முக்கூடல் பேரூராட்சியில் 6 பள்ளிகளில் காலை உணவு திட்டம்

 முக்கூடல் பேரூராட்சி பகுதியில் 6 பள்ளிகளில் தமிழக முதல்வரின் காலை உணவு திட்டத்தினை பேரூராட்சி தலைவர் ராதா லட்சுமணன் மற்றும் துணைத்தலைவர் லட்சுமணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.


தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின் படி நகர்புற அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் அறிவுறுத்தலின் படி  முக்கூடல் பேரூராட்சி பகுதியில் உள்ள பள்ளிகளில் இத்திட்ட தொடக்க விழா நடைபெற்றது.


முக்கூடல் பேரூர் செயலாளரும், பேரூராட்சி மன்ற துணைத்தலைவருமான லட்சுமணன், பேரூராட்சி தலைவர் ராதாலட்சுமணன் ஆகியோர் முக்கூடல் எஸ்.எஸ்.கே.வி. ஷத்திரிய வித்திய சாலா பள்ளி, ஆர்.சி. தொடக்கப்பள்ளி, றி.டி.றி.ஏ. தொடக்கப்பள்ளி , சடையப்புரம் றி.டி.றி.ஏ. தொடக்கப்பள்ளி , லெட்சுமிபுரம் ஆர்.சி. தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, காலை உணவினை வழங்கி தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து சிங்கம்பாறை புனித பவுல் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக செயலாளரும், யூனியன துணை சேர்மனுமான மாரிவண்ணமுத்து தலைமையில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வார்டு செயலாளர்கள் தேவதாஸ், சேகர், வார்டு கவுன்சிலர்கள் நேசமணி, ராஜலெட்சுமி, மகேஸ்வரி, வனிதா, திமுக நிர்வாகிகள் சந்திரசேகர்,மாதவன், இளைஞரணி அமைப்பாளர் நாகராஜன், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கிரண், ஆகாஷ் முத்துகுமார், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu