நோவா ஐவிஎஃப் கருவுறுதல் மையம், மதுரையில், கருவுறுதல் சிகிச்சையை நாடும் பெண்களிடையே பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) பாதிப்பு அதிகரித்து வருவதைக் கண்டறிந்துள்ளது.கருவுறுதல் நிலையை மேம்படுத்த ஆரம்பகால நோயறிதல் மற்றும் விரிவான வாழ்க்கை முறை மேலாண்மைக்கான அவசரத் தேவையை நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மதுரை நோவா ஐவிஎஃப் -ன் கருவுறுதல் நிபுணர்கள், கருவுறுதல் ஆலோசனைக்காக மையத்திற்கு வருகை தரும் பெண்களில் 25 முதல் 30% பேர் பிசிஓஎஸ்பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறிந்துள்ளனர், இது தமிழ்நாட்டின் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் வாழும் பெண்களிடையே இந்த குறிப்பிட்ட ஹார்மோன் நிலை அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டுகிறது, மேலும், இந்த நிலைக்கு வாழ்க்கை முறை காரணங்கள் குறிப்பிடத்தக்கபங்கு வகிக்கின்றன என்பதைக் காட்டுகிறது. இந்த நிலையில், ஹார்மோன் அளவுகள் மற்றும் கருமுட்டை வெளிப்படுத்தலில் பாதிக்கும் நிலை, ஏற்பட்டு, இப்பகுதியில் வாழும் பெண்களிடையே கருவுறாமை நிலை ஏற்பட முக்கிய காரணமாக மாறியுள்ளது.
இந்தப் பகுதியில் உள்ள மக்கள், மரபணு ரீதியாக பிசிஓஎஸ் போன்ற உடல்நலப் பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது சாதாரண வாழ்க்கை முறை கூட முழுமையான பிசிஓஎஸ்-க்கு மிக எளிதாக வழிவகுக்கும். சமீபத்தில், மக்கள் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரை நிரம்பிய உணவுகளை அதிகம் உட்கொள்கிறார்கள். உட்கார்ந்த நிலை கொண்ட வாழ்க்கை முறையும் ஒரு கவலைக்குரிய வாழ்க்கை முறை ஆகும்., இது ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் இன்சுலின் எதிர்ப்பு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். வைட்டமின்-டி குறைபாடு போன்றவை ஹார்மோன் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் மற்றும் பிசிஓஎஸ் போன்ற நிலைமைகளை ஏற்படுத்தலாம்.
டாக்டர் சிந்தியா எம், கருத்தரிப்பு மருத்துவர், நோவா ஐவிஎஃப் கூறுகையில், "பல இளம் பெண்கள் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுவது சாதாரணமானதுஎன்று நிராகரிக்கின்றனர், ஆனால் தாமதமாக மேற்கொள்ளும் மருத்துவ சோதனைகள் பெரும்பாலும் கருவுறாமை பிரச்னைகளை க்கு வழிவகுக்கிறது. உடல் மெலிந்தவர்களாக இருந்தாலும் சரி, பருமனாக இருந்தாலும் சரி, பிசிஓஎஸ் ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நேரத்தில் மருத்துவ வழிகாட்டுதல், வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் சில சந்தர்ப்பங்களில், செயற்கை கருத்தரித்தலுக்கான மருத்துவ நுட்பங்கள் தேவைப்படுகின்றன. நகர்ப்புறங்களில் மட்டுமல்ல, கிராமப்புற மக்களிடையே பிசிஓஎஸ் அதிகரித்து வருவதை நாம் காண்கிறோம், இங்கு நிலவிவரும் உணவு முறை மாற்றங்கள் மற்றும் குறைந்த அளவிலான உடல் சார்ந்த செயல்பாடுகள், இதற்கு காரணமாக திகழ்கிறது" என்றார்.
ஐவிஎஃப் சிகிச்சையின் போது தரமான கருமுட்டைகளை உற்பத்தி செய்யும் பெண்ணின் திறனை பிசிஓஎஸ் கணிசமாக பாதிக்கிறது என்றும், இதற்கு தேவையான ஆலோசனை மற்றும் தனித்துவ சிகிச்சை அணுகுமுறைகள் தேவை என்றும் கருவுறுதல் நிபுணர் வலியுறுத்தினார். இருப்பினும், நேர்மறையான வாழ்க்கை முறை சிகிச்சை விளைவுகளில் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்தும்.
"10% எடை இழப்பு கூட சில நேரங்களில் மாதவிடாய் சுழற்சியை இயல்பாக்கும், மேலும் உணவுமுறை மற்றும் வழக்கமான உடற்பயிற்சி இரண்டும் பிசிஓஎஸ் மேலாண்மையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. டீனேஜ் பெண்களுக்கு ஏற்படும் ஆரம்ப அறிகுறிகள் கூட கருத்தில் கொண்டு, பின்னர் ஏற்படும் சிக்கல்களைத் தடுக்க அல்ட்ராசவுண்ட் அல்லது ஹார்மோன் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நாங்கள் தெளிவாக பரிந்துரைக்கிறோம்." என்கிறார் டாக்டர் சிந்தியா.எம்
இளம் வயதிலேயே, ஆரம்பகால சரிபார்த்தல் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் கருவுறுதல்ஏற்படுவதை கணிசமாக மேம்படுத்த முடியும். அதே சமயம், தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் நீண்ட கால கருத்தரிப்பு சிக்கல்களைத் தடுக்கலாம். மருந்துகள், வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் செயற்கை கருத்தரிப்பு நுட்பங்களை ஒருங்கிணைக்கும் விரிவான சிகிச்சை அணுகுமுறைகள் மிகவும் நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் அளிக்கின்றன. திருமணமான அல்லது திருமணமாகாத எந்தவொரு பெண்ணும் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி ஏற்படும் போது, அவர்கள் ஒரு மகளிர் நல மருத்துவ நிபுணரை ஆரம்ப நிலையிலேயே அணுக வேண்டும். சரியான வாழ்க்கை முறை மேலாண்மை, மருந்துகள் மற்றும் தகுந்த நேரத்தில் பராமரிப்பு மூலம், கருத்தரிப்பு ஏற்படுவதை கணிசமாக மேம்படுத்த முடியும். கருத்தரிப்பு திறன் குறைபாடு பிரச்சனைகளுடன் வரும் பெண்களுக்கு நாங்கள் பிசிஓஎஸ் பரிசோதனையும் செய்கிறோம்.
குழந்தையின்மை பிரச்சனையுடன் போராடும் பிசிஓஎஸ் உள்ள பெண்களுக்கு தனித்துவ பிசிஓஎஸ் கிளினிக்குகள் எங்களிடம் உள்ளன, அங்கு பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பிசிஒஎஸ்) தொடர்பான கருவுறுதல் பிரச்சினைகளை எதிர்கொள்ள நாங்கள் உதவுகிறோம், பிரச்சனையை கண்டறியும் மருத்துவ நிபுணர்கள், தனித்துவ சிகிச்சைத் திட்டங்கள் மற்றும் கருத்தரிப்பதற்கான ஆலோசனை உதவிகள் வழங்குகிறோம். பெரும்பாலான பிசிஓஎஸ் ஆல் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, ஐவிஎஃப் சிகிச்சைக்கு தங்கள் சொந்த கருமுட்டைகளையும், தங்கள் துணையின் விந்தணுக்களையும் பயன்படுத்தி, அதாவது தம்பதியரின் சொந்த கேமட்களைப் பயன்படுத்தி, "செல்ஃப்-சைக்கிள்" எனப்படும் சிகிச்சை முறையை மேற்கொள்ளலாம்." என்கிறார் டாக்டர் சிந்தியா. எம்.
நோவா ஐவிஎஃப் கருத்தரிப்பு மையம், தமிழ்நாட்டில், முழுமையான கருத்தரிப்பு சிகிச்சை மையமாக இருந்து, சமீபத்திய தொழில்நுட்பங்களுடன் கூடிய நவீன ஆய்வக வசதிகளையும், சர்வதேச தரநிலைகளையும் பின்பற்றி கருத்தரிப்பு சிகிச்சைகளை வழங்குகிறது.
0 கருத்துகள்