இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியில் உலகளாவிய நிறுவனமாக முன்னணியில் இருக்கும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் [TVS Motor Company], இன்று TVS Raider Super Squad Edition-ல் புதிய வாகனங்களைச் அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதிலும் பெரும் வரவேற்பைப் பெற்ற மார்வெலின் மிகவும் பிரபலமான இரண்டு சூப்பர் ஹீரோக்களான டெட்பூல் மற்றும் வுல்வரின் [Deadpool & Wolverine] ஆகிய இருவரிடமிருந்து உத்வேகம் பெற்று புதிய வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த புத்தம் புதிய பதிப்பு TVS Raider வாகன வரிசையில் கம்பீரமான வடிவமைப்பு மற்றும் சாலையில் செல்லும் போது உங்களது ஆளுமையைப் பிரதிபலிக்கும் தோற்றம் என சூப்பர் ஸ்குவாட் வாகன வரிசையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது.
புதுப்பிக்கப்பட்ட இப்பதிப்பு புகழ்பெற்ற மார்வெல் கதாபாத்திரங்களான டெட்பூல் மற்றும் வுல்வரின் ஆகிய இரு சூப்பர் ஹீரோக்களினால் ஈர்க்கப்பட்டு கம்பீரமான தோற்றத்தை வெளிப்படுத்தும் புதிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 125 cc பிரிவில், மோட்டார் சைக்கிளின் தனித்துவமான அடையாளத்தை வெளிப்படுத்துகிறது. புதிய TVS Raider SSE சிலிர்க்க வைக்கும் வேகம் மற்றும் அபார செயல்திறனை வெளிப்படுத்தும் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், சக்திவாய்ந்த 3-வால்வு எஞ்சின், 6,000 RPM -ல் 11.75 Nm -ன் சிறந்த முடுக்கம் மற்றும் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்குவாட் பதிப்பு, இப்போது மேம்பட்ட முடுக்கத்திற்காக பூஸ்ட் மோட் [Boost Mode] உடனான iGO assist அம்சத்துடன் அறிமுகமாகியுள்ளது. மேலும் GTT (Glide Through Technology) தொழில்நுட்பம் குறைந்த வேகத்தில் பயணிக்கும் போது கூட தங்கு தடையில்லாமல் எளிதில் பயணிக்கவும், மேம்படுத்தப்பட்ட எரிபொருள் செயல்திறனைப் பெறவும் உதவும். இது 85+ அம்சங்களுடன் முழுமையாக இணைக்கப்பட்ட ரிவர்ஸ் LCD கிளஸ்டரையும் [fully connected reverse LCD cluster with 85+ features] கொண்டுள்ளத,. இவையனைத்தும், அதிநவீன புதுமைகளை ஒருங்கிணைத்து, சிலிர்ப்பூட்டும் சவாரி அனுபவத்தை வாகன உரிமையாளர்களூக்கு அளிக்கின்றன.
TVS Raider ஆகஸ்ட் 2023-ல் அயர்ன் மேன் [Iron Man] மற்றும் ப்ளாக் பேந்தர் [Black Panther] என மார்வெல்லின் இரு சூப்பர் ஹீரோக்களின் கம்பீரத்தையும், ஆற்றலையும் பிரதிபலிக்கும் வகையில் மார்வெல் கருத்தாக்க வடிவமைப்புடன் அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் மார்வெல் பதிப்புகளை அறிமுகப்படுத்திய இந்தியாவின் முதல் மோட்டார் சைக்கிள் என்ற பெருமையை TVS Raider பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த வகை வாகன பதிப்புகள் இன்றைய இளம் இருசக்கர வாகன ப்ரியர்களை அதன் தனித்துவமான ஸ்டைலிங் மற்றும் அபாரமான செயல்திறன் மூலம் கவர்ந்தன. இதையடுத்து மார்வெல் உடனான வெற்றிகரமான கூட்டுசெயல்பாட்டை வலுப்படுத்தும் வகையில், டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஜென் Z தலைமுறையினருக்கு ஏற்றவாறு அதிநவீன வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட பொறியியல் அம்சங்கள் மூலம் மக்களின் மனங்களைக் கவர்ந்த சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களை தொடர்ந்து உயிர்ப்பிக்கிறது. தங்களுடைய மோட்டார் சைக்கிள்களுக்கென ஒரு தனித்துவமான ஆளுமை, மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் கம்பீரமான பாணி போன்றவற்றை விரும்பும் இரு சக்கர வாகன ப்ரியர்களுக்காக இந்த புதிய மேம்பாட்டு அம்சங்கள் வடிவமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
புதிய TVS Raider Super Squad Edition விலை ₹99,465 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி). இந்த மாதம் முதல் அனைத்து டிவிஎஸ் மோட்டார் நிறுவன டீலர்ஷிப்களிலும் கிடைக்கும்.
0 கருத்துகள்