சோமேட்டோ, டாடா டிஜிட்டலுடன் இணைந்து, டாடா நியூ எச்டிஎப்சி வங்கிக் கடன் அட்டை மூலம் சலுகை

இணைய வழியில் உணவு ஆர்டர் செய்வதில் லட்சக்கணக்கான இந்தியர்களின் அனுபவத்தை மேம்படுத்த, உணவு விநியோகத் தளமான சோமேட்டோ [Zomato], டாடா டிஜிட்டலுடன் [Tata Digital] ஒரு அட்டகாசமான கூட்டு ஒப்பந்தம் ஒன்றை அறிவித்துள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து, சோமேட்டோ வாடிக்கையாளர்களுக்கு மிகவும் உபயோகமான தள்ளுபடித் திட்டங்களைத் தரவுள்ளது. டாடா நியு எச்டிஎப்சி வங்கி கடன் அட்டையை (Tata Neu HDFC Bank Credit Card (NeuCard) பயன்படுத்தி சோமேட்டோவில் உணவு வாங்கும் போது இந்த தள்ளுபடி சலுகைகள் கிடைக்கும். டாடா டிஜிட்டலுடன் மற்றுமொரு துணை பிராண்டாக எச்டிஎப்சி வங்கி இணைந்திருப்பதன் மூலம் வழங்கப்படும் கடன் அட்டை இது. எச்டிஎப்சி வங்கி [HDFC Bank] இந்தக் கடன் அட்டைகளை வழங்கும். 

இந்த கூட்டு ஒப்பந்தத்தின் அங்கமாக, சோமேட்டோவில் ஒவ்வொரு முறையும் உணவு ஆர்டர் செய்வதற்காக வாடிக்கையாளர்கள் நியுகார்ட் [NeuCard]-ஐ பயன்படுத்தினால், சோமேட்டோ மணி [Zomato Money]-ல் 10% கேஷ்பேக் சலுகை கிடைக்கும். குறைந்தபட்சம் 99 ரூபாயிலிருந்து உணவு ஆர்டர் செய்பவர்களுக்கு இந்த தள்ளுபடித் திட்டம் பொருந்தும். இந்தத் தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் சலுகைத் திட்டங்களின் மூலம், நாம் அடுத்தடுத்து உணவை ஆர்டர் செய்யும்போது அந்த உணவுக்கான விலையில் தள்ளுபடியுடன் குறைந்த விலையில் வாங்க முடியும். இதன்மூலம் இணையவழி திரும்பத் திரும்ப உணவுகளைப் பெறுவதை ஊக்குவிக்கும் முயற்சியாக இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டு ஒப்பந்தம், சோமேட்டோ மூலம் உணவை ஆர்டர் செய்பவர்களுக்கு செளகரியத்தையும், ஏராளமான பலன்களையும் அளிப்பதோடு,  டாடா டிஜிட்டலின் டிஜிட்டல் பரிவர்த்தனை சூழலோடு ஆழமான உறவை மேற்கொள்வதற்கும் உதவுகிறது. நியுகார்ட் [NeuCard] பயன்படுத்துபவர்கள் சோமேட்டோ மூலம் மட்டுமே பயன்பெறக்கூடியதாக மட்டும் இல்லாமல், நியூகாயின்ஸையும் (NeuCoins) சம்பாதிக்க முடியும்.  இந்த நியுகாயின்ஸை பயன்படுத்தி, டாடா நியூ செயலி (Tata Neu app) மூலம் நாம் வாங்கும் பல்வேறு தயாரிப்புகளுக்கும் சேவைகளுக்கும் தள்ளுபடி சலுகையைப் பெறமுடியும். ஒரே தளத்தில் பல அம்சங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு இருப்பதால் நாம் வாழ்க்கையில் மேம்பட்ட டிஜிட்டல் அனுபவத்தைப் பெற இது உதவுகிறது.

தள்ளுபடியின் முக்கிய அம்சங்கள்:

  • உணவு ஆர்டர் செய்பவர்களுக்கு சோமேட்டோ மணி [Zomato Money] வடிவில் 10% வரை கேஷ்பேக். 

  • குறைந்தபட்சம் ரூ.99-க்கு உணவு ஆர்டர் செய்யும் அனைத்து ஆர்டகளுக்கும் இந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது.

