சொனாட்டாவின் பண்டிகைக்கால கைக்கடிகாரத் தொகுப்பு 2.0 அறிமுகம்

இந்தியாவில் கவர்ச்சிகரமான விலைகளில், மனதைக் கவரும் வடிவமைப்புகளில் கைக்கடிகாரங்களை அறிமுகம் செய்யும் சொனாட்டா [Sonata], இந்த பண்டிகைக் காலத்தைக் கொண்டாடும் வகையில் ‘ஃபெஸ்டிவ் கலெக்‌ஷன் 2.0’ [Festive Collection 2.0] என்னும் பெயரில் புதிய கைக்கடிகாரத் தொகுப்பை அறிமுகம் செய்திருக்கிறது.  இந்த கைக்கடிகாரங்கள், காலத்தின் மதிப்பையும்,  பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தையும் கொண்டாடும் வகையில்  வடிவமைக்கப்பட்டுள்ளன. நம் மனதிற்கு நெருக்கமானவர்களுக்கு பரிசளிக்க வேண்டுமென நினைக்கும் போது, அதற்கான மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிக்கும் வகையில் சொனாட்டாவின் இந்த புதிய கைக்கடிகாரத் தொகுப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.  இன்றைய இளம் தலைமுறையினருக்கு பிடித்த நவீன வடிவமைப்புடன், பண்டிகைகளின் போது பரிசுகளால் நாம் உணரும்  மகிழ்ச்சியையும்  கொண்டுவரும் வகையில்  இந்த புதிய வகை கடிகாரங்கள் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்களுக்கான கடிகாரங்கள்

ஆண்களுக்காக இந்த புதிய பண்டிகைக் கால கைக்கடிகாரத் தொகுப்பிலிருக்கும் ஒவ்வொன்றும் அவர்களின் ஆளுமையை வெளிப்படுத்தும் வகையிலான டயல்கள், கண்களைக் கவரும் உறுதியான வடிவமைப்பிலான கைக்கடிகார உடற்பகுதி, வசீகரத்தை வெளிப்படுத்தும் சொனாட்டாவின் கிளாசிக் ரோமன் ஹவர் மார்க்கர்கள் [Roman hour markers] மற்றும் முதலைகளின் தோலில் உள்ள நுட்பமான வடிவமைப்பைக் கொண்டிருக்கும் கைப்பட்டைகள் [croco-patterne dstraps] என அட்டகாசமான தயாரிப்புகளாக இவை அறிமுகமாகியுள்ளன. நீலம் மற்றும் பச்சை நிற டயல்கள், கூடுதல் மெருகையும், அழகையும் சேர்க்கின்றன. மேலும், க்ரோனோகிராஃப், நாள் மற்றும் தேதியைக் காட்டும் மல்டிஃபங்ஷன் டே & டேட், இரவு மற்றும் பகல் நேரங்களை காட்டும் சன் & மூன் இண்டிகேட்டர் [chronograph, multifunction day & date, and a sun & moon indicator] போன்ற அம்சங்கள் இந்த கைக்கடிகாரங்களை அழகியலுடன், நேர்த்தியான வினைத்திறனை ஒருங்கிணைக்கின்றன. இத்தொகுப்பில் இருக்கும் அம்சங்கள் அனைத்தும், ஒரு கொண்டாட்டத்திற்கு ஏற்ற வகையிலும், ஆத்மார்த்தமான பரிசாக கொடுக்கும் வகையிலும், பண்டிகைக் காலத்தின் மறக்க முடியாத தருணங்களை குறிக்கும் வகையிலும் ‘ஃபெஸ்டிவ் கலெக்‌ஷன் 2.0’-ஐ தனித்துவமிக்கமிக்கதாக உணரச் செய்கின்றன.

பெண்களுக்கான கடிகாரங்கள்

பெண்களுக்கான தொகுப்பில், மெல்லிய இழைகளின் பின்னல் வடிவமைப்பிலான  ப்ரேஸ்லெட்கள் (mesh bracelets), பளபளக்கும் கற்கள் பதித்த ஸ்டட் பகுதிகள், மற்றும் வெவ்வேறு வடிவ இணைப்புகள் கொண்ட அழகிய ரோஸ் கோல்ட் கைப்பட்டை என கவர்ச்சிகரமான கைக்கடிகாரங்கள் இடம்பெற்றுள்ளன. மிக நுணுக்கமான விவரணங்கள், வடிவமைப்பை  முழுமைப்படுத்தும் அம்சங்கள் மற்றும் பண்டிகைக் கால கவர்ச்சி இவற்றின் கலவையானது, ஒவ்வொரு கடிகாரத்தையும் உங்கள் மனதிற்குப் பிடித்த பெண்ணுக்கு பரிசளிக்க சரியான தேர்வாக இந்த கைக்கடிக்காரத் தொகுப்பை முன்னிறுத்துகின்றன. விருந்துகள் அல்லது விழாக்களில் நீங்கள் அணியும் உடைகளை மேலும் வசீகரமாக மாற்ற ‘ஃபெஸ்டிவ் கலெக்‌ஷன் 2.0’ மிகச் சரியான தேர்வாக அறிமுகமாகி இருக்கிறது.

சொனாட்டா நிறுவனத்தின் தயாரிப்புப் பிரிவுத் தலைவர் திரு. நிஷாந்த் மிட்டல் [Nishant Mittal, Product Head, Sonata] பேசுகையில், "ஃபெஸ்டிவ் கலெக்‌ஷன் 2.0 அறிமுகமானது, இந்த பண்டிகைக் காலத்தை ஸ்டைலாக கொண்டாட அழைக்கிறது. ஒவ்வொரு கடிகாரமும் இந்த நேரத்தின் மகிழ்ச்சியையும், அன்பையும் பிரதிபலிக்க வேண்டும் என நாங்கள் விரும்பினோம். அது உங்களுக்குப் பிடித்தவர்களுக்கு பரிசளிப்பதற்கோ, முக்கிய தருணங்களில் அலங்கரிப்பதற்கோ அல்லது பண்டிகைகளை உற்சாகமாக கொண்டாடுவதற்கோ இருக்கலாம். ஒவ்வொரு கைகடிகாரமும் உங்களுடைய தருணங்களை அழகிய நேரமாக மாற்றுவதோடு, மறக்க முடியாத நினைவுகளை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது," என்று கூறினார்.

சொனாட்டாவின் ஃபெஸ்டிவ் கலெக்‌ஷன் 2.0-ஐ சொனாட்டா விற்பனை நிலையங்களில் வாங்கலாம். ஆன்லைனில் வாங்க விரும்பினால் www.sonatawatches.in  என்ற இணையதளத்தில் கிடைக்கிறது. இன்றே உங்கள் பண்டிகைக் கொண்டாட்டங்களைச் சிறப்பாக நிறைவு செய்யும் ஃபெஸ்ட்டிவ் கலெக்‌ஷன் 2.0 கைக்கடிகாரங்களை வாங்குங்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu