இரு மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியில் உலகளாவிய முன்னணி நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் [TVS Motor Company], மிக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட TVS Apache RTX மூலம் சாகச மோட்டார் சைக்கிள் சவாரியின் எதிர்காலத்தை மறுவரையறுக்கிறது. வேகத்தின் சிலிர்ப்பையும், ஒருவர் தன்னைப்பற்றிய சுய தேடுதலுக்காக செல்லும் நீண்ட தூர பயண மனப்பான்மையையும் இணைக்கும் ஒரு புதிய வாகனப் பிரிவை இது உருவாக்குகிறது.
பல ஆண்டுகளாக தொடரும் பந்தய சாதனைகள் மற்றும் உலகம் முழுவதும் 6 மில்லியனுக்கும் அதிகமான வாகன ப்ரியர்களால் அதிகம் நம்பப்படும் TVS Apache பிராண்டின் பாரம்பரியத்தை அடித்தளமாகக் கொண்ட TVS Apache RTX, சாகசப் பயணத்திற்கான செயல்திறன், வேகத்தையும் விவேகத்தையும் கையாளும் துல்லியம் மற்றும் சிலிர்க்க வைக்கும் பந்தய குணாதிசயம் ஆகியவற்றில் பிராண்டின் முதன்மை தயாரிப்பாக முன்னெடுத்துச் செல்கிறது
TVS RT-XD4 என்ஜின், பல ஆண்டுகளாக தொடரும் பந்தய கள அனுபவம் மற்றும் நீண்ட தூர பயண அனுபவத்துடன் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டிருக்கும் புத்தம் புதிய அடுத்த தலைமுறை என்ஜின் ஆகும். இந்த இயந்திர தளத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கும் TVS Apache RTX மாடல், பிராண்டின் பந்தய மரபையும், சாகசப் பயணத்தையும், சுய தேடலுக்கான நீண்ட தூர பயணத்தையும் ஒருங்கிணைக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. பந்தயக்கள அனுபவத்தால் மேம்படுத்தப்பட்ட செயல்திறனை, நீண்ட தூர சவாரி செய்வதற்கான செளகரியத்துடன் இணைக்கும் இந்த மாடல், நவீன சாகச மோட்டார் சைக்கிள் பயணத்தை மறுவரையறை செய்கிறது.
சாகசமான பயணத்தை விரும்புபவர்கள், நண்பர்களுடன் நீண்ட தூரம் இரு சக்கர வாகன சுற்றுலா செல்லும் ஆர்வலர்களுக்காகவே இந்த மாடல் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ற வகையில் இந்த மாடல், சிலிர்ப்பூட்டும் செயல்திறன், ஒப்பிடமுடியாத இயந்திர கட்டுப்பாடு மற்றும் துல்லியமான பொறியியல் தொழில்நுட்பம் ஆகியவற்றை ஒருங்கி இணைக்கிறது. பந்தயக் தளத்தின் டிஎன்ஏ மற்றும் ஆய்வு-சார்ந்த பொறியியல் ஆகிய இரு அம்சங்களின் கலவையானது, சாகச சுற்றுலா பயணிகளுக்கு ஒரு புதிய அளவுகோலை உருவாக்கி இருக்கிறது. பந்தயக் களத்தில் இருக்கும் துல்லியத்தையும், அன்றாட பயணத்திற்கான செளகரியத்தையும் ஒரே தளத்தில் அறிமுகப்படுத்துகிறது TVS Apache RTX.
TVS Apache RTX 299.1 சிசி சிங்கிள்-சிலிண்டர், லிக்விட்-கூல்ட், 4-ஸ்ட்ரோக் டி.ஓ.ஹெச்.சி என்ஜின் [299.1 cc single-cylinder, liquid-cooled, 4-stroke DOHC engine] மூலம் இயக்கப்படுகிறது, இது 9,000 ஆர்பிஎம்-ல் 36 பிஎஸ் பவரையும் [36 PS of power at 9,000 rpm], 7,000 ஆர்பிஎம்-ல் 28.5 என்எம் டார்க்கையும் [28.5 Nm of torque at 7,000 rpm] அளிக்கிறது. இது 6-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் [6-speed manual transmission,], ஃப்யூயல் இன்ஜெக்ஷன் [fuel injection], அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் [assist and slipper clutch] ஸ்டீல் ட்ரெல்லிஸ் பிரேமுடன் இணைக்கப்பட்டு மிகவும் உறுதியான மோனோ-வால்யூம் பாடி டிசைனுடன் [assertive mono-volume body design] வருகிறது.
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஎக்ஸ்ஸின் ஒவ்வொரு அம்சமும் - என்ஜின், சவாரி முறைகள், மின்னணுவியல் அம்சங்கள், ஃப்ரேம், சஸ்பென்ஷன் மற்றும் அலங்காரத்திற்கான துணைக்கருவிகள் [engine, ride modes, electronics, frame and suspension, accessories] மூலம் அதன் உரிமையாளருக்கு நேரடியான நன்மைகளை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளன. அதிகரித்த பாதுகாப்பு, உயர் செயல்திறன், மேம்பட்ட செளகரியம் மற்றும் தடையற்ற ஆன்-ரோட் மற்றும் ஆஃப்-ரோட் அனுபவத்திற்கான ஸ்மார்ட் இணைப்புத் தொழில்நுட்ப வசதிகள் - மேடுபள்ளங்கள் இல்லாத நெடுஞ்சாலைகள் முதல் கொண்டை ஊசி மலை வளைவுகள் மற்றும் கட்டுப்பாடற்ற பாதைகள் வரை ஒவ்வொரு சவாரியிலும் அட்ரினலின் உச்சத்தை அடையும் அனுபவத்தை அளிக்கிறது. இதன் அறிமுக விலையாக 1,99,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
TVS Apache RTX அறிமுக விழாவில் பேசிய டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் இரு சக்கர வாகன வணிகப் பிரிவின் தலைவர் திரு. கௌரவ் குப்தா [Gaurav Gupta, President - 2W India Business], ‘’ "டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தில், நாளுக்கு நாள அதிகரித்து வரும் வாடிக்கையாளர்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளை நாங்கள் தொடர்ந்து புரிந்துகொள்கிறோம். மேலும் அவற்றை மேம்பட்டதாக மறுவரையறை செய்கிறோம். இவ்வாகன தொழில்துறையில் முதன் முதலாக அறிமுகம் செய்யும் பல கண்டுபிடிப்புகளில் நாங்கள் முன்னணியில் இருக்கிறோம். எங்களது முயற்சிகள் அனைத்தும் எல்லோராலும் எளிதில் பெறமுடியுமென்ற ஆர்வத்தை அடையக்கூடியதாக மாற்றுவதோடு, புதிய வாகன ப்ரியர்களை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றன. மோட்டார் சைக்கிள் ஓட்டுவதில் வாகனத்தின் செயல்திறனை மறுவரையறை செய்வதன் மூலம் TVS Apache இருபது ஆண்டுகளாக இதைச் செயல்படுத்தி வருகிறது. இதனால் இப்போது ஆறு மில்லியனுக்கும் அதிகமான ரைடர்களைக் கொண்ட உலகளாவிய சமூகமாக TVS Apache சமூகம் விரிவடைந்து இருக்கிறது. TVS Apache RTX இந்த வெற்றிப் பயணத்தைத் தொடரும் என்றும், பெரும் எண்ணிக்கையில் சாகசப் பயணம் செல்லும் பிரிவில் புது உற்சாகத்தையும் புதிய உத்வேகத்தையும் உருவாக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்." என்றார்.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ப்ரீமியம் பிரிவின் தலைமை வணிக அதிகாரி, திரு. விமல் சம்ப்ளி [Vimal Sumbly, Head Business - Premium, TVS Motor Company], புதிய மாடலை அறிமுகப்படுத்தும் போது பேசுகையில், ‘’TVS Apache, அதன் வடிவமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் செயல்திறன் உள்ளிட்ட அம்சங்களில் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. உலகெங்கிலும் உள்ள 6 மில்லியனுக்கும் அதிகமான ரைடர்களின் நம்பிக்கை மற்றும் ஆர்வத்தால், இருபது ஆண்டுகளாக இவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. புத்தம் புதிய TVS Apache RTX மூலம், இந்த மரபை சாகச சுற்றுலா உலகத்திற்கு கொண்டு செல்லும் ஒரு புதிய வகை மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். எங்களுடைய தனித்துவமிக்க பந்தய டிஎன்ஏவுடன் வடிவமைக்கப்பட்டு, புதிய எல்லைகளைக் கண்டறியும் வகையிலான பொறியியல் நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட TVS Apache RTX, அப்பாச்சி பிராண்டின் அச்சமற்ற உணர்வை கொண்டிருக்கிறது. இந்த புதிய வாகனம் எங்களுடைய பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வதோடு மட்டுமல்லாமல், மிக வேகமான, சிலிர்ப்பூட்டும் சாகச மோட்டார் சைக்கிள் ஒட்டும் அனுபவத்தை வழங்கும் இந்த புதிய பிரிவிலும் ஆதிக்கம் செலுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த தருணம் எங்கள் உலகளாவிய அப்பாச்சி சமூகத்திற்கு உரியது. சொந்தமானது, அவர்களின் இடைவிடாத ஆர்வமே நாங்கள் உருவாக்கும் அனைத்திற்கும் உத்வேகமளிக்கிறது’’ என்றார்.
TVS Apache RTX-ன் முக்கிய தொழில்நுட்ப விவரங்கள்
- சேஸ் & சஸ்பென்ஷன், அனைத்து வகை நிலபரப்புகளிலும் பயணிப்பதற்கான பொறியியல் தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- நம்பிக்கையளிக்கும் எஃகு டிரெல்லிஸ் ஃப்ரேம் [Steel Trellis Frame]
- வாகன கட்டமைப்பை வலுவாக்குவதோடு, எந்த சூழ்நிலையிலும் சிறப்பான முறையில் இயக்குவதற்கும் உதவுகிறது.
- நம்பிக்கையுடன் வாகனம் ஓட்டுவதை உறுதிப்படுத்தும் வகையில் இருக்கை குறைவான உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- மிகவும் வலுவான ஆனால் எடை குறைந்த இலகுரக, பவர்-டு-வெயிட் விகிதத்திலான வடிவமைப்பு குறைந்த எடையிலும் அபாரமான செயல்திறனை அளிக்கிறது.
- எந்தவிதமான நிலப்பரப்பாக இருந்தாலும், வாகனத்தை கையாளுவதை எளிதாக்குகிறது.
- WP-ன் நீண்ட தூர பயணத்தை செளகரியமாக்கும் லாங் ட்ராவல் சஸ்பென்ஷன் [முன்பக்கம்: இன்வெர்டட் கார்ட்ரிட்ஜ் ஃபோர்க் [Long-Travel Suspension from WP (Front: Inverted Cartridge Fork)]
- மிகத்துல்லியமான ஃபோர்க் சீரமைப்புடன் அதிக உறுதியான கட்டமைப்பு
- லாங்கர் ஸ்ட்ரோக்,.வாகனத்தின் ஆற்றல் முழுமையாக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்கிறது.
- செளகரியத்தை மேம்படுத்துவதோடு வாகனம் ஓட்டும்போது கட்டுப்படுத்தவதை விரைவாக மேற்கொள்ள உதவுகிறது.
- மேடு பள்ளங்களுள்ள நிலப்பரப்புகளில் கூட வேகமான, பாதுகாப்பான பயணங்களை உறுதி செய்கிறது.
- நீண்ட தூர பயணத்தை களைப்பு இல்லாமல் மாற்றும் லாங் ட்ராவல் சஸ்பென்ஷன் [ பின்பக்கம்: ஃப்ளோட்டிங் பிஸ்டன் உடனான மோனோ-ட்யூப் - எம்.எஃப்,ப்] [Long-Travel Suspension (Rear: Mono-tube with Floating Piston - MFP)]
பெரிய பிஸ்டனுடன் கூடிய உயர் தரத்திலான வடிவமைப்பு
- வாகன செயல்திறனை தொடர்ந்து ஒரேயளவில் வெளிப்படுத்தும் நிலையான செயல்திறன் மற்றும் வாகனம் ஓட்டும்போது அதிகம் சூடாகாமல் குறைந்த இயக்க வெப்பநிலையில் வைத்திருக்க உதவுவதோடு நீடித்து உழைக்கவும் உதவுகிறது.
- பள்ளங்களில் பயணிக்கும் போதும் கூட தடுமாற்றம் இல்லாமல், அதிர்வு இல்லாமல் பயணிக்க உதவுகிறது.
- மிகவும் மேம்பட்ட செளகரியத்தையும், துல்லியமான அதிவேக கட்டுப்பாட்டையும் வழங்குகிறது.
- நீண்ட தூர பயணத்தை எளிமையாக்குவதற்கேற்ற வடிவமைப்பு
- எர்கோ-ட்ரையாங்கிள் வசதி [ergo-triangle], தார், கற்கள் கலந்த பாதை மற்றும் மண் மற்றும் ட்ரெக்கிங் பாதை என இரண்டிற்கும் சமப்படுத்தப்படுத்தப்பட்டு இருக்கிறது.
- நீண்ட தூர பயணங்களையும் இதன் எர்கோனாமிக் வடிவமைப்பு செளகரியமானதாக மாற்றுகிறது.
- பில்லியன் மற்றும் உடைமை இவை இரண்டையும் சமாளிக்கும் மிகவும் மேம்பட்ட வகையிலான எடை விநியோகம் உறுதிப்படுத்த படுகிறது.
- கரடுமுரடான பாதைகளில் உட்கார்வதற்கும், எழுவதற்கும் ஏற்ற வகையிலான வசதியை அளிக்கிறது.
- மேடான பகுதியிலிருந்து கொஞ்சம் தாழ்வான பகுதியை சிரமமில்லாமல் அடைவதையும், வாகனத்தின் ஹேண்டில்பாரை கட்டுப்பாட்டுடன் கையாள்வதையும் எளிமையாக்குகிறது.
- சாலைகளில் கம்பீரத்துடன் வலம் வரவும், சாகசப் பயணங்களை ஸ்டைலாக மாற்றவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
நவீன வாகன வடிவமைப்பிற்கான தொலைநோக்குப் பார்வை
அபார வலிமை, மேம்பட்ட செயல்திறன் மற்றும் கம்பீரமான சாகச பயணம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் அதன் வடிவமைப்பு தத்துவத்தை TVS Apache RTX வெளிப்படுத்துகிறது.
இந்த சாகச பைக் முன்னோக்கி சாய்ந்த, மோனோ-வால்யூம் சில்ஹவுட் [forward-leaning, mono-volume silhouette]- ஐ கொண்டுள்ளது. அங்கு எரிப்பொருள் நிரப்பும் தொட்டி மற்றும் ஹெட்லேம்ப் இரண்டும் அழகுடன் செதுக்கப்பட்டது போன்ற வடிவத்தில் ஒன்றிணைகின்றன, இது அமர்ந்திருக்கும்போது, தடுமாறும்போது அல்லது வாகனத்தை ஓட்டும் தடுமாறாமல் நிதானமாக கையாளும் கட்டுப்பாட்டிற்காக டியூன் செய்யப்படுகிறது. ஏரோடைனமிக் திறனை வழங்குவதற்காக கோடுகளும் தளங்களும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை தோற்றத்தை அழகுப்படுத்துவதோடு, செயல்திறனையும் மேம்படுத்துகின்றன.
தனித்துவமாக அடையாளப்படுத்தும் லைட்டிங்
மேல்நோக்கிய மெயின் பீம் ரிப்ஃளெக்டர்களுடனான டி.ஆர்.எல் ப்ளேட்கள், டெயில் லேம்ப் ப்ளேட்கள் ஒரு கம்பீரமான தோற்றத்தை அளிக்கின்றன. தெள்ளத் தெளிவான வெளிச்சத்தை அளிக்கிண்றன. இதன் ட்வின் சேம்பர் வெறும் வெளிச்சத்தை மட்டுமல்லாமல், சாகசத்தின் அணுகுமுறையை பிரதிபலிக்கிறது. . ஹெட்லேம்ப் வாகனத்தின் வேகத்திற்கு ஏற்றவகையில் சரிசெய்து கொள்ளும் அனிமேஷன் மற்றும் கட்டுப்பாட்டுடன் வருகிறது.
வண்ணங்கள், & ரைடர்களுக்கான இன்டியூட்டிவ் இன்டர்ஃபேஸ்
இயற்கையால் ஈர்க்கப்பட்ட இயற்கை வண்ணங்களிலான வைப்பர் கிரீன், மெட்டாலிக் ப்ளூ, பேர்ல் ஒயிட், லைட்னிங் பிளாக், டார்ன் ப்ரோன்ஸ் [Viper Green, Metallic Blue, Pearl White, Lightning Black, Tarn Bronze] ஆகிய வண்ணங்கள் அபாச்சியின் சிக்னேச்சர் ரெட் ஹைலைட்டுகளால் கவனத்தைக் கவர்கின்றன. மற்றும் மேட் டெக்ஸ்சர்கள், க்ளாஸ் கான்ட்ராஸ்ட்கள் மற்றும் மிக நுணுக்கமாகவும் துல்லியமாகவும் வடிவமைப்பில் இருக்கும் விவரணங்களுடன் விவரங்களுடன் முழுமையான தோற்றத்தை அளிக்கின்றன.
ஹை கான்ட்ராஸ்ட் TFT டிஸ்ப்ளே, நேவிகேஷன், சவாரி மோட்கள் மற்றும் இணைப்புத் தொழில்நுட்பம் ஆகியவற்றை மிகத் துல்லியமாக பார்த்து தெரிந்து கொள்ளும் வகையிலும், ஒவ்வொரு பயணத்தையும் மிக கவனத்துடன் மேற்கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிறப்பு துணைக்கருவிகள்:
புதிய வாய்ப்புகளை பயன்படுத்துவதற்கேற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட அப்பாச்சி Apache RTX, பாதுகாப்புக்கான மாடுலர் மெளண்ட், உடைமைகள் மற்றும் ஏதேனும் எதிர்பாராத நிகழ்வுகளில் இருந்து பாதுகாப்பதற்கான தனிப்பயனாக்க வசதிகளையும் கொண்டுள்ளது. இவை ஒவ்வொரு வகையான சாகசத்திற்கும் தயாராக கட்டமைக்கப்படும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப சிறப்பம்சங்கள்: இணைப்பு தொழில்நுட்ப அம்சங்களுடன் இண்டலிஜெண்ட் கண்ட்ரோலை வழங்குகின்றன
பல்வேறு சவாரி முறைகள் (நகர்ப்புறம், மழை, சுற்றுப்பயணம், பேரணி) [Urban, Rain, Tour, Rally]: ஒவ்வொரு பயன்முறையும் அந்தந்த நிலப்பரப்பிற்கு ஏற்ற வகையில் இயந்திரத்தின் செயல்பாடு, ட்ராக்ஷன் கண்ட்ரோக் மற்றும் ABS ஆகியவற்றை சிறப்பாக சரிசெய்ய உதவுகின்றன. நகர வீதிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் மேடு பள்ளங்கள் நிறைந்த ஆஃப்-ரோட் பாதைகளில் நிலைத்தன்மை, மென்மையான முடுக்குவிசை மற்றும் வாகனத்தை ஓட்டும் நம்பிக்கையை உறுதி செய்கிறது
மேப் மிரரிங் அம்சத்துடன் இணைக்கப்பட்ட 5-அங்குல TFT டிஸ்ப்ளே
பகல் நேரத்தில் இருக்கும் பிரகாசமான வெளிச்சத்திலும் எளிதில் பார்க்கக் கூடிய இந்த டிஸ்ப்ளே, குறிப்பிட இடத்திற்கு செல்லும் பாதையை ஒவ்வொரு திருப்பத்திற்கும் வழிகாட்டும் வசதியுடன், வாகனம் ஓட்டுபவர் எப்பொழுதும் தகவல்களை தெரிந்து கொள்ளும் வகையில் இணைந்திருக்க செய்கிறது.
சீரான பயணத்தை உறுதி செய்யும் க்ரூஸ் கண்ட்ரோல் வசதி
த்ராட்டில் நிலையை மின்னணு முறையில் ஒரேயளவி வைத்திருக்கிறது. இதனால் வாகனம் ஒரே நிலையான வாகன வேகத்தில் செல்வதை சாத்தியமாக்குகிறது. இந்த அம்சம் நீண்ட தூர பயணத்தின் போது வாகனம் ஓட்டுபவருக்கு ஏற்படும் சோர்வைக் வெகுவாக குறைக்கிறது.
குயிக் ஷிஃப்டர் [Quickshifter].
க்ளட்சைப் பயன்படுத்தாமலேயே மென்மையான முறையில் மேல் & கீழ் கியர் மாற்றங்களை எளிதில் சாத்தியமாக்குகிறது. மேலும் ஆக்ஸலரேஷனை மென்மையாக மேற்கொள்ள உதவுகிறது. அதேநேரம், ஸ்போர்ட்டி செயல்திறனையும் வழங்குகிறது.
பாதுகாப்பிற்கான சிறப்பம்சங்கள்
- ட்ராக்ஷன் கண்ட்ரோல், வீல் மிடிகேஷன், டெரைய்ன் அடாப்டிவ் ஏபிஎஸ் ஆகியவை அனைத்து நிலபரப்புகளிலும் சக்கரம் சுழலுவது, சறுக்குவது, கட்டுப்பாட்டை இழப்பது போன்ற சூழல்களில் பாதுகாப்பை அளிக்கின்றன.
- ஒவ்வொரு பயணத்திற்கும் நம்பிக்கையுடன் தயாராக உதவும் முழுமையான துணைக்கருவிகள்
- உயர்த்தப்பட்ட ரெய்ஸ்ட் ஃபெண்டர் (கொக்கு), பின்புற ஹக்கர் ஃபெண்டர், பேஷ் பிளேட், டேங்க் கார்ட், நக்கிள் கார்ட்கள், USB சார்ஜர் [Raised fender (Beak), rear hugger fender, bash plate, tank guard, knuckle guards, USB charger] போன்றவை வாகனம் ஓட்டும்போது கூடுதல் செளகரியத்தையும், பாதுகாப்பையும் வழங்குகின்றன.
- சுற்றுலா செல்வதற்கான உடைமைகளை எடுத்து செல்ல தயாராக இருக்கும் வசதி
- மோனோ லாக் உடனான GIVI top box மற்றும் side panniers, மற்றும் மற்றும் குயிக் ரிலீஸ் சிஸ்டம் உடைமைகளை வாகனத்தின் மீது எளிதில் வைத்துகொள்ளவும், வாகனத்தில் இருந்து கீழே இறக்கி வைக்கவும் உதவுவதோடு, நம்பகத்தன்மையையும் உறுதி செய்கிறது.
- சாகச பயணம், நீண்ட தூர சுற்றுலா மற்றும் அன்றாட பயணத்திற்காக வடிவமைக்கப்பட்டிருக்கிறது
- கடினமான சூழலிலும் நீடித்து உழைக்கும் வகையில் யதார்த்த சூழல்களுக்கு ஏற்றவகையில் சோதிக்கப்பட்டிருக்கிறது.
- ஒவ்வொரு பயணத்திலும் பாதுகாப்பு, வசதி மற்றும் வாகனம் ஓட்டுபவரின் நம்பிக்கையை அதிகரிக்க செய்கிறது
- புரட்சிகரமான அனுபவத்தை அளிக்கும் TVS RT-XD4 என்ஜின் தளம் 4 டுயல் டெக்னாலஜி [Dual Technologies] மூலம் பந்தயத்தில் ஓட்டுவது போன்ற சிலிர்ப்பை வழங்குகிறது:
- உயர் ஆர்பிஎம் மற்றும் உச்ச செயல்திறனை வழங்கும் டவுன்ட்ராஃப்ட் போர்ட் கொண்ட டுயல் ஓவர்ஹெட் கேம்கள் [Dual Overhead Cams with downdraft port] இடம்பெற்றுள்ளன.
- அதிகபட்ச லூப்ரிகேஷன் மற்றும் அனைத்து வரம்பிலான டார்க்கையும் ஸ்பிளிட் சேம்பர் க்ராங்கேஸ் உடனான டுயல் ஆயில் பம்ப் [Dual oil pump with split chamber crankcase] உறுதி செய்கிறது
- மேல் பக்கம் வாட்டர் ஜாக்கெட் [water jacket] மற்றும் அதற்கு கீழே டுயல் கூலிங் ஜாக்கெட் சிலிண்டர் ஹெட் இருப்பதால், வாகனத்தின் அதிகபட்ச செயல்திறனை வெளிப்படுத்த உதவும் வகையில் குளிரூட்டுகின்றன.
- டுயல் ப்ரீத்தர் சிஸ்டம் பல்வேறு பயண முறைகளில் எதிர்கொள்ளும் காற்றோட்டத்தைத் திறம்படத் தடுக்கிறது. மேலும் எண்ணெய் நுகர்வைக் குறைப்பதன் மூலம் நீண்ட காலத்திற்கு நிலையான செயல்திறனை வழங்குகிறது.
TVS RT-XD4 300 என்ஜினின் சிறப்பம்சங்கள் : இந்த புதிய இயந்திர தளத்தில் அறிமுகமாகும் முதல் என்ஜின்
இந்த புதிய தலைமுறை இயந்திர தளம் அதிகப்பட்ச செயல்திறனை வழங்குகிறது, அதே நேரத்தில் எத்தனால் கலந்த எரிபொருள்கள், குறைக்கப்பட்ட கார்பன் உமிழ்வுகள் மற்றும் மேம்பட்ட நம்பகத்தன்மையையும் அளிப்பது குறிப்பிடத்தக்கது.
- டிஸ்பிளேஸ்மெண்ட் [Displacement] : 299.1 cc, single-cylinder, forward-inclined engine
- பவர் அவுட்புட் [Power Output]: 36 PS @ 9,500 rpm, with 28.5 Nm torque @ 7,000 rpm
- கூலிங் சிஸ்டம் [Cooling System]: Liquid-cooled with dual cooling (water and oil jackets)
- குயிக் ஷிஃப்டர் உடனான 6 ஸ்பீட் கியர் பாக்ஸ்
- ரைய்ட் - பை - வயர் த்ராட்டில் சிஸ்டம் [Ride-by-wire throttle system]
- அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் க்ளட்ச் [Assist and Slipper clutch]
பல்வேறு சிறப்பம்சங்களுடன் அறிமுகமாகி இருக்கும் TVS Apache RTX, எந்த நிலப்பரப்பிலும் பயணிப்பதற்கு ஏற்ற வகையில் உறுதியான வாகனமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் முதல் முறையாக ஆஃப் ரோட் பயணம் செய்பவராக இருந்தாலும், சரி அல்லது சாகசப் பயண ஆர்வலராக இருந்தாலும் சரி அவர்களுக்கு மிகச்சிறந்த துணைவனாக இருக்கும். இந்த மோட்டார் சைக்கிள் 5 வண்ணங்களில் 3 வகைகளில் கிடைக்கிறது.
.jpg)
0 கருத்துகள்