  • சோமேட்டோவில் நியுகார்ட் [NeuCard] பயன்படுத்துபவர்களுக்காக வழங்கப்படும் பிரத்தியேக சலுகையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

  • ஒரு உணவு ஆர்டர் மூலம் பெறும் கேஷ்பேக் வழியாக அடுத்தடுத்த ஆர்டர்களில் உணவின் விலையில் தள்ளுபடி செய்யப்படும். சேமிப்பையும் தொடர்ந்து சோமேட்டோ பயன்படுத்துவதையும் உத்தரவாதம் செய்யும் தள்ளுபடித் திட்டம் இது.

"டாடா நியு-வுடன் நாங்கள் கூட்டு ஒப்பந்தத்தில் இணைந்திருப்பது குறித்து பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். இதன்மூலம் எங்கள் வாடிக்கையாளருடனான பயணத்தை மேலும் அனுகூலமிக்கதாக மாற்றியிருக்கிறோம். நல்ல உணவு இன்னும் நிறையபேருக்குச் செல்வதற்கான எங்கள் இலக்கில் இந்த கூட்டு ஒப்பந்தம் இன்னொரு முன்னெடுப்பென்று கருதுகிறோம். நியுகார்ட் பயன்படுத்துபவர்களுக்கென்றே பிரத்தியேக சலுகைகளுடன், சோமேட்டோ மணி வழியாக 10% தள்ளுபடியையும் வழங்க இந்த ஒப்பந்தம் உதவுகிறது. இந்த கேஷ்பேக் திட்டம் வழியாக அடுத்தடுத்து சோமேட்டோவில் செய்யும் ஆர்டர்களில் தள்ளுபடி கிடைக்கும். டாடாநியூ அட்டை வழியாக பணசேமிப்பையும் பிரம்மாண்டமான டிஜிட்டல் சூழல்வழியான வசதிகளையும் தரவுள்ளோம்.” என்று சோமேட்டோவின் தயாரிப்புகள் பிரிவு துணைத்தலைவர் ராகுல் குப்தா [Rahul Gupta, VP - Product, Zomato] கூறியுள்ளார். 

“சோமேட்டோவுடனான இந்தக் கூட்டு ஒப்பந்தம் இயற்கையாகவே பொருந்தக்கூடியதாகும். நாங்கள் இரு நிறுவனங்களும் வாடிக்கையாளரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டவர்கள். உணவளிக்கும் சந்தோஷத்தைவிட வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் அம்சம் வேறு என்ன உள்ளது? டிஜிட்டல் வழி வாழ்க்கைபாணியே முதன்மையாக உள்ள உலகில், இந்தக் கூட்டு ஒப்பந்தம் வாயிலாக, நியுகார்ட் அட்டைதாரர்களுக்கு கூடுதல் சௌகரியத்தையும், நியுகார்டுக்கு மேம்பட்ட மதிப்பையும் தருகிறோம்.” என்று டாடா டிஜிட்டலின் நிதி சேவைகள் பிரிவின் தலைவர் கௌரவ் ஹஸ்ராத்தி [Gaurav Hazrati, President, Financial Services, Tata Digital] கூறியுள்ளார். 

டிஜிட்டல் வழிப் பணப்பரிவர்த்தனைகளிலும், ஆன்லைன் உணவு விநியோகத்திலும் இந்தியா மகத்தான வளர்ச்சியைக் கண்டுவருகிறது. அந்தப் பின்னணியில் சோமேட்டோ - நியுகார்ட் கூட்டு செயல்பாடு, தங்களது வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட அனுகூலங்களைத் தர வேண்டுமென்ற அவர்களின் நோக்கத்தை மேலும் வலுப்படுத்தி இருக்கிறது.  மேம்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்துபவர்களுக்கும், எந்தவித தொந்தரவுகளும் இல்லாமல்  சௌகரியங்களைப் பெறவிரும்பும் வாடிக்கையாளர்கள் நாடுமுழுவதும் இருக்கிறார்கள். அவர்களுக்கு பெரும் பலன்களை அளிக்கும் ஒன்றாக இந்த கூட்டு  செயல்பாடு அமைந்திருக்கிறது.

இந்தத் தள்ளுபடி தற்போது எல்லா நியுகார்ட் அட்டைதாரர்களுக்கும் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் தங்கள் நியுகார்டுகளை சோமேட்டோ செயலியுடன் இணைத்து, பணப்பரிவர்த்தனைகளைச் செய்வதன்மூலம் சலுகைகளையும் பரிசுகளையும் பெறலாம். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu