டிவிஎஸ் அப்பாச்சி [TVS Apache]-யின் பந்தயப் பாரம்பரியம் வெற்றிகரமான 20 ஆண்டுகளைக் கடந்திருப்பதைக் கொண்டாடும் வகையில், இந்தியாவின் முன்னணி ஃபேக்டரி ரேசிங் குழு, TVS Racing ARE GP-ன் இரண்டாவது சீசனை தொடங்க தயாராகி வருகிறது. TVS Racing ARE GP-ன் இராண்டாம் பதிப்பு இந்த ஆண்டு செப்டம்பர் 15, 2025-ல் நடைபெறவுள்ளது. முதல் பந்தய போட்டிக்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்பின் காரணமாக, இரண்டாம் பதிப்பு சர்வதேச தளத்திற்கான பந்தயமாக விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இது டிவிஎஸ் அப்பாச்சியின் பந்தய குணாதிசயம் மற்றும் புதுமை அம்சங்களின் 20 ஆண்டுகால வெற்றிப்பயணத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. இந்த வருட போட்டியானது மெக்சிகோ, கொலம்பியா, நேபாளம் என மூன்று சர்வதேச நாடுகள் மற்றும் இந்தியா முழுவதும் 17 நகரங்களில் நடக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் இந்த சீசனின் இறுதிப்போட்டியான கிராண்ட் பைனல் 2026 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட்யில் நடைபெறுகிறது.
டிவிஎஸ் ரேஸிங், இந்த முறை டிவிஎஸ் ஒஎம்சி இந்தியா சேம்பியன்ஷிப் 2025 [TVS OMC India Championship 2025] -ல் ஊடகங்களில் பணிப்புரியும் பெண்களுக்கான பிரத்தியேகமாக பந்தயப் பிரிவை அறிமுகப்படுத்தப்படுகிறது. மோட்டார் பந்தயத்தை ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவருக்குமான பந்தயமாக முன்னெடுக்கும் டிவிஎஸ் ரேசிங் பாரம்பரியத்தின் முன்னோடித்துவமான குணாதிசயத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் இம்முயற்சி அமைந்திருக்கிறது. 2016-ல் அனைவரும் பெண்களாக இருக்கும் உலகின் முதல் ரேசிங் அணியை அறிமுகப்படுத்தியது. மேலும், டிவிஎஸ் ஓஎம்சி பெண்கள் பிரிவு [TVS OMC Women’s Category] போன்ற முயற்சிகளின் மூலம் அவர்களின் திறமையை வளர்த்தெடுத்து வருகிறது. இதன் மூலம் ரேசிங்கில் பெண்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதில் டிவிஎஸ் ரேசிங் தொடர்ந்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இருசக்கர வாகன பந்தய வீராங்கனைகள் தேசிய அளவிலான பந்தயத்தில் பங்கேற்பதற்கான தனியான மேடையாகவும் இந்தப் போட்டி முக்கியத்துவம் பெற்றுவருகிறது.
டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் ப்ரீமியம் பிஸ்னஸ் பிரிவின் தலைமை நிர்வாகி விமல் சம்ளி [Vimal Sumbly, Head - Premium Business, TVS Motor Company] பேசும்போது, ”டிவிஎஸ் மோட்டார் கம்பெனியில், எங்களது ரேசிங் குணாதிசயம் எங்களுக்கு உற்சாகம் அளிப்பதோடு, புதுமைக்கும் அதற்கான தேவைக்குமான உத்வேகத்தைக் கொடுக்கிறது. TVS Apache -ன் 20 புகழ்பெற்ற ஆண்டுகளைக் கொண்டாடும் வேளையில், TVS Racing ARE GP-ன் சர்வதேச அளவிலான விரிவாக்கம், எல்லைகளைத் தாண்டி புதிய வரையறைகளை உருவாக்கும் எங்கள் பயணத்தில் இயல்பாக நிகழும் முன்னேற்றமாக அமைந்திருக்கிறது. ஊடகங்களில் பணிப்புரியும் பெண்களுக்கான பிரிவின் அறிமுகத்துடன், இந்த தளத்தை பெண்களுக்குமான போட்டியாகவும், பன்முகத்தன்மை கொண்டதாகவும் மாற்றுகிறோம். TVS Apache ப்ரியர்களுக்கும், தொழில்முறை பந்தயவீரர்களுக்கான அனுபவத்தை வழங்குவதன் மூலம் பந்தயத்தை எல்லோருக்குமானதாக மாற்றும் நோக்கத்துடன் TVS Racing ARE GP உருவாக்கப்பட்டது. இன்று, உலகளாவிய ஒன்றாக அது வரவேற்பைப் பெற்றிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் TVS Racing, துடிப்பான, அப்பாச்சி என்ற உணர்வினால் இணைக்கப்பட்ட, பந்தய ப்ரியர்களுக்கான சமூகத்தை உருவாக்கி இருக்கிறது. இந்திய மோட்டார் விளையாட்டுகளை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்வதில் தனக்கென ஒரு முக்கியத்துவத்தைப் பெற்று இருக்கிறது.’’ என்றார்.
2007-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட TVS Racing ARE GP சாம்பியன்ஷிப், TVS Apache உரிமையாளர்களுக்கு, TVS Apache வாகன வரிசையின் மூலம் பாதுகாப்பான, தொழில்முறை பந்தய உணர்வையும், உற்சாகத்தையும் அளிக்கும் தளத்தை உருவாக்கி கொடுத்திருக்கிறது. இது அவர்களின் என்ஜின்கள் அசாத்தியமான செயல்திறனை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. திறன்களையும் வெளிப்படுத்துகிறது. TVS Racing ARE GP-ன் உலகளாவிய விரிவாக்கம், இந்த தளத்தை ஒரு முதன்மையான சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப்பாக மாற்றும் TVS Racing-ன் நீண்டகால தொலைநோக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. TVS Apache பிராண்டின் கீழ் உலகத் தரம் வாய்ந்த பந்தய உற்சாகத்தை பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. பல ஆண்டுகளாக, TVS Racing, உலகத் தரம் வாய்ந்த வழிகாட்டுதல், பந்தயத்திற்கான உணர்வை அளிக்கும் ரேஸ்-டியூன் செய்யப்பட்ட இயந்திரங்கள் மற்றும் உயர்மட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியிருப்பதன் மூலம், பல்வேறு பிரிவுகளில் 3,000 க்கும் மேற்பட்ட ரைடர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது.
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான பந்தய பாரம்பரியத்துடன், டிவிஎஸ் ரேசிங், டிவிஎஸ் அப்பாச்சி வாகன வரிசையின் பரிணாமத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளது, இது சமீபத்தில் உலகம் முழுவதும் 6 மில்லியன் மகிழ்ச்சியான வாடிக்கையாளர்கள் என்ற மாபெரும் மைல்கல் எண்ணிக்கையைக் கடந்திருக்கிறது. ஒரு முன்னணி பிரீமியம் மோட்டார் சைக்கிள் பிராண்டாக, டிவிஎஸ் அப்பாச்சி செயல்திறன், தொழில்நுட்பம் மற்றும் புதுமை ஆகியவற்றில் தொடர்ந்து புதிய அளவுகோல்களை உருவாக்கி வருகிறது.
0 கருத்துகள்