இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் மற்றும் நம்பகமான பேஷன் பிராண்டான பாண்டலூன்ஸ், இன்று புகழ்பெற்ற நடிகையும் ஸ்டைல் ஐகானுமான சமந்தா ரூத் பிரபுவை அதன் முதன் முதலான பிராண்டு தூதராக வரவேற்று ஸ்டைலில் ஒரு புதிய சகாப்தத்தை அறிவித்துள்ளது. இந்த கூட்டுஒத்துழைப்பானது, முன்னோடியான நவீன, புது ஸ்டைலான மற்றும் ஃபேஷன் ட்ரெண்ட்-ஃபார்வேடாக உள்ள இந்த பிராண்டை நிலைநிறுத்தி, பாண்டலூன்ஸின் பயணத்தில் ஒரு வரையறுக்கப்பட்ட தருணத்தைக் குறிக்கிறது.
இக்கூட்டாண்மையைக் கொண்டாடுவதற்கு, பாண்டலூன்ஸ்-ஆனது ‘ஸ்பார்க் யுவர் இமாஜினேஷன்’ எனும் அதன் பண்டிகைக்கால பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இது நவீன இந்தியாவை அவர்களின் சொந்த ஃபேஷன் கதைகளை உருவாக்க ஊக்குவிக்கும் இந்த பிராண்டின் புதிய முன்மொழிவை உயிரூட்டுகிறது. இப்பிரச்சாரமானது, அச்சமின்றி பரீட்சார்த்த முறையில் முயற்சிக்கவும் மற்றும் நம்பிக்கையுடன் தங்கள் தனித்துவமான சுயத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒவ்வொரு நுகர்வோரின் படைப்பாற்றலைத் தூண்டி, அவர்களை ஊக்கப்படுத்துவதும் பாண்டலூன்ஸின் நோக்கத்தை மையமாகக் கொண்டுள்ளது. மேலும், இந்த பிராண்டானது, இந்த ஸ்டைல் பயணத்தை முன்னின்று வழிநடத்த, ஒரு உண்மையான ஃபேஷன் முன்னோடியான சமந்தா ரூத் பிரபுவைத் தவிர வேறு யாரையும் இணைத்துக் கொள்ளவில்லை.
இக்கூட்டிணைவு குறித்து பேசிய பாண்டலூன்ஸ் மற்றும் ஓடபிள்யுஎன்டி-இன் தலைமை நிர்வாக அதிகாரி சங்கீதா தன்வானி கூறுகையில், “ஸ்பார்க் யுவர் இமாஜினேஷன் என்பது ஒரு பண்டிகைக்கால பிரச்சாரத்திற்கும் மேலானதாகும் - இது பாண்டலூன்ஸ்-இன் ஒரு புதிய அத்தியாயத்திற்கான தொடக்கமாகும். இன்றைய ஃபேஷன் என்பது படைப்பாற்றல், விளையாட்டு மற்றும் சுய வெளிப்பாடு ஆகியவை பற்றியதாகும்; மற்றும், ஒவ்வொரு வாடிக்கையாளர்களும் தங்களை ஒரு படைப்பாளியாகக் காண ஊக்குவிக்க விரும்புகிறோம். சமந்தா ரூத் பிரபு அந்த உணர்வை சரியாக வெளிப்படுத்துகிறார்; அவர் தன்னம்பிக்கை மிக்க, பல்துறை திறன் கொண்ட மற்றும் பரீட்சார்த்தம் செய்ய அஞ்சாதவர் ஆவார். அவருடன், பாண்டலூன்ஸ் ஃபேஷனை மட்டும் அணியாமல், அவர்களின் அடுத்த தனித்துவமான தோற்றத்தையும் உருவாக்கும் ஒரு நவீன இந்தியாவைக் கொண்டாடத் தயாராக உள்ளது” என்றார்.
பாண்டலூன்ஸ்-இன் முகமாக ஆவதை பற்றிப் பேசிய சமந்தா ரூத் பிரபு, “எனக்கு ஃபேஷன் என்பது சுய வெளிப்பாட்டின் ஒரு வடிவமாகும்; மற்றும் பாண்டலூன்ஸ் அந்த நம்பிக்கையுடன் கச்சிதமாக ஒத்துப்போகிறது. ‘ஸ்பார்க் யுவர் இமாஜினேஷன்’ ஆனது, ஃபேஷன் எப்படி இருக்க வேண்டுமென நான் உண்மையிலேயே நம்புகிறேனோ, அப்படியே தைரியம், தனிப்பட்ட மற்றும் ஊக்கம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது. இந்த பிராண்டானது நான் ஆழமாக இணைந்திருக்கும் மதிப்புகளான நம்பிக்கை, பல்துறை மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றைக் கொண்டாடுகிறது. அவர்களின் சொந்த ஒப்பற்ற ஸ்டைல் பயணங்களை உருவாக்கும் நவீன இந்தியாவை ஊக்குவிக்க, பாண்டலூன்ஸ்-உடன் கூட்டிணைவதில் நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.” என்றார்.
தனது புகழ்பெற்ற நடிப்புகளுக்கு அப்பால், சமந்தா நவீன இந்திய வாடிக்கையாளர்களுக்கான, தைரியமான, தன்னம்பிக்கை கொண்ட, மற்றும் மன்னிப்புக் கோராத தனிநபரான, ஒரு ஸ்டைல் அருங்காட்சியகமாவார். அவர் பாண்டலூன்ஸின் எளிமையான கவர்ச்சி, வசதி மற்றும் பல்வகை ஃபேஷன் ஆகியவற்றின் நெறிமுறைகளை பிரதிபலிக்கிறார்.
சமந்தா நடிக்கும் 'ஸ்பார்க் யுவர் இமேஜினேஷன்' எனும் பண்டிகைக்கால குறும்படமானது, ஒரு நவீன ஸ்டைலின் துடிப்பான, சினிமா கொண்டாட்டமாகும். விளக்குகளின் மினுமினுப்பு, பூக்களின் பூத்தல் மற்றும் பண்டிகை இரவுகளின் பிரகாசம் ஆகியவை இப்பிரச்சாரமானது ஒவ்வொரு மூலையிலும், சாத்தியக்கூறுகளை எவ்வாறு கிசுகிசுக்கிறது என்பதையும், ஒவ்வொரு தனிநபரையும், தங்களால் மட்டுமே முடிந்த வழிகளில் தங்கள் பண்டிகைக்கால வார்டுரோபை கற்பனை செய்யவும், உருவாக்கவும் மற்றும் உருமாற்றவும் அழைக்கிறது.
டேலண்ட்டேடில் கிரியேட்டிவ்ஸ்-இல் தங்களின் பயணம் குறித்து தெரசா செபாஸ்டியன் மற்றும் டிம்பிள் பர்மர் ஆகியோரின் கருத்து தெரிவிக்கையில், கூறுகையில், "ஸ்டைல் எனபது மிகவும் தனிப்பட்டதாகும். அது ஒரு அளவு ஒருவருக்கு பொருந்தும். ஃபேஷன் மற்றும் ஸ்டைல் மூலம் தங்களை வெளிப்படுத்துவதில் உண்மையிலேயே நம்பிக்கை கொண்ட மக்களுக்கு, ஒரு ஆடை அல்லது ஆபரணம் ஆகியவை ஒரு தீப்பொறி போன்றதாகும்;அது தங்களுக்கானதை உருவாக்கப்பட காத்திருக்கின்றன. இது துணி மற்றும் வண்ணங்களில் எழுதப்பட்ட அவர்களின் கையெழுத்து போன்றதாகும். ஸ்பார்க் யுவர் இமேஜினேன்-க்கு உயிரூட்டிய இத்தலைமுறையின் இந்த மனநிலையை வெளிக்கொணர்வது எங்களுக்கு மிகவும் தவிர்க்கமுடியாததாக இருந்தது; இது தொடர்ந்து விளையாடுவதற்கும், அதை உங்களுடையதாக்குவதற்கும், உங்கள் அடுத்ததை உருவாக்குவதற்கும் ஒரு நினைவூட்டல் ஆகும்." என்றார்.
இப்பிரச்சாரமானது தொலைக்காட்சி, டிஜிட்டல் தளங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் இன்-ஸ்டோர் அனுபவங்கள் முழுவதும், நுகர்வோருக்கு ஒரு முழு வட்ட, முழுமையான ஃபேஷன் பயணத்தை வழங்கி விரிவுபடுத்தப்படும்.
பிரச்சாரத்திற்கான இணைப்பு - <https://www.youtube.com/watch?v=2IIPYPV9oZ4>
0 கருத்துகள்