SIP எனும் அம்பைக் கொண்டு நிதி ஒழுக்கமின்மையின் 10 பிரச்சினைகளை வென்றிடுங்கள்

நவராத்திரி பண்டிகைக் காலத்தில் தீமையை வென்று நன்மை நிலைநாட்டப்பட்டதைக் கொண்டாடும் வேளையில், நமது தனிப்பட்ட போராட்டங்களைப் பற்றி, குறிப்பாக நிதி ஒழுக்கத்துடன் நாம் நடத்தும் போராட்டங்களைப் பற்றி சிந்திக்க இது ஒரு சரியான நேரம். அவை அனைத்தையும் வீழ்த்த உங்களிடம் உள்ள அம்பு எது தெரியுமா? அதுதான் எளிமையான ஆனால் சக்திவாய்ந்த எஸ்ஐபி (சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்) தொடர்ச்சியான மற்றும் ஒழுக்கமான முதலீட்டின் மூலம், அந்தப் போராட்டங்களை எதிர்கொள்ள உங்கள் எஸ்ஐபி உதவும்.

நிதி ஒழுக்கமின்மையின் 10 பிரச்சினைகள்

ராவணனின் ஒவ்வொரு தலையும் ஒரு தீய குணத்தைக் குறிப்பதைப் போலவே, கீழே பட்டியலிடப்பட்டுள்ள பத்தும் பொதுவான நிதிப் போராட்டங்களைக் குறிக்கின்றன. சிறந்த நிதி ஆரோக்கியத்திற்காக அவற்றை அடையாளம் கண்டு, வீழ்த்துவோம்.

1. தள்ளிப்போடுதல் - “அடுத்த மாதம் முதல் நான் முதலீடு செய்யத் தொடங்குவேன்.”

முதலீடுகளைத் தாமதப்படுத்துவது, செல்வத்தைக் குறைக்கும் மிகப்பெரிய காரணிகளில் ஒன்றாகும். நீங்கள் எவ்வளவு காலம் காத்திருக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக கூட்டு வளர்ச்சியின் (power of compounding) பலனை இழக்கிறீர்கள். கூட்டு வளர்ச்சி மற்றும் ரூபாயின் சராசரி மதிப்பு (rupee-cost averaging) ஆகியவற்றிலிருந்து பயனடைய, மியூச்சுவல் ஃபண்டுகளில் SIP-கள் மூலம் சீக்கிரம் முதலீட்டைத் தொடங்கி, தொடர்ந்து முதலீடு செய்யுங்கள்.

2. அவசரகால நிதி இல்லாமை - வாழ்வின் எதிர்பாராத நிகழ்வுகளுக்குத் தயாராக இல்லாமல்இருத்தல்.

மருத்துவ அவசரநிலைகள், வேலை இழப்பு, இயற்கை பேரழிவுகள் போன்ற எதிர்பாராத நிகழ்வுகள் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். அவசரகால நிதி இல்லாமல், நீங்கள் நிதி மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். தீவிரமாக முதலீடு செய்வதற்கு முன் ஒரு பாதுகாப்பு வலையை உருவாக்குங்கள்.

3. உந்துதல் அடிப்படையிலான செலவு - திட்டமிடப்படாத ஷாப்பிங்.

உடனடி திருப்திக்காக முதலீடுகளை நிறுத்துவது அல்லது அதிகமாகச் செலவழிப்பது உங்கள் நிதி இலக்குகளைத் தகர்த்துவிடும். வாழ்க்கைமுறை மேம்பாடுகள் தவறல்ல - ஆனால் உங்கள் எதிர்காலப் பாதுகாப்பை விலையாகக் கொடுத்து அல்ல. ஒழுக்கமான முதலீட்டுடன் செலவினங்களைச் சமநிலைப்படுத்துங்கள்.

4. பட்ஜெட் இல்லாமை - வருமானம் மற்றும் செலவுகள் குறித்த தெளிவின்மை.

உங்கள் வருமானம் மற்றும் செலவுகளை நீங்கள் கண்காணிக்கவில்லை என்றால், உங்கள் சேமிப்பைத் திட்டமிட முடியாது. நிதி ஒழுக்கத்திற்கு பட்ஜெட் தான் அடித்தளம்-இது அத்தியாவசியத் தேவைகள், சேமிப்பு மற்றும் முதலீடுகளுக்கு நிதியை ஒதுக்க உதவுகிறது.

5. கடனில் மாட்டிக்கொள்ளுதல் - கிரெடிட் கார்டு பில்கள் குவிந்து வருதல்.

 ‘இப்போது வாங்குங்கள், பிறகு செலுத்துங்கள்’ என்பது விரைவாக உங்களைக் கடன் வலையில் சிக்க வைத்துவிடும். அதிக வட்டியுள்ள கிரெடிட் கார்டு பில்கள் உங்கள் சேமிப்பைக் கரைத்து, முதலீடுகளைத் தாமதப்படுத்துகின்றன. கடனைக் குறைத்து, அந்த நிதியை நீண்ட கால வளர்ச்சிக்காக SIP-களில் முதலீடு செய்யுங்கள்.

6. குறுகிய கால சிந்தனை - விரைவான வருமானத்தைத் தேடுவது.

 ‘விரைவில் பணக்காரர் ஆகலாம்’ என்ற திட்டங்களின் கவர்ச்சி பெரும்பாலும் ஆபத்தான முடிவுகளுக்கு வழிவகுக்கிறது. தோராயமான குறிப்புகள் அல்லது போக்குகளைப் பின்பற்றுவது உங்களை சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு ஆளாக்கும். குறுகிய கால ஆதாயங்களுக்குப் பதிலாக நீண்ட கால செல்வ உருவாக்கத்தில் கவனம் செலுத்துங்கள்

7. பணவீக்கத்தைப் புறக்கணித்தல் - அதிகரிக்கும் செலவுகளுக்குத் திட்டமிடாமல்இருத்தல்.

உங்கள் முதலீடுகள் பணவீக்கத்தை விட அதிகமாக வளரவில்லை என்றால், காலப்போக்கில் உங்கள் செல்வத்தின் மதிப்பு குறைகிறது. உங்கள் வருமானம் வளரும்போது, வழக்கமான SIP-களுடன் டாப்-அப் SIP-களையும் இணைப்பது பணவீக்கத்தை வெல்லும் ஒரு நிதியாதாரத்தை உருவாக்க உதவும்.

8. திறனற்ற வரித் திட்டமிடல் - சிறந்த வரி சேமிப்பு வாய்ப்புகளைத் தவறவிடுதல்.

மோசமான வரித் திட்டமிடல் உங்கள் வருமானத்தைக் குறைக்கக்கூடும். உங்கள் வரிச் சுமையைக் குறைக்கவும் சேமிப்பை அதிகரிக்கவும் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வரி-திறன்மிக்க முதலீட்டு விருப்பங்களை ஆராயுங்கள்.

9. ஒரே சொத்து வகையை அதிகமாகச் சார்ந்திருத்தல் - எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைப்பது.

ஒரே சொத்து வகையை நம்பியிருப்பது தேவையற்ற இடர்பாடுகளுக்கு உங்களை உள்ளாக்கும். இடர்பாடு மற்றும் வருமானத்தைச் சமநிலைப்படுத்த ஈக்விட்டி, கடன் மற்றும் பிற திட்டங்களில் உங்கள் முதலீடுகளைப் பன்முகப்படுத்துங்கள்.

10. இலக்கு சார்ந்த திட்டமிடல் இல்லாமை - குறிக்கோள் இல்லாமல் முதலீடு செய்தல்.

தெளிவான இலக்குகள் இல்லாமல் முதலீடு செய்வது, திசைகாட்டி இல்லாமல் பயணம் செய்வது போன்றது, பிறகு எப்படி நீங்கள் உங்கள் இலக்கை அடைவீர்கள்? உங்கள் முதலீடுகளுக்கு ஒரு திசையையும் நோக்கத்தையும் வழங்க குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால இலக்குகளை வரையறுங்கள்.

இந்த 10 நிதிப் பிரச்சனைகளை நீக்குவது உங்கள் நிதி ஆரோக்கியத்தை மாற்றியமைக்கும். உங்கள் இறுதி ஆயுதம் எது? மியூச்சுவல் ஃபண்டுகளில் மேற்கொள்ளப்படும் ஒரு ஒழுக்கமான SIP-இந்தப் பொதுவான 10 பிரச்சனைகளை வீழ்த்தி, உங்கள் இலக்குகளை அடைய உதவும் அம்பு அதுவே.

SIP: உங்கள் இறுதி ஆயுதம் --- ஒழுக்கத்தின் அம்பு

ஒரு சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) என்பது ஒரு நிதி கருவி என்பதை விட, அது ஒரு ஒழுக்கமான பழக்கம். சந்தை இயக்கத்தைப் பொருட்படுத்தாமல், ரூபாயின் சராசரி மதிப்பிலிருந்து பயனடைந்து, ஒரு குறிப்பிட்ட தொகையைத் தவறாமல் முதலீடு செய்ய SIP-கள் உங்களை அனுமதிக்கின்றன. காலப்போக்கில், இந்தத் தானியங்கி முதலீட்டு உத்தி, சந்தைச் சுழற்சிகள் முழுவதும் முதலீடு செய்யவும், உங்கள் இலக்குகளுக்காகச் செல்வத்தை உருவாக்கவும் உதவுகிறது. நீங்கள் முதலீட்டைத் தொடங்கி, அதைத் தொடர்ந்து செய்து, உங்கள் வருமானம் (அல்லது சம்பளம்) மற்றும் வாழ்க்கை முறைக்கு ஏற்ப உங்கள் SIP தொகையை படிப்படியாக அதிகரிக்கும்போது, உங்கள் தேவைகளுக்கான ஒரு நிதியாதாரத்தை உங்களால் உருவாக்க முடியும்.

 ஏன் உங்கள் வெற்றிக்கான அம்பாக இருக்கிறது:

  • நிலைத்தன்மை: சந்தை ஏற்ற இறக்கங்களைப் பொருட்படுத்தாமல், தொடர்ந்து முதலீடு செய்யுங்கள்.
  • கட்டுப்படியாகும் தன்மை: சிறிய அளவில் தொடங்கி, உங்கள் வருமானம் (சம்பளம்) மற்றும் வாழ்க்கை முறை வளரும்போது உங்கள் SIP-ஐ உயர்த்துங்கள் (increase).
  • கூட்டு வளர்ச்சியின் சக்தி: உங்கள் முதலீடுகள் வளர்வதற்குத் தேவையான நேரத்தை அளியுங்கள்.
  • இலக்குடன் இணைதல்: கல்வி, ஓய்வு, பயணம் போன்ற வாழ்க்கையின் இலக்குகளுடன் SIP-களை இணைத்திடுங்கள்.
  • மன அமைதி: தானியங்கி முதலீடு மன அழுத்தத்தையும், முடிவெடுப்பதில் உள்ள சோர்வையும் குறைக்கிறது.

ஒரு தீர்மானம் எடுங்கள்

உங்கள் நிதி வாழ்வில் உள்ள குழப்பங்களைத் தோற்கடிக்கும் சக்தியாக SIP இருக்கட்டும்.  ஒழுக்கின்மைக்கு பத்து தலைகள் இருக்கலாம், ஆனால் அதை வீழ்த்த ஒரே ஒரு அம்பு போதும்-சிறந்த நிதி எதிர்காலத்திற்கான உங்கள் அர்ப்பணிப்பு (அந்த அம்பு) தான் அது.

இந்த நவராத்திரியில், செல்வத்தை அழிக்கும் 10 அரக்கர்கள் மீது உங்கள் SIP எனும் அம்பை எய்து, வெற்றியாளராக வெளிவாருங்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu