மதிப்புமிக்க பி.சி. ஜிண்டால் குழுமத்தின் ஒரு பகுதியும், இந்தியாவின் முன்னணி எஃகு பொருட்கள் உற்பத்தியாளர்களில் ஒன்றான ஜிண்டால் (இந்தியா) லிமிடெட், அதன் முதன்மை சில்லறை விற்பனையாளர் சந்திப்பான 'மிலாப்'-இன் இரண்டாவது பதிப்பை தமிழ்நாட்டின் சேலத்தில் வெற்றிகரமாக நடத்தியது. ஏ.வி. தாமஸ் & கம்பெனி லிமிடெட் உடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சந்திப்பு, மூத்த நிறுவன அதிகாரிகளையும் கிட்டத்தட்ட 60 சில்லறை விற்பனையாளர்களையும் ஒன்றிணைத்து, பிராந்தியத்தில் ஈடுபாடு மற்றும் கூட்டாண்மைகளை வலுப்படுத்த ஒரு தளத்தை வழங்கியது.
பிராந்திய ரீதியான தொடர்புகளில் தொடர்ந்து கவனம் செலுத்துவதன் ஒரு பகுதியாக, ஜிண்டால் (இந்தியா) லிமிடெட் இந்தியா முழுவதும் சில்லறை விற்பனையாளர் சந்திப்புகளை நடத்தி வருகிறது. சேலம் பதிப்பில், செயல்திறன் மற்றும் நீடித்து உழைக்கும் தன்மை ஆகியவற்றில் வலுவான கவனம் செலுத்தி, தொழில்துறை சார்ந்த தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட மேம்பட்ட பூசப்பட்ட எஃகு தயாரிப்புகளின் தொகுப்பை நிறுவனம் காட்சிப்படுத்தியது.
நிகழ்வின் சிறப்பம்சங்களில் ஒன்று, ஜிண்டால் (இந்தியா) லிமிடெட்டின் புதுமையான சலுகையான ஜிண்டால் சப்ராங் ஆகும். இது எஃக்கின் அழகிய தோற்றத்தை பல்வகை வண்ணத் தேர்வுகளின் மூலம் மேம்படுத்துகிறது. வெளிப்புற சூழலில் மிகச்சிறந்த துருப்பிடித்தன்மை எதிர்ப்பு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் சில்லறை விற்பனையாளர் கூட்டாளர்களுக்கு ஜிண்டால் நியூகலர் ப்ளஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. இது முன்னேற்றமான தொழில்நுட்பம், அழகியல் பல்வகைத் தன்மை மற்றும் நீண்ட நாள் நிலைத்தன்மையை ஒருங்கிணைத்தவை ஆகும். சிறப்பான பூச்சு செயல்முறை கொண்ட இந்த தயாரிப்பு துருபிடித்தன்மையையும், நிறம் மங்குவதையும் எதிர்த்து அதிகப்படியான பாதுகாப்பு அளிக்கிறது.
"எஃகு தயாரிப்புகள் உற்பத்தியில் சந்தைத் தலைவராக எங்கள் நிலையைக் கருத்தில் கொண்டு, புதிய சந்தைகளில் விரிவடைவதிலும், ஏற்கனவே உள்ள சந்தைகளில் எங்கள் தடத்தை மேலும் வலுப்படுத்துவதிலும் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். சேலம் எங்களுக்கு ஒரு முக்கியமான சந்தை ஆகும். ஆகையால் இங்கு 'மிலாப்' இரண்டாம் பதிப்போடு மீண்டும் வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். பல ஆண்டுகளாக, தமிழ்நாடு முழுவதும் வலுவான கூட்டாண்மைகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம். மேலும் இந்த நிகழ்வு எங்கள் மதிப்புமிக்க சில்லறை விற்பனையாளர்களுடன் நேரடியாக ஈடுபடுவதன் மூலம் அவர்களிடனான உறவுகளை ஆழப்படுத்த உதவுகிறது. ஜிண்டால் சப்ராங் மற்றும் நியூகலர்+ போன்ற புதுமைகளுடன், நாங்கள் தயாரிப்பு தேர்வுகளை விரிவுபடுத்துவது மட்டுமல்லாமல், உயர்தர தீர்வுகளுடன் வளர்ந்து வரும் நுகர்வோர் தேவைகளைப் பூர்த்தி செய்ய எங்கள் கூட்டாளர்களுக்கு அதிகாரம் அளிக்கிறோம்," என்று ஜிண்டால் (இந்தியா) லிமிடெட்டின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, ஜிண்டால் (இந்தியா) லிமிடெட் நிறுவனத்தின் பிரதிநிதிகள், பிராந்தியத்திற்கான நிறுவனத்தின் திட்டங்கள் குறித்து விவாதித்தனர். சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து நேரடி கருத்துக்களை சேகரிக்கப்பட்டது. மற்றும் அவர்கள் எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் பற்றி கேட்டறிந்தனர். இந்த சந்திப்பு, ஜிண்டால் (இந்தியா) லிமிடெட் சில்லறை விற்பனையாளர் கூட்டாளர்களுடன் இணையவும், பிராந்தியம் முழுவதும் வளர்ச்சியை அதிகரிக்கவும், நம்பகமான கூட்டாளராக நிறுவனத்தின் நிலையை மேலும் வலுப்படுத்தவும் உதவுகிறது.
சமீபத்தில், ஒடிசாவின் தென்ன்கனலில் ஒரு பசுமை - கள எஃகு உற்பத்தி ஆலையை அமைப்பதற்காக, நிறுவனம் அதன் முழு உரிமையாளரான ஜிண்டால் இந்தியா ஸ்டீல் டெக் லிமிடெட் (JISTL) மூலம் ஒப்புதல் கடிதத்தை (LoA) பெற்றது. ஜிண்டால் (இந்தியா) லிமிடெட்டின் JISTL, 2030 ஆம் ஆண்டுக்குள், திட்டத்தின் முதல் கட்டத்தில் ரூ.3,600 கோடி முதலீட்டையும், மாநிலத்தில் மொத்தம் ரூ.15,000 கோடியையும் மூன்று கட்டங்களாக முதலீடு செய்யும்.
1952 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஜிண்டால் (இந்தியா) லிமிடெட், இந்தியாவின் முன்னணி நிறுவனமான பி.சி. ஜிண்டால் குழுமத்தின் ஒரு பகுதியாகும். ரூ.18,000 கோடிக்கும் அதிகமான வருவாய் ஈட்டும் இந்தக் குழு, பேக்கேஜிங் பிலிம்கள், எரிசக்தி மற்றும் எஃகு பொருட்கள் போன்ற பல்வேறு வணிகங்களில் ஈடுபட்டுள்ளது. சமீபத்தில், பி.சி. ஜிண்டால் குழுமம் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி, சூரிய மின்கலங்கள் மற்றும் தொகுதி உற்பத்தி வணிகங்களிலும் இறங்கியுள்ளது.
0 கருத்துகள்