மேம்படுத்தப்பட்ட 2025 Meteor 350 உடன் ஒரு புதிய உயரத்தில் க்ரூய்ஸ் செய்யுங்கள்

நடுத்தர அளவிலான (மிட் சைஸ்) மோட்டார்பைக் பிரிவில் உலகளாவிய முன்னணி நிறுவனமாகத் திகழும் ராயல் என்ஃபீல்ட் - இந்தியாவில் அதன் புத்தம் புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட Meteor 350 ரக பைக்குகளை இன்று அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. சூரிய அஸ்தமிக்கும் பொன்னிற வானம் சூழ, அழகிய நெடுஞ்சாலைகளில், ரம்மியமான பயணங்களுக்காக தயாரிக்கப்பட்ட இந்த Meteor 350, உண்மையான க்ரூஸர் வடிவமைப்பு, தனித்தன்மை, சீரான செயல்திறன் மற்றும் நிதானமான பயணத்திற்கு வற்ற வடிவமைப்பு ஆகியவற்றுடன் வந்துள்ளது; இது மிட்சைஸ் க்ரூஸர் பிரிவில் புதிய தரநிலையை தொடர்ந்து நிர்ணயித்து வருகிறது. 2020-இல் முதலில் வெளிவந்த Meteor 350 பைக், சிரமமின்றி நீண்ட தூரம் பயணிப்பது, மற்றும் சீரான நகர்புற பயணங்களுக்கு என அனைத்திற்கும் ஏதுவாக ரிஃபைன் செய்யப்பட்ட நம்பகமான பைக் என்ற நற்பெயரை ஈன்றுள்ளது. தற்போது இந்த புதிய மோட்டார்பைக் - ஃபயர்பால் (Fireball), ஸ்டெல்லார் (Stellar), அரோரா (Aurora) மற்றும் சூப்பர்நோவா (Supernova) ஆகிய வேரியண்ட்களில் புதிய அம்சங்கள் மற்றும் மேம்படுத்தல்களுடன் வருகிறது.

349cc ஏர்-கூல்டு J-சீரிஸ் என்ஜினால் இயக்கப்படும், இது 20.2 BHP @6100 rpm இல் அதிகபட்ச பவர் மற்றும் 27Nm @4000 rpm இல் அதிகபட்ச டார்க் வழங்குகிறது, 2025 Meteor 350 அதன் முழு வரிசையிலும் பல ஸ்டாண்டர்டு அப்கிரேட்களுடன் வருகிறது. இந்த அப்டேட்டில் LED ஹெட்லாம்புகள், Tripper pod, LED டர்ன் இன்டிகேட்டர்கள், USB Type-C ஃபாஸ்ட் சார்ஜிங் போர்ட், Assist-and-slip கிளட்ச் மற்றும் Adjust பண்ணக்கூடிய லிவர்ஸ் அடங்கும். இப்போது Fireball மற்றும் Stellar வெரியண்ட்களில் LED ஹெட்லாம்பும் Tripper pod உள்பட ஸ்டாண்டர்டாக கொடுக்கப்படுகிறது, மேலும் Meteor 350 Supernova மற்றும் Aurora வெரியண்ட்களில் adjustable levers ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகின்றன. இதனால், இந்த டாப்-ஆஃப்-த-லைன் வெரியண்ட்கள் முழுமையாக அம்சங்களால் நிரம்பியவையாகவும், இன்றைய செக்மெண்டில் கிடைக்கும் சிறந்த touring cruiser ஆகவும் மாறுகின்றன.

Royal Enfield தனது Meteor 350 வரிசையை அனைத்து வெரியண்ட்களிலும் புதிய நிறத் தொகுப்புகளுடன் புதுப்பித்துள்ளது. மேல் தரமான Supernova வெரியண்ட் இப்போது க்ரோம் பினிஷுடன் கூடிய நவீன நிறத் திட்டத்தில் கிடைக்கிறது, அதே சமயம் Aurora வெரியண்ட், பாரம்பரியம் மையமாகக் கொண்ட நிறத் தேர்வுகளுடன், ரெட்ரோ-ஸ்டைல் க்ரூசர் விரும்புபவர்களுக்கு ஈர்ப்பாக உள்ளது. Stellar வெரியண்ட் அதன் நுணுக்கமான மற்றும் தைரியமான நிறத் தேர்வுகளுடன், மற்றும் Fireball வெரியண்ட் அதன் விளைந்த மற்றும் உயிர்ப்பான நிற விருப்பங்களுடன், சுதந்திரமாக சாலையெங்கும் சஞ்சரிக்க விரும்பும் இளைஞர்களை கவரும். இந்த அப்டேட்களுடன், இந்த விழாக்காலத்தில் Royal Enfield தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய மற்றும் சுறுசுறுப்பான க்ரூசிங் அனுபவத்தை வழங்க தயாராக உள்ளது.

புதிய Meteor 350 பைக் பற்றி ஐச்சர் மோட்டார்ஸ் லிமிடெட்  நிறுவனத்தின், நிர்வாக இயக்குனரும், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின், தலைமை செயல் அலுவலருமான B.கோவிந்தராஜன் அவர்கள் கூறுகையில், “Meteor 350 பைக் எப்போதும் ஒரு மோட்டார் பைக்காக தனித்து நிற்கிறது. இது காலத்தால் அழியாத வடிவமைப்பையும், நவீன காலத்தின் சௌகரியத்தையும் ஒருங்கிணைக்கிறது. இது எளிதான பயணத்தை விரும்புபவர்களுக்கு உற்ற துணையாக இருக்கிறது. அனைத்திலும் புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட இதன் சமீபத்திய வேரியண்ட்களில், ரம்மியமான பயணங்களின் மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக - புதிய வண்ணங்கள், புதுப்பிக்கப்பட்ட அம்சங்கள் மற்றும் மேம்பாடுகளை அறிமுகம் செய்துள்ளோம். இதன் மூலம் Meteor பைக்கின் வசீகரத்தை ஒரு படி மேலே கொண்டு சென்றுள்ளோம். Meteor 350 என்பது ஒரு மோட்டார்பைக் மட்டுமல்ல, பரந்த சாலையில் நிதானமான பயணங்களையும், மறக்கமுடியாத அனுபவங்களையும் வழங்கும் ஒரு லைஃப்ஸ்டைல் பிரகடனம் ஆகும். இந்த பண்டிகை காலத்தில் எங்கள் வாடிக்கையாளர்களுக்காக அனைவருக்கும் Meteor 350 பைக்கின் இந்த புதிய ரகத்தை அறிமுகம் செய்வதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்,” என்று கூறினார். 

புதிதாக புதுப்பிக்கப்பட்ட இந்த Meteor 350 ரகங்கள் நகரங்களில் குறைவாகவும், நெடுஞ்சாலைகளில் அதிகமாக பயணிக்கவும் விரும்புபவர்களை ஈர்க்கும்; வானத்தின் நிறம் மாறிக்கொண்டே இருப்பது போல, மறக்க முடியாத வண்ணமயமான பயணங்களை மேற்கொள்ள ஊக்குவிக்கிறது. இதன் சௌகரியமான மற்றும் ரிலாக்ஸான வாகனக் கட்டமைப்பு, அறிவார்ந்த முறையில் ஒருங்கிணைக்கப்பட்ட டிரிப்பர் நேவிகேஷன், LED ஹெட்லைட், மற்றும் அசிஸ்ட்-அன்ட்-ஸ்லிப் கிளட்ச் மற்றும் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய லீவர்கள் என பல்வேறு அம்சங்கள் காரணமாக - Meteor 350 பைக் மறக்கமுடியாத நீண்ட பயணங்களில் உங்களது உற்ற பார்ட்னராக வருகிறது.


