டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அறிமுகப்படுத்தும் TVS ORBITER!

இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனப் பிரிவுகளில் உலகளாவிய முன்னணி நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் (TVS Motor Company (TVSM)), தனது புதிய மின்சார வாகனமான TVS Orbiter -ஐ அறிமுகப்படுத்துவதாக அறிவித்திருக்கிறது. அன்றாட பயணத்தை மறுவரையறை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் டிவிஎஸ் ஆர்பிட்டர் [TVS Orbiter], ஒரு முறை சார்ஜ் செய்தால் 158 கிமீ வரை பயணிக்கக்கூடிய IDC வரம்பை அளிக்கிறது. மேலுன் க்ரூஸ் கண்ட்ரோல், 34-லிட்டர் பூட் ஸ்பேஸ், ஹில் ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் மேம்பட்ட இணைப்பு தொழில்நுட்ப அம்சங்கள் என இவ்வாகனப் பிரிவிலேயே முதல் அம்சங்களை அதிகம் வழங்குகிறது. மேலும், இருசக்கர வாகன தொழில்துறையில் முதல் முறையாக 14” முன் சக்கரத்துடன் TVS Orbiter அறிமுகமாகியுள்ளது.  இதன் விலை ₹99,900 (எக்ஸ்-ஷோரூம், PM e-Drive திட்டம், பெங்களூரு மற்றும் புது தில்லி உட்பட) என்ற கவர்ச்சிகரமான விலையில் ஈடுஇணையற்ற செளகரியம், மேம்பட்ட வசதி மற்றும் அபாரமான செயல்திறனை வழங்குகிறது.

TVS Orbiter இணைப்பு தொழில்நுட்பத்தினால் செயல்படும் மொபைல் செயலி, முன்பக்கம் அட்டகாசமான வைசருடன் முன் எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் போன் அழைப்பை அறிவிக்கும் திரையுடன்  கூடிய வண்ண எல்சிடி கிளஸ்டர் [connected mobile app, front LED headlamp with visor, coloured LCD cluster with incoming call display] போன்ற மேம்பட்ட அம்சங்களுடன் டிவிஎஸ் ஆர்பிட்டர் அட்டகாசமாக களமிறங்கியுள்ளது.. இதன் 3.1 கிலோவாட் பேட்டரி மற்றும் மேம்படுத்தப்பட்ட ஏரோடைனமிக் ஆற்றல், தங்கு தடையில்லாத நிலையான, அபாரமான செயல்திறனுடன் கூடிய நீட்டிக்கப்பட்ட வரம்பை வழங்குகிறது.

டிவிஎஸ் ஆர்பிட்டர் மின்சார வாகனத்தை அறிமுகப்படுத்தியபோது பேசிய டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் இந்தியா 2W பிஸினெஸ் பிரிவின் தலைவர் திரு. கௌரவ் குப்தா [Mr. Gaurav Gupta, President, India 2W Business, TVS Motor Company] கூறுகையில், “டிவிஎஸ் மோட்டர் நிறுவனத்தைப் பொறுத்தவரையில் நாங்கள், நவீன தொழில்நுட்பம் மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட புதுமையான தயாரிப்புகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். எங்கள் பொறியியல் நிபுணத்துவம் மற்றும் மேம்பட்ட திறன்களைப் பயன்படுத்தி, தரம், செயல்திறன் மற்றும் பாதுகாப்பு போன்ற அம்சங்களில் உலகளாவிய அளவுகோல்களை நிர்ணையிக்கும் தயாரிப்புகளை நாங்கள் உருவாக்கி வருகிறோம். டிவிஎஸ் ஆர்பிட்டர் வாகனத்துடன், நாங்கள் எங்கள் மின்சார வாகன பட்டியலை மேலும் விரிவுபடுத்தி இருக்கிறோம். மேலும் இந்தியாவில் அன்றாட மின்சார போக்குவரத்தை மக்கள் விருப்பமுடன் பின்பற்றுவதை, எங்களது தயாரிப்புகளின் மூலம் நாங்கள் விரைவுப்படுத்தி வருகிறோம். "எங்கள் உலகளாவிய செயல்பாடுகளை வலுப்படுத்துவதற்கும், தூய்மையான, நிலையான மற்றும் புத்திசாலித்தனமான எதிர்காலத்திற்கு பங்களிக்கும் தீர்வுகளை வழங்குவதற்கும் நாங்கள் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம்." என்றார்.

டிவிஎஸ் ஆர்பிட்டர் அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் சீனியர் வைஸ் பிரசிடெண்ட் - ஹெட், கம்மூட்டர் & இவி பிசினெஸ் & ஹெட் கார்பொரேட் ப்ராண்ட் & மீடியா திரு. அனிருத்தா ஹால்டார் [Mr. Aniruddha Haldar, Senior Vice President - Head Commuter & EV Business and Head Corporate Brand & Media, TVS Motor Company], கூறுகையில் "மின்சார வாகனத் துறையில் எங்கள் தலைமைத்துவத்தை ஒருங்கிணைப்பதற்கும், நம்பிக்கை மற்றும் புதுமையின் வலுவான அடித்தளத்துடன் இந்தியாவின் மின்சார வாகனப் பயணத்தை இயக்குவதற்கும் நாங்கள் அர்ப்பணிப்போடு செயல்பட்டு வருகிறோம். எங்கள் வாடிக்கையாளர்களிடை அதிகரித்து வரும் எதிர்பார்புகள் மற்றும் தேவைகளைப் பூர்த்ஹ்தி செய்யும் வகையில் அறிமுகமாகி இருக்கும்  டிவிஎஸ் ஆர்பிட்டர்,  அன்றாட நகர்ப்புற பயணத்தை மறுவரையறை செய்வதில் எங்கள் அடுத்த கட்ட முன்னேற்றத்தை குறிக்கிறது. இது மேம்பட்ட தொழில்நுட்பம், ஏரோடைனமிக் ஆற்றல், விசாலமான வசதி மற்றும் இவ்வாகனப் பிரிவிலேயே முதல்  முறையாக அறிமுகமாகும் அம்சங்களுடன் அன்றாட பயன்பாட்டின் பல்வேறு எதிர்பார்புகளை  பூர்த்தி செய்கிறது. டிவிஎஸ் ஆர்பிட்டர் இந்தப் பிரிவில் புதிய அளவுகோல்களை அமைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், இது நிலையான வாகனப் போக்குவரத்தை எளிதில் அடையக்கூடியதாகவும், ஆர்வமுள்ளதாகவும் மாற்றும்." என்றார்.

அபாரமான செயல்திறன் மற்றும் வாகன கட்டுப்பாட்டுக்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது

3.1 kWh பேட்டரியுடன் பொருத்தப்பட்ட TVS Orbiter, ஒரு முறை சார்ஜ் செய்தால் 158 கிமீ வரை பயணிக்க கூடிய IDC வரம்பை வழங்குகிறது. இதன் மேம்படுத்தப்பட்ட ஏரோடைனமிக் திறன் சாலைகளில் செல்லும் போது எந்தவிதமான இடையூறும் இல்லாமல் கட்டுகோப்பாக வாகன செல்வதையும், மேம்பட்ட செயல்திறனை வழங்குவதையும் உறுதி செய்கிறது.  அதே நேரத்தில் பின்புறம் டைனமிக் ரியர் கான்ஃபிகுரேஷன் உடன் இணைக்கப்பட்ட 14” முன் சக்கரம்,  நகர்ப்புற பயணத்தின் போது சாலையில் வழுக்காத வகையில் செல்வதையும், எளிதில் கையாள்வதையும், போக்குவரத்து நெரிசலிலும் கூட இலகுவாக ஓட்டுவதையும் உறுதி செய்கின்றன.   இதன் அப்-ரைட் எர்கானாமிக் ஹேண்டில்பார், பயணத்தை மேலும் சுவாரஸ்யமானதாக மாற்றுவதோடு, வாகனத்தின் மீது நம்முடைய கட்டுப்பாட்டையும் உறுதி செய்கிறது.

அசத்தலான வடிவமைப்பு தத்துவம்

டிவிஎஸ் ஆர்பிட்டர் அசர வைக்கும் அழகியல் மற்றும் அபாரமான செயல்பாடு இவை இரண்டுக்கும் இடையில் ஒரு சரிசமமான ஒருங்கிணைப்பாக அமைந்திருக்கிறது. 845 மிமீ நீளமான இருக்கை சவாரி செய்பவர் மற்றும் ப்ன்னிருக்கையில் அமர்ந்திருப்பவர் இருவருக்கும் செளகரியமான பயணத்தை உறுதி செய்கிறது. அதே நேரத்தில் 290 மிமீ ஸ்ட்ரெயிட்-லைன் ஃபுட்போர்டு போதுமான இடவசதியுடன் லெக் ரூம்மை உறுதி செய்கிறது. அகலமான மற்றும் அப்-ரைட் ஹேண்டில்பார் இலகுவாக ஓட்டுவதற்கான வாய்ப்பை  வழங்குகிறது, இதன் மூலம் அன்றாடப் பயணங்களை சிரமமின்றி செய்ய உதவுகிறது. இதன் 34 லிட்டர் இருக்கைக்கு அடியில், மிகப்பெரும் சேமிப்பகம் உள்ளது.  இந்தில் இரண்டு ஹெல்மெட்களை வைக்குமளவிற்கு தாராளமான இடவசதி உள்ளது.

நவீன தொழில்நுட்பம் & இணைப்பு தொழில்நுட்ப அம்சங்கள்

டிவிஎஸ் ஆர்பிட்டர் ஸ்மார்ட்டான இணைப்பு தொழில்நுட்ப சவாரி அனுபவத்தை வழங்குகிறது,:

  • முன்னெச்சரிக்கை பாதுகாப்பு [Proactive safety]: விபத்து, கீழே விழுதல், திருட்டு எதிர்ப்பு, ஜியோ-ஃபென்சிங் மற்றும் டைம்-ஃபென்சிங் எச்சரிக்கைகள்.[ Crash, fall, anti-theft, geo-fencing, and time-fencing alerts]
  • எப்போதும் உங்களது கட்டுப்பாட்டில் [Always in control]: மொபைல் செயலின் மூலமாக நாம் தொலைவிலிருந்தபடியே பேட்டரி சார்ஜ் மற்றும் ஓடோமீட்டரை சரிபார்ப்பது வரை கண்காணிக்கலாம்.
  • ஸ்மார்ட் நேவிகேஷன் [Smart navigation]: தனிப்பயனாக்கக்கூடிய அமைப்புகளுடன் திருப்பம் முதல் அடுத்த திருப்பம் என முழுமையாக வழிகாட்டும் வசதி. 
  • எப்போதும் இணைந்திருங்கள் [Stay connected]: எல்சிடி டிஜிட்டல் கிளஸ்டரில் அழைப்புகள், எஸ்எம்எஸ் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட எச்சரிக்கைகள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள முடிவதால் எப்போதும் இணைப்பிலேயே இருக்கலாம்.
  • ரைடர் நம்பிக்கை [Rider confidence]: ஹில் ஹோல்ட் அசிஸ்ட், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் பார்க்கிங் அசிஸ்ட் போன்ற அம்சங்களால் நம்பிக்கையுடன் வாகன ஓட்டும் அனுபவத்தை உணரலாம்.
  • அப் டு டேட் எப்போதும்: தொடர்ந்து தகவல்களை அளிக்கும் OTA அப்டேட்கள்
  • டுயல் மோட் [Dual modes]:  நீண்ட தூரம் பயணிக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் ரிஜெனரேட்டிவ் ப்ரேக்கிங், ஈகோ மற்றும் பவர் ஆகிய இரு மோட்களில் இருக்கின்றன. 

உயர் பாதுகாப்பு & திருப்தியளிக்கும் உத்தரவாதம்

டிவிஎஸ் ஆர்பிட்டர் டைம் ஃபென்ஸ், நிகழ்நேர இருப்பிட கண்காணிப்பு, வாகனம் இருக்குமிடத்தை காட்டுதல், விபத்து மற்றும் தவறி விழ்வது குறித்த எச்சரிக்கைகள், அவசர அறிவிப்புகள், ஜியோ -ஃபென்சிங், திருட்டை தடுக்கும் எச்சரிக்கை மற்றும் டோயிங் எச்சரிக்கைகள் [time fence, live location tracking, navigate-to-vehicle, crash and fall alerts, emergency notifications, geofencing, anti-theft and towing alerts] உள்ளிட்ட இணைப்பு தொழில்நுட்ப அம்சங்களின் மேம்பட்ட தொகுப்பின் மூலம் பாதுகாப்பை மறுவரையறை செய்கிறது.  வாகனம் ஓட்டுபவரின் விருப்பங்களின் அடிப்படையில் அவர்களுக்கான தேர்வுகளை அளிக்கும் இண்டியூட்டிவ் சவாரி அனுபவத்தை உறுதி செய்கிறது. 169 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், ஒருங்கிணைந்த குறிகாட்டிகளுடன் கூடிய LED ஹெட்லேம்ப், எட்ஜ்-டு-எட்ஜ் காம்பினேஷன் லேம்ப்கள், USB சார்ஜிங் போர்ட் மற்றும் வலுவான பாடி பேலன்ஸ் [ground clearance, LED headlamp with integrated indicators, edge-to-edge combination lamps, a USB charging port,  robust body balance] ஆகியவற்றுடன், டிவிஎஸ் ஆர்பிட்டர் ஒவ்வொரு சவாரியிலும் ஒப்பிடமுடியாத நம்பிக்கையையும் உறுதியையும் உணர வைக்கிறது.

அசத்தலான வண்ணங்கள்:

டிவிஎஸ் ஆர்பிட்டர் நியான் சன்பர்ஸ்ட், ஸ்ட்ராடோஸ் ப்ளூ, லூனார் கிரே, ஸ்டெல்லர் சில்வர், காஸ்மிக் டைட்டானியம் மற்றும் மார்ஷியன் காப்பர் [Neon Sunburst, Stratos Blue, Lunar Grey, Stellar Silver, Cosmic Titanium, and Martian Copper.] போன்ற அற்புதமான வண்ணகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu