தென்காசி அருகே உள்ள இலஞ்சி பிஎட் கல்லூரி தென்காசி மாவட்டத்தில் சிறந்த கல்லூரியாக செயல்பட்டு வருவதாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பாராட்டு தெரிவித்தார்.
தென்காசி அருகே உள்ள இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா கல்லூரியின் சேர்மன் நெல்லை பேராயர் ஏஆர்ஜிஎஸ்டி பர்னபாஸ் தலைமையில் நடந்தது.
தாளாளர் ராஜகுமார், ஆலோசகர் முனைவர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தார் முதல்வர் முனைவர் கலா வின்சிலா வரவேற்றார் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் சந்திரசேகர் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு பட்டம் பெற்ற மாணவ ஆசிரியர்களுக்கு பட்டங்கள் வழங்கி பேசியதாவது.
சமுதாயத்தின் வளர்ச்சியிலும், நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதிலும் கல்வி முக்கிய பங்கினை வகிக்கிறது அந்த கல்வியை புகட்டுவதிற்கு ஆசிரியர்கள் பணி இன்றியமையாதது. அதற்கான ஆசிரியர்களை உருவாக்குவதில் தென் மாவட்ட அளவில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரி சிறந்து விளங்கி வருவது பாராட்டுக்குரியது. ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன், அப்துல் கலாம் போன்று சிறந்த ஆசிரியர்களாக உருவாகி வருங்கால சந்ததியை சிறந்த சந்ததியார் உருவாக்க வேண்டும் என பேசினார்
விழாவிற்கு ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் அருள்திரு ஸ்டேன்லி இம்மானுவேல், அந்தோணி, ராஜேந்திரன், உதவி பேராசிரியர்கள் ஷீலா நவரோசி, ஜெனிபர், லீதியாள் சொர்ண ஜெயா, ஐரீன், நூலகர் முனைவர் ஏஞ்சலின், உடற்கல்வி இயக்குனர் ஐசக், அனிதா, அலுவலக பணியாளர்கள் ப்ரெட்ரிக், ஷேரன், பேதுரு, லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
0 கருத்துகள்