இந்தியாவின் முன்னணி SUV உற்பத்தியாளரான மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட், ஒரு ஈர்க்கக்கூடிய ₹ 8.94 லட்சம் விலையில் தொடங்கும் அற்புதமான புதிய XUV 3XO REVX வரிசையை இன்று வெளியிட்டது.
இந்த மைல்கல்லை வேகமாக எட்டிய மஹிந்திராவின் SUV ஆக இதை ஆக்குகின்ற வகையில் இந்த XUV 3XO சமீபத்தில் ஒரு வருடத்திற்குள் 1 லட்சத்திற்கும் அதிகமான விற்பனை சாதனையை எட்டியுள்ளது. இந்த REVX வரிசை, வாடிக்கையாளர்களின் விருப்பங்களுடன் ஒத்திசைகின்ற பிரத்தியேக அம்சங்கள், தனித்துவமான பாணி மற்றும் பிரிவில் சிறந்த செயல்திறன் ஆகியவற்றின் ஈர்க்கக்கூடிய மதிப்புமிக்க வழங்கலுடன் இந்த XUV 3XO போர்ட்ஃபோலியோவை மேலும் மேம்படுத்தும்.
தங்கள் தனித்துவமான ஆளுமையை பிரதிபலிக்கும் வாகனங்களைத் தேடும் நபர்களுக்கு வழங்குகிற இந்த REVX வரிசை தனிப்பட்ட வெளிப்பாட்டின் உணர்வைக் கொண்டாடுகிறது - ஏனெனில் தனித்து நிற்கத் துணிபவர்களுக்கு, "வேறுபாடு உள்ளது.
REVX வரிசையின் முக்கிய சிறப்பம்சங்கள்:
REVX M (எக்ஸ்-ஷோரூம் விலை: ₹ 8.94 லட்சம்) – இந்த மாறுபாடு 82 kW இன் ஒரு ஆற்றலையும் 200 Nm முடுக்கத்தையும் வழங்குகிற ஒரு 1.2L mStallion TCMPFi எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. ஒரு நேர்த்தியான முன்புறத்துடன் கூடிய வெளிப்புற நிற கிரில், முழு அகல LED DRLகள், R16 கருப்பு வீல் கவர்கள் மற்றும் நம்பிக்கை மற்றும் ஸ்டைலை வெளிப்படுத்தும் ஒரு ஸ்போர்ட்டியான் இரட்டை வண்ணச்சாயல் ரூஃப் ஆகியவற்றை இதன் ஈர்க்கின்ற வெளிப்புறம் கொண்டுள்ளது.
பளபளப்பான கருப்பு லெதரெட் இருக்கைகள், ஸ்டீயரிங் இல் பொருத்தப்பட்ட கட்டுப்பாடுகளுடன் ஒரு 26.03 செ.மீ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஒரு ஆழ்த்துகின்ற கேபின் அனுபவத்திற்காக 4-ஸ்பீக்கர் ஆடியோ அமைப்பு ஆகியவற்றை உட்புறத்தில் இது வழங்குகிறது. ஆறு ஏர்பேக்குகள், ஹில் ஹோல்ட் கன்ட்ரோலுடன் (HHC) கூடிய ESC மற்றும் அனைத்து 4 டிஸ்க் பிரேக்குகள் உட்பட 35 நிலையான அம்சங்களுடன் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
REVX M(O) (எக்ஸ்-ஷோரூம் விலை: ₹ 9.44 லட்சம்) – இந்த மாறுபாடு REVX M ஐ விட கேபின் அனுபவத்தையும் ஒட்டுமொத்த வடிவமைப்பு ஈர்ப்பையும் உயர்த்துகின்ற ஒரு ஒற்றை-பேன் சன்ரூஃப் ஐ சேர்ப்பதன் மூலம் அதிநவீனத்தை உயர்த்துகிறது.
REVX A (எக்ஸ்-ஷோரூம் விலை ₹ 11.79 லட்சத்தில் தொடங்குகிறது) - இந்த மாறுபாடு கைமுறை மற்றும் தானியங்கி டிரான்ஸ்மிஷன்களுடன் இணைக்கப்பட்ட 96 kW இன் வகுப்பில் சிறந்த ஆற்றலையும், 230 Nm முடுக்கத்தையும் வழங்குகின்ற அதிநவீன 1.2L mStallion TGDi எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது.
இது பரந்த பார்வை கொண்ட சன்ரூஃப், லெதரெட் இருக்கைகள், இரட்டை வண்ணச்சாயல் உட்புறங்கள், ஆட்டோ-டிம்மிங் IRVM போன்ற கேபினுக்குள் அனுபவத்தை மேம்படுத்தும் பிரத்தியேக அம்சங்களை அறிமுகப்படுத்துகிறது. வெளிப்புறத்தில், வெளிப்புற வண்ண முன் கிரில், தனித்துவமான அடையாளப்படுத்தல், R16 பெயிண்டட் பிளாக் அலாய்கள் மற்றும் இரட்டை வண்ண கூரை ஆகிய தனித்துவமான REVX வடிவமைப்பு கூறுகளை இது கொண்டுள்ளது. ஒன்று 26.03 செ.மீ இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் மற்றொன்று 26.03 செ.மீ முழு டிஜிட்டல் கிளஸ்டர் ஆகிய இரட்டை HD திரைகளுடன் இந்த REVX A பொருத்தப்பட்டுள்ளது.
கூடுதலாக, இது நவீன ஓட்டுநருக்கு தடையற்ற இணைப்பு மற்றும் வசதியை உறுதி செய்கின்ற உள்ளமைக்கப்பட்ட Alexa, ஆன்லைன் வழிசெலுத்தல் மற்றும் வயர்லெஸ் Android Auto மற்றும் Apple CarPlay ஆகியவை இடம்பெற்றுள்ள Adrenox Connect ஐ ஒருங்கிணைக்கிறது.
இந்த REVX தொடரின் மூன்று வகைகளும் கேலக்ஸி கிரே, டேங்கோ ரெட், நெபுலா ப்ளூ, எவரெஸ்ட் ஒயிட் மற்றும் ஸ்டீல்த் பிளாக் ஆகிய ஐந்து கண்கவர் வண்ணங்களில் கிடைக்கின்றன.
0 கருத்துகள்