இந்தியாவின் முன்னணி சொத்து மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றான ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்ட், முதலீட்டாளர்களுக்கு நிலைத்தன்மை, முன்கணிப்பு மற்றும் வரி செயல்திறன் ஆகியவற்றின் ஒரு கலவையை வழங்க வடிவமைக்கப்பட்ட ஒரு புதுமையான திறந்த-நிலை திட்டமான ஆக்சிஸ் இன்கம் பிளஸ் ஆர்பிட்ரேஜ் பேஸிவ் FOF இன் அறிமுகத்தை இன்று அறிவித்துள்ளது. இந்த புதிய நிதி வழங்கல் (NFO) அக்டோபர் 28, 2025 அன்று சந்தாவிற்குத் தொடங்கி நவம்பர் 11, 2025 அன்று முடிவடையும். இந்த நிதியானது தேவங் ஷா (தலைவர் - நிலையான வருமானம்), ஆதித்யா பகாரியா (மூத்த நிதி மேலாளர்), ஹர்திக் சத்ரா (மூத்த நிதி மேலாளர்) மற்றும் கார்த்திக் குமார் (நிதி மேலாளர்) ஆகியோரால் நிர்வகிக்கப்படுகிறது.
இந்தப் புதிய வழங்கல், ஒரு எச்சரிக்கையான ஆபத்து விவரக்குறிப்பைக் பராமரிக்கின்ற அதே வேளையில் வரிக்குப் பிந்தைய வருமானத்தை மேம்படுத்த விரும்பும் முதலீட்டாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. நடுத்தர கால எல்லைக்குள் நிலையான வருமானத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு கலப்பின கட்டமைப்பை உருவாக்குகின்ற இந்த நிதி, முதலீடுகளை ஆர்பிட்ரேஜ் நிதிகளுடன் செயலற்ற கடன் சார்ந்த பரஸ்பர நிதித் திட்டங்களில் மூலோபாய ரீதியாக ஒருங்கிணைக்கிறது.
ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி P. கோப்குமார், இந்த ஃபண்ட் இன் வெளியீடு குறித்து கருத்து தெரிவிக்கையில், “ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்டில், செயல்திறனை எளிமையுடன் இணைக்கும், முதலீட்டாளர்-மைய்யப்படுத்திய புதுமையான தீர்வுகளை வழங்குவதில் எங்கள் கவனம் எப்போதும் இருந்து வருகிறது. நிலைத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் வரி செயல்திறன் ஆகியவற்றின் தனித்துவமான ஒரு கலவையை வழங்குகின்ற ஆக்சிஸ் இன்கம் பிளஸ் ஆர்பிட்ரேஜ் பேஸிவ் FOF இந்த தத்துவத்திற்கு ஒரு சான்றாக உள்ளது. முன்கணிப்பு மற்றும் வரிக்குப் பிந்தைய வருவாய் ஆகியவற்றை எப்போதையும் விட முக்கியப்படுத்துகின்ற இந்தச் சந்தையில், நிலையான வருமான முதலீட்டை அணுகும் ஒரு அறிவார்ந்த வழியுடன் முதலீட்டாளர்களுக்கு அதிகாரம் வழங்குவதே இந்த நிதியின் நோக்கமாகும்” என்று கூறினார்.
ஆக்சிஸ் இன்கம் பிளஸ் ஆர்பிட்ரேஜ் பேசிவ் FOF இன் முக்கிய அம்சங்கள்
உயர்தர கருவிகளை இலக்காகக் கொண்ட இந்த திட்டம், அதன் போர்ட்ஃபோலியோவில் தோராயமாக 50-65% ஐ செயலற்ற கடன் சார்ந்த பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு செய்ய கட்டமைக்கப்பட்டுள்ளது. வட்டி விகித அபாயத்தைக் குறைக்கின்ற அதே வேளையில் திரட்டப்பட்ட வருமானத்திலிருந்து பயனடைய முதலீட்டாளர்கள் அனுமதிக்கின்ற இந்த அடிப்படைத் திட்டங்கள் ஒரு ரோல்-டவுன் உத்தியைப் பின்பற்றும். மீதமுள்ள 35-50% போர்ட்ஃபோலியோ, முழுமையாக இழப்புகாப்பரண் செய்யப்பட்ட பங்கு நிலைகளை உள்ளடக்கிய ஆர்பிட்ரேஜ் நிதிகளுக்க ஒதுக்கப்படும். இந்த கூறு, திசை சந்தை விளைவைத் தவிர்ப்பதால், குறைந்த ஏற்ற இறக்கத்துடன் வருவாயை ஈட்டுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு கூறுகளின் கலவையானது, மேம்படுத்தப்பட்ட வரி சாதகத்துடன் கடன்-போன்ற வருவாயை இந்த நிதி வழங்குவதை உறுதி செய்கிறது.
இந்தத் திட்டம் அதன் இரட்டை வெளிப்பாட்டை பிரதிபலிக்கின்ற 65% NIFTY குறுகிய கால கடன் குறியீடு மற்றும் 35% Nifty 50 ஆர்பிட்ரேஜ் TRI ஆகியவற்றைக் கொண்ட ஒரு கூட்டு குறியீட்டிற்கு எதிராக தரப்படுத்தப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களுக்கு ஒரு நெகிழ்வான விருப்பமாக இதை அமைக்கின்ற வகையில் இந்த நிதி T+2 மீட்பு கொடுப்பனவுகளுடன் அதிக பணப்புழக்கத்தை வழங்குகிறது மற்றும் வெளியேறும் சுமை இல்லை. கூடுதலாக, அதன் செயல்திறனை மேலும் மேம்படுத்துகின்ற இந்த நிதியின் அமைப்பு அடிப்படை திட்டங்களை மறுசீரமைப்பதில் வரிப் பொறுப்பு இல்லை என்பதை உறுதி செய்கிறது.
ஆக்சிஸ் இன்கம் பிளஸ் ஆர்பிட்ரேஜ் பேசிவ் FOF ல் ஏன் முதலீடுசெய்ய வேண்டும்?
இந்த நிதியானது, நடுத்தர கால எல்லைக்குள் ஒப்பீட்டளவில் நிலையான வருவாயை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட, குறைந்த முதல் மிதமான இடர் கொண்ட முதலீட்டைத் தேடும் பெரு நிறுவனங்கள், உயர் நிகர மதிப்புள்ள நபர்கள் (HNI) மற்றும் சில்லறை முதலீட்டாளர்களுக்கு மிகவும் பொருத்தமானது. கடன் உட்கூறில் செயலற்ற ரோல்-டவுன் உத்திகளின் இந்த பயன்பாடு, முதிர்வு வரை வைத்திருப்பதற்கான வருவாய்க்கு ஒரு தெளிவான தோற்றத்தை வழங்குகிறது. அதே நேரத்தில், ஆர்பிட்ரேஜ் ஒதுக்கீடு, குறைந்தபட்ச அதிகரிப்பு இடரின் மூலம், வருவாய் அதிகரிப்பிற்கான ஒரு அடுக்கைச் சேர்க்கிறது.
இந்த நிதியில் முதலீடு செய்வதற்கான மிகவும் கட்டாய காரணங்களில் ஒன்று அதன் வரி செயல்திறன் ஆகும். முதலீட்டாளரின் அடுக்கு விகிதத்தில் வரி விதிக்கப்படுகிற பாரம்பரிய கடன் பரஸ்பர நிதிகள் அல்லது நிலையான வைப்புத்தொகைகளைப் போலன்றி, ஆக்சிஸ் இன்கம் பிளஸ் ஆர்பிட்ரேஜ் பேஸிவ் FOF 24 மாதங்களுக்கும் மேலாக வைத்திருந்தால் வெறும் 12.5% இல் நீண்ட கால மூலதன ஆதாயங்கள் (LTCG) வரிவிதிப்புக்கு தகுதி பெறுகிறது.
ஆக்சிஸ் AMC இன் தலைமை முதலீட்டு அதிகாரி (CIO) ஆஷிஷ் குப்தா கூறுகையில், "தற்போதைய சந்தைச் சூழல் கவர்ச்சிகரமான திரட்டு வாய்ப்புகளை வழங்குவது மற்றும் முதலீட்டாளர்கள் பாரம்பரிய நிலையான வருமானப் பொருட்களுக்கு மாற்றாக வரிச்சாதகம் உள்ள விருப்பங்களை அதிகரித்து தேடுவதன் முலம், ஆக்சிஸ் இன்கம் பிளஸ் ஆர்பிட்ரேஜ் பேஸிவ் FOF ஒரு சரியான தருணத்தில் வந்த தீர்வாக அமையும். செயலற்ற ரோல்-டவுன் உத்திகளையும், முழுமையாக இழப்புகாப்பரண் செய்யப்பட்ட ஆர்பிட்ரேஜ் வெளிப்பாட்டையும் பயன்படுத்தி, ஒரு முன்கணிக்கத்தக்க மற்றும் வெளிப்படையான முதலீட்டு அனுபவத்தை வழங்குவதே இந்த நிதிவடிவமைக்கப்பட்டுள்ளது."
மேலும், இந்த நிதி பெரும்பாலும் "5Ps" என்று குறிப்பிடப்படுகிற பலவற்றின் பிரச்சனை, கணிக்கக்கூடிய தன்மை, போர்ட்ஃபோலியோ வெளிப்படைத்தன்மை, வரிக்குப் பிந்தைய வருமானம் மற்றும் கடன் நிகழ்வுகளிலிருந்து பாதுகாப்பு (Problem of Plenty, Predictability, Portfolio transparency, Post-tax returns, and Protection from credit events) போன்ற முக்கிய முதலீட்டாளர் கவலைகளை நிவர்த்தி செய்கிறது. ஒரு உயர்தர போர்ட்ஃபோலியோவில் முதலீடு செய்வதை இலக்காகக் கொண்டு, இந்த நிதி கடன் அபாயத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன் செயலற்ற அமைப்பு வெளிப்படைத்தன்மை மற்றும் கணிக்கக்கூடிய தன்மையை நோக்கமாகக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் கலப்பின ஒதுக்கீடு மாதிரி சந்தை சுழற்சிகள்
முழுவதிலும் பல்வகைப்படுத்தல் மற்றும் மீள்தன்மையை வழங்குகிறது.

0 கருத்துகள்