நிதிசார் பாதுகாப்பு வழியாக, மக்களின் வாழ்க்கையில் திறனதிகாரத்தை வழங்கும் சேவையில் 25-வது ஆண்டில் இருக்கும் பிரபல காப்பீட்டு நிறுவனமான கோடக் மஹிந்திரா லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், கோடக் எட்ஜ் (முன்கூட்டியே வரையறுக்கப்பட்ட உத்தரவாத வருவாய்) என்ற பெயரில் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவதை அறிவித்திருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் நுகர்வோர்களின் மாறிவரும் நிதிசார் தேவைகளை எதிர்கொள்வதற்கென வடிவமைக்கப்பட்ட ஒரு விரிவான ஆயுள் காப்பீடு தீர்வாக இது இருக்கிறது.
வேகமாக மாறிவரும் இன்றைய உலகில், உடனடி கவனம் தேவைப்படுகின்ற பொறுப்புகளை நுகர்வோர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. வருவாயை முன்கூட்டியே குறித்த காலஅளவுகளில் வழங்குவதன் மூலம் இந்த அவசரத் தேவைகளை அவர்கள் எதிர்கொள்வதற்காக கோடக் எட்ஜ் காப்பீடு திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது; இது பாலிசிதாரர்களுக்கு ஒரு கூடுதல் வருமான வழியை அளிக்கிறது. வாழ்க்கையின் உடனடி முன்னுரிமைகளுக்கு பதில்வினையாற்றவும், பணம் செலவிடவும் தேவையின்போது வருவாயை வழங்கும் நல்ல திட்டமாக இது திகழ்கிறது.
உடனடியாக பணம் பெறும் அம்சத்தோடு உத்தரவாதம் அளிக்கப்பட்ட நீண்டகால வருவாயை ஒருங்கிணைத்திருக்கின்ற கோடக் எட்ஜ், குறித்த காலஅளவுகளில் நிர்ணயிக்கப்பட்ட தொகை வழங்கப்படுவதையும், முன்னதாகவே தொடங்குகிறவாறு ரெகுலர் வருவாயையும், உத்தரவாதமளிக்கப்பட்ட வருமானத்தையும் மற்றும் விரிவான ஆயுள் காப்பீட்டையும் ஒரு திட்டத்தில் ஒருங்கிணைத்து வழங்குகிறது.
கோடக் மஹிந்திரா லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு. மகேஷ் பாலசுப்ரமணியன் பேசுகையில், “நிதி தீர்வுகள் எங்கள் வாடிக்கையாளர்களின் வாழ்க்கையுடன் இணைந்து முன்னேற வேண்டும் என்ற நம்பிக்கையே எங்கள் 25 ஆண்டுகால பயணத்தை வழிநடத்தியுள்ளது. கோடக் எட்ஜ் என்பது, அத்தகையதொரு சிறப்பான தீர்வாகும்; நீண்டகால பாதுகாப்பு மற்றும் நிதிசார் நிலைத்தன்மையில் சமரசம் செய்து கொள்ளாமல், முன்கூட்டியே கிடைக்கும் வருவாய் ஆதரவை வழங்குவதாக இத்திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இனி வரும் எதிர்காலத்தைப் பொறுத்தவரை வாடிக்கையாளர்களின் தேவைகள் மீதான நல்ல புரிந்துணர்வுடன் புதுமையான உத்திகளை உருவாக்கி செயல்படுத்துவதில் நாங்கள் தொடர்ந்து உறுதியுடன் இருக்கிறோம்; அத்துடன் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் நிதிசார் பாதுகாப்பு கிடைக்கிறது என்ற நம்பிக்கை உணர்வுடன் வாழ்வதற்கான திறனை வழங்குவது எமது இலக்காகும்.” என்று கூறினார்.
கோடக் லைஃப் நிறுவனத்தின் செயல்பாடானது, நிதிசார் நிலைத்தன்மை மீதும், வாடிக்கையாளர் சேவை மீதும் அது கொண்டிருக்கும் சிறப்பு கவனத்தையும், அக்கறையையும் பிரதிபலிக்கிறது. 2025 மார்ச் 31 நிலவரப்படி, நிறுவனமானது 98.6%^ கிளைம் தீர்வு விகிதத்தை, விசாரணை செய்யப்படாத கிளைம்களுக்கு ஒருநாள் தீர்வையும், 2.86# எனும் தீர்வுத்திறன் விகிதத்தையும் பராமரித்தது.
0 கருத்துகள்