டாடா பவர் நிறுவனம், முன்னெடுக்கும் 'நூறு நகரங்கள் ஒரே நோக்கம்' முன்முயற்சி!

இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த மின்சார நிறுவனங்களில் ஒன்றான டாடா பவர் [Tata Power],  'நூறு நகரங்கள் ஒரே நோக்கம்' [‘100 Cities. 1 Motive’] என்ற நாடு தழுவிய முன்முயற்சியின் ஒரு பகுதியாக, கோயம்புத்தூர் நகரில் தனது நவீனமயமானஈஇசட் ஹோம் ஆட்டோமேஷன் தீர்வுகள் [EZ Home Automation solutions] விரிவுபடுத்துகிறது. எல்இடி தெருவிளக்குகள் மூலம் கோடிக்கணக்கான ரூபாயை சேமிக்கும் நகரமாகவும், நகர நிர்வாக பயன்பாடுகளுக்கு சூரிய சக்தி மின்சாரத்தை அதிக அளவில் பயன்படுத்தும் நவீன நகரமாகவும் (ஸ்மார்ட் சிட்டி) கோயம்புத்தூர் திகழ்கிறது. இப்போது டாடா பவர் நிறுவனத்தின் ஈஇசட் ஹோம் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் எனப்படும் நவீன வீடுகள் தொழில் நுட்ப அனுபவ மையம் [Tata Power’s EZ Home Experience Centre] இந்நகரில் திறக்கப்பட்டுள்ளது. இது கோயம்புத்தூர் நகரில் வசிப்போருக்கு நவீன (ஸ்மார்ட்) மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலையான வாழ்க்கை வசதிகளை எளிதில் வழங்கும். இந்தியா முழுவதும் வீடுகளை நவீனமாகவும் (ஸ்மார்ட்), பாதுகாப்பானதாகவும் திறன் வாய்ந்தவையாகவும் மாற்றுவதற்கான டாடா பவர் நிறுவனத்தின் பயணத்தில் இந்த நடவடிக்கை அடுத்தக்கட்ட முன்னேற்றமாகும்

கோயம்புத்தூரில் ஈஇசட் ஹோம் அனுபவ மைய [Tata Power’s EZ Home Experience Centre] திறப்பு விழாவில், அம்மையத்தில் இருக்கும் நிறுவனத்தின் தயாரிப்புகளையும், அவற்றின் பயன்களையும் நேரடியாக அறிந்து கொள்ளும் அனுபவத்தை மையமாகக் கொண்ட ஸ்டோர் டூரில், நவீன வீடுகள், பசுமைத் தொழில்நுட்பங்கள் (ஈஇசட் ஹோம்) குறித்து அறிந்து கொள்ள குடும்பங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஒருங்கிணைந்த ஸ்மார்ட் ஹோம் தீர்வுகள் மற்றும் இந்நிறுவன தயாரிப்புகள் மற்றும் சலுகைகள் அனைத்தையும் வாடிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இண்ட்ராக்ட்டிவ் லைவ் வால் [interactive live wall showcasing]மூலம் விளக்கிக்கூறும் நேரடி நிகழ்வில் பங்கேற்கும் வாய்ப்பும் அளிக்கப்பட்டது.ஸ்மார்ட் தொழில்நுட்ப அடிப்படையிலானடாடா பவரின் இந்த முன்முயற்சி, தொழில்துறை வளர்ச்சி, தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், கலாச்சார பாரம்பரியம் ஆகியவற்றை  ஒருங்கிணைக்கும் ஒரு நகரமாக கோயம்புத்தூர் உருவெடுத்து வருவதை எடுத்துக்காட்டுகிறது.

ஈஇசட் ஹோம் ஆட்டோமேஷன் தொழில் நுட்பமானது, பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் தயாரிப்புகளிலேயே வடிவமைக்கப்பட்டிருக்கும் ஸ்மார்ட் அம்சங்களைக் கொண்டிருக்கின்றன. மேலும்,   மொபைல் செயலி மூலம், விளக்குகளை பயன்படுத்துதல், பருவ நிலைகளுக்கேற்ற பயன்பாடுகள்,வீட்டு உபகரணங்களைப் பயன்படுத்துதல், பாதுகாப்பு, மின் சக்திப் பயன்பாடு ஆகியவற்றை பயன்படுத்தும் கட்டுப்பாட்டை வழங்குகிறது. நிகழ்நேரத்தில் மின்சக்திப் பயன்பாட்டுக் கண்காணிப்பு, தானியங்கி முறையில் திட்டமிடல், அதிக மின்னாற்றல் வரும்போது (ஓவர்லோட்) பாதுகாப்பு, இணையம் அல்லாத நேரடி செயல்பாடு போன்ற மேம்பட்ட அம்சங்கள் இதில் சாத்தியமாகும். இவை வீடுகளில், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற நிலைத்தன்மையை எளிதாகக் கொண்டுவர உதவுகின்றன.

ஸ்மார்ட் சாக்கெட்டுகள், டச் பேனல் சுவிட்சுகள், மோஷன் சென்சார்கள், ரெட்ரோஃபிட்டபிள் கன்வெர்ட்டர்கள் [smart sockets, touch panel switches, motion sensors, and retrofittable converters] உள்ளிட்ட நவீன தயாரிப்புகள், கோயம்புத்தூரின் நகர்ப்புற குடும்பங்களுக்கும், நவீன (ஸ்மார்ட்), நிலையான வாழ்க்கை முறைகளைப் பின்பற்ற ஆர்வமுள்ள புறநகர்ப் பகுதி மக்களுக்கும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிமுகத்தின் மூலம், கோயம்புத்தூர் நகரமும் இப்போது டாடா பவர் ஈஇசட் ஹோமின் 'நூறு நகரங்கள் ஒரே நோக்கம்' என்ற பயணத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ளது. தகவல் தொடர்புடன் இணைக்கப்பட்ட, நிலையான, மின் ஆற்றல் உணர்வுள்ள எதிர்கால வீடுகள் என்ற  இலக்கை நோக்கிய ஒரு உறுதியான அடி எடுத்து வைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள குடும்பங்களுக்கு நவீன (ஸ்மார்ட்), சுற்றுச் சூழலுக்கு ஏற்ற பசுமை அடிப்படையிலான வாழ்க்கைக்கான வாக்குறுதியை இது வழங்குகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu