உலகின் ஃபேவரிட் ஜுவல்லராகவும், மக்களின் நம்பிக்கைக்குரிய ஜுவல்லரி நிறுவன பெயராகவும் இருக்கும் ஜோய்ஆலுக்காஸ், மார்த்தாண்டத்தில் தனது முதல் ஷோரூமை திறந்துள்ளது.
இந்த ஷோரூமை, தமிழ்நாடு அரசின் பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் இந்திய நடிகையும் மாடலுமான மாளவிகா சர்மா ஆகியோர் திறந்து வைத்தார். விழாவில் விளவங்கோடு எம்.எல்.ஏ.,தாரகை கத்பர்ட், குளித்துறை நகராட்சி தலைவர் பொன் ஆசை தம்பி, குளித்துறை நகராட்சி வார்டு கவுன்சிலர் செல்வகுமாரி, ஜோய் ஆலுக்காஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் தாமஸ் மேத்யூ, மார்த்தாண்டம் வணிகர்கள் சங்கத் தலைவர் சுந்தர்ராஜ், கிள்ளியூர் ஒன்றியச் செயலாளர் டி.பி.ராஜன், சுமி அமீர் மற்றும் ஜோய் ஆலுக்காஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹென்றி ஜார்ஜ் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
திறப்பு விழாவை சிறப்பிக்கும் வகையில், ஜோய்ஆலுக்காஸ் வைரம் மற்றும் அன்கட் வைர நகைகளின் மதிப்பில் ஃபிளாட் 25% தள்ளுபடியை அளிக்கிறது. மேலும் ரூ.1,00,000 மற்றும் அதற்கு மேற்பட்ட தங்கம் மற்றும் பிரிஸ்ஸியஸ் நகைகள் வாங்குபவர்களுக்கு 5 கிராம் வெள்ளிக்கட்டி இலவசமாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பர்ச்சேஸ் உடனும் ஒரு உறுதியான இலவச பரிசும் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும், இந்த சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு காலத்துக்குள் மட்டுமே வழங்கப்பட உள்ளது.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த ஷோரூம், சர்வதேச தரத்தில் வடிவமைக்கப்பட்ட ஒன்றாகும். அதிநவீன உட்கட்டமைப்பு, விசாலமான இட வசதி, நவீன தோற்றம் மற்றும் உலகத் தரத்துக்கேற்ப உருவாக்கப்பட்ட வாடிக்கையாளர் சேவை போன்றவை உங்கள் ஜுவல்லரி ஷாப்பிங் அனுபவத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும். தங்க நகைகள், திருமண நகைகள், வைரங்கள் மற்றும் பிரிஸ்ஸியஸ் ஜுவல்லரி என அனைத்தும் உலகின் முதன்மையான டிசைன்களில், சர்வதேச மற்றும் பாரம்பரிய கலெக்ஷன்களில் கிடைக்கிறது.
நிகழ்ச்சி குறித்து ஜோய் ஆலுக்காஸ் குழுமத் தலைவர் டாக்டர். ஜோய் ஆலுக்காஸ் கூறுகையில், “கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் கைவினைத்திறனுக்கு பெயர்பெற்ற மார்த்தாண்டத்தில் எங்கள் முதல் ஷோரூமைத் திறக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் சிறந்த தரமும் சேவையும் வழங்குவதே எங்கள் இலக்கு. இந்த கொண்டாட்டத்தில் அனைவரும் பங்கேற்று ஜோய்ஆலுக்காஸில் ஷாப்பிங் செய்வதன் மகிழ்வை அனுபவிக்க அழைக்கிறோம்” என்று தெரிவித்தார்.
ஜோய்ஆலுக்காஸ் தனது தனிச்சிறப்பு, நம்பிக்கைக்குரிய தரம் மற்றும் நவீன சேவையுடன், மார்த்தாண்டம் மக்களுக்கு ஒரு புதிய நகை ஷாப்பிங் அனுபவத்தை வழங்க தயாராக உள்ளது.
சலுகைகள் குறிப்பிட்ட நாட்கள் வரை மட்டுமே செல்லுபடியாகும். மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள ஜோய்ஆலுக்காஸ் ஷோரூமை அணுகலாம்.
0 கருத்துகள்