ராயல் என்ஃபீல்டு Meteor 350 பைக் அறிமுகமானது முதல், உலகெங்கிலும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மீட்டியார் உரிமையாளர்களைக் கொண்ட ஒரு அர்ப்பணிப்புள்ள சமூகத்தை தனக்கென உருவாக்கியுள்ளது; மேலும், நம் நாட்டில் அதன் வாகனப் பிரிவில் பிரபலமாக விற்பனையான க்ரூஸர்களில் ஒன்றாகவும் உள்ளது. 65-க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்கப்படும் Meteor 350 மோட்டார் பைக் நிபுணர்களால் ஒரு முழுமையான ஈஸி க்ரூஸராக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஆண்டிலேயே மதிப்புமிக்க  'இந்தியன் மோட்டார்சைக்கிள் ஆஃப் தி இயர் 2021' விருது உட்பட உலகம் முழுவதும் பல பாராட்டுக்களையும் வென்றுள்ளது.

2025 Meteor 350 இப்போது வேரியண்ட்களை புதிய தீம்களும் பயனுள்ள அம்சங்களும் கொண்ட தனித்துவமான Genuine Motorcycle Accessories (GMA) கிட்டுகளுடன் சீராக ஒத்துபோகும் வகையில் வந்துள்ளது. Meteor 350 GMA இப்போது இரண்டு தனித்த தன்மையுள்ள தீம்களுடன் வருகிறது – Urban kit-இல் கருப்பு டிராக் ஹாண்டில்பார், கருப்பு வட்டம் வடிவிலான பார்-எண்ட் மிரர்கள், கருப்பு லோ ரைடர் சீட், டிண்டட் ஃபிளைஸ்கிரீன் உள்ளிட்டவை அடங்கும். Grand Tourer kit-இல் பழுப்பு டூரிங் ரைடர் மற்றும் பில்லியன் சீட், கருப்பு பிரீமியம் லாங்ஹால் பானியர் மற்றும் பானியர் ரெயில்கள், ரைடர் மற்றும் பில்லியனுக்கான டீலக்ஸ் ஃபுட்பெக்ஸ், கருப்பு டூரிங் ஹாண்டில்பார், கருப்பு LED ஃபாக் லைட்ஸ், மற்றும் கருப்பு வட்ட மிரர்கள்கள் ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளன, இதன் மூலம் இது ஒரு முற்றிலும் தனிப்பயனாக்கப்பட்ட (personalised) அனுபவமாக மாறுகிறது.

கவர்ச்சிகரமான விலையுடன் வெளிவந்துள்ள 2025 Meteor 350 பைக்குகளை வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள ராயல் என்ஃபீல்டு ஸ்டோர், ராயல் என்ஃபீல்டு செயலி, அல்லது அந்நிறுவனத்தின் இணையதளம் - www.royalenfield.com ஆகியவற்றின் மூலமாக ஆர்டர் செய்யலாம்.

மேலும், ராயல் என்ஃபீல்டு இப்போது அதன் மோட்டார் பைக்குகளுக்கு 7 ஆண்டுகள் வரை ரோடுசைடு அசிஸ்டண்ஸ் சாலை உதவியுடன் கூடிய ஒரு விரிவான நீட்டிக்கப்பட்ட வாரண்ட்டியை வழங்குகிறது; இது வாடிக்கையாளரின் நம்பிக்கை மற்றும் வாகன உரிமையாளராக அவரது அனுபவத்தை மேலும் மேம்படுத்துகிறது. இந்த நீட்டிக்கப்பட்ட கவரேஜ் – வழக்கமான 3 ஆண்டுகள் / 30,000 கிமீ அல்லது 40,000 கிமீ (650 cc மோட்டார் பைக்குகள்) என்கிற வாரண்ட்டியுடன் சேர்த்து, கூடுதலாக 4 ஆண்டுகள் அல்லது 40,000 கிமீ (எது முன்பு எட்டப்படுகிறது  அது பொருந்தும்) வாரண்ட்டியுடன் வருகிறது; இதனால் பயணிகளுக்கு ஒவ்வொரு பயணத்தின் போதும் நீண்ட கால உத்தரவாதம், மற்றும் மன நிம்மதி கிடைக்கிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu