கரூர் வைஸ்யா வங்கி – FY26 முதல் காலாண்டு நிதி முடிவுகள் அறிவிப்பு

கரூர் வைஸ்யா வங்கி, 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான (2025 ஜூன் 30 அன்று முடிவடைந்த காலம்) நிதிசார் முடிவுகளை அறிவித்தது. வங்கியின் வளர்ச்சி, இலாபமீட்டல் நிலை மற்றும் சொத்தின் தரம் ஆகிய மூன்று முக்கியமான அளவுகோள்களில் வலுவான செயல்திறனைக் காட்டியுள்ளது. வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயலாக்க அதிகாரி திரு. ரமேஷ் பாபு கூறியதாவது: “முன்வைக்கப்பட்ட வழிகாட்டலுக்கு ஏற்ப எமது செயல்திறன் அமையும் வகையில், இந்த காலாண்டு நிதி முடிவுகள் அமைந்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாக எங்களுடைய திட்டமிடலுக்கு ஏற்ப, முதல் காலாண்டிலும் வளர்ச்சி பாதையில் நாம் உறுதியாக முன்னேறியுள்ளோம். இது எமது செயல்பாட்டின் வலிமையை சுட்டிக்காட்டுகிறது. 110வது ஆண்டிற்குள் நுழையும் இவ்வங்கியின் பயணத்தில், எமது வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையான நிதிக் கூட்டாளியாக தொடரும் உறுதியை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.”

2025 ஜூன் 30 அன்று வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ.1,96,024 கோடியை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலம் (ரூ.1,70,059 கோடி) ஒப்பிடுகையில் 15.27% வளர்ச்சி ஆகும். மொத்த டெபாசிட்கள் ரூ.1,06,650 கோடியாக இருந்தது, இது 15.49% வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது. வழங்கப்பட்ட கடன்கள் 15.01% வளர்ச்சியுடன் ரூ.89,374 கோடியாக உயர்ந்துள்ளன. வங்கியின் நிகர லாபம் ரூ.521 கோடியாக இருக்கிறது, இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் இருந்த ரூ.459 கோடியை ஒப்பிடுகையில் 13.51% வளர்ச்சியை காட்டுகிறது. PPOP ரூ.805 கோடியாக (7.91% YoY), நிகர வட்டி வருவாய் ரூ.1,080 கோடியாக (5.16% YoY) உயர்ந்துள்ளன. ஆனால் நிகர வட்டி இலாப வரம்பு 4.14%-இல