்ட்', மதுரையில் ப்ரீமியம் வில்லா வாழ்க்கை மற்றும் நீண்ட கால முதலீட்டை விரும்புவோருக்கு மிகச்சிறந்த தேர்வாக அமையும்.

0 கருத்துகள்