டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் TVS NTORQ 150 அறிமுகம்!

இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனப் பிரிவுகளில் உலகளாவிய முன்னணி நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் (TVS Motor Company (TVSM)), இந்தியாவின் வேகமான, ஹைப்பர் ஸ்போர்ட் ஸ்கூட்டரான [India’s quickest Hyper Sport Scooter] TVS NTORQ 150-ஐ அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. புதிய TVS NTORQ 150, அபாரமான ஆற்றல் கொண்ட 149.7cc ரேஸ்-டியூன் செய்யப்பட்ட எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. மேலும், ஆகாயத்தில் யாருடைய பார்வையிலும் அகப்படாமல் வேகமாக பறக்கும் ஸ்டீல்த் விமானத்தின் வடிவமைப்பால் ஈர்க்கப்பட்டு இதன் வடிவமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் புதிய தலைமுறையைச் சேர்ந்த இரு சக்கர வாகன சாகச ப்ரியர்களை திருப்திப்படுத்தும் வகையில் அபாரமான செயல்திறன், கம்பீரமான  ஸ்போர்ட்டி தோற்ற அழகியல் மற்றும் அதிநவீன தொழில்நுட்பம் ஆகியவற்றின் மிகச்சரியான கலவையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் சிறப்பு அறிமுக விலை ரூ. 119,000 (எக்ஸ்-ஷோரூம், இந்தியா முழுவதும்)

எப்போதும் பிரமிப்பைத் தூண்டும் TVS NTORQ-ம் கம்பீரமான கதையை அடிப்படையாகக் கொண்டு  வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய TVS NTORQ 150 எதிர்கால ஸ்கூட்டர்களில் முக்கியமான ஒன்றாக இருக்கும். அதன் MULTIPOINT® ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், ஏரோடைனமிக் விங்லெட்டுகள், கண்களைக் கவரும்  வண்ணத்திலான அலாய் வீல்கள் மற்றும் சிக்னேச்சர் மஃப்ளர் நோட் [MULTIPOINT® projector headlamps, aerodynamic winglets, coloured alloy wheels, and signature muffler note] ஆகிய அம்சங்கள் TVS NTORQ-ன் ரேசிங் டிஎன்ஏவை உறுதிப்படுத்துகின்றன.  அதே நேரத்தில் அலெக்சா மற்றும் ஸ்மார்ட்வாட்ச் ஒருங்கிணைப்பு, எங்கிருக்கிறோம் என்பதை கண்டறியும் லைவ் ட்ராக்கிங், வழிகாட்டும் நேவிகேஷன் வசதி மற்றும் OTA புதுப்பிப்புகள் [Alexa &smartwatch integration, live tracking, navigation, OTA update] உள்ளிட்ட 50+ ஸ்மார்ட் அம்சங்களுடன் கூடிய உயர் துல்லிய TFT கிளஸ்டர் [hi-res TFT cluster]  இதன் வாகன பிரிவிலேயே மிகவும் மேம்பட்ட ஸ்கூட்டராக TVS NTORQ 150-ஐ களமிறங்க செய்திருக்கின்றன.

TVS NTORQ 150 அறிமுக விழாவில் பேசிய டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் இந்திய 2W பிஸினெஸ் பிரிவுத் தலைவர் திரு. கௌரவ் குப்தா [,Mr. Gaurav Gupta, President, India 2W Business, TVS Motor Company], "டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தில், புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட சிறப்பு சலுகைகள் மூலம், இயற்கையாகவே உந்துதல் அளிக்கும் வளர்ச்சிக்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். உண்மையில் TVS NTORQ 150 எங்களது அனைத்து ரைடர்களிடமிருந்தும் கற்றுக்கொண்ட ஓவ்வொன்றாலும்  ஈர்க்கப்பட்டு, அவற்றை நடைமுறையில் செயல்படுத்தும் வகையில் எங்களது ஸ்கூட்டர்களின்  தயாரிப்பு வரிசையை மேம்படுத்தி இருக்கிறோம். பந்தய களத்தில் பார்க்கும் அதே செயல்திறன், இன்றைய ஸ்மார்ட் வாழ்க்கை முறைக்கு உதவும் மேம்பட்ட இணைப்புத் தொழில்நுட்பம் மற்றும் இவ்வாகனப் பிரிவிலேயே முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படும் உயர் பாதுகாப்பு மற்றும் கட்டுக்கோப்பான கட்டுப்பாட்டு என பல  அம்சங்களை ஒருங்கிணைத்து இந்த புதிய TVS NTORQ 150 அறிமுகம் செய்திருக்கிறோம். புதிய TVS NTORQ 150 ஸ்கூட்டர் எங்களது வாடிக்கையாளர்களை நிச்சயம் மகிழ்ச்சியில் ஆழ்த்தும். ஆச்சர்யத்தைக் கொடுக்கும், எங்கள் ப்ராண்ட் மீதான அன்பையும், உறவையும் மேலும் வலுப்படுத்தும்’’ என்றார்.

இந்த அறிமுகம் குறித்து டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஹெட் கம்மூட்டர் & இவி பிஸினெஸ், ஹெட் கார்பொரேட் ப்ராண்ட் & மீடியா  மூத்த துணைத் தலைவர் திரு. அனிருத்தா ஹால்டார் [Mr. Aniruddha Haldar, Senior Vice President - Head Commuter & EV Business and Head Corporate Brand & Media, TVS Motor Company] கூறுகையில், “இருபது மில்லியனுக்கும் அதிகமான NTORQ ப்ரியர்கள் மற்றும் 50 TVS NTORQ உரிமையாளர்களால் சுயமாக நிர்வகிக்கப்படும் சவாரி குழுக்கள் மற்றும் சமூகங்கள், இந்தியாவின் மிகவும் விரும்பப்படும், முத்திரைப் பதிக்கும் ஆட்டோமொடிவ் பிராண்டுகளில் ஒன்றிற்கும் அதன் ரைடர்களுக்கும் இடையே நிலவும் ஒரு அற்புதமான உறவை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்துகின்றன. TVS NTORQ 150 தனித்துவமான வடிவமைப்பு, சிறந்த செயல்திறன் மற்றும் புதிய யுக தொழில்நுட்பம் ஆகியவற்றின் மிகச்சிறந்த வெளிப்பாடாக உள்ளது. புதிய TVS NTORQ 150-ன் அறிமுகம், இன்றைய இளைய தலைமுறையினரிடையே அதிகரித்து  வரும் உயர் செயல்திறன் கொண்ட ஸ்கூட்டர்கள் வேண்டும் என்ற விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  TVS NTORQ 150, அதன் ஹைப்பர் ஃபியூச்சரிஸ்டிக் வடிவமைப்பு, ஹைப்பர் டியூன் செய்யப்பட்ட செயல்திறன் மற்றும் ஹைப்பர் இணைப்புத் தொழில்நுட்பத்துடன் இந்தியாவின் முதல் ஹைப்பர் ஸ்போர்ட் ஸ்கூட்டராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இதன் குணாதிசயங்கள் அதன் ரைடர்களை நிச்சயம் கவரும். பயணத்தின் போது சிலிர்க்க வைக்கும்.  இதன் மூலம் TVS NTORQ பிராண்ட்டின் மீதான ஆர்வத்தையும், ஆசையையும், உரிமத்தையும் பெருமளவில் அதிகரிக்கச் செய்யுமென நாங்கள் உறுதியாக நம்புகிறோம்’’ என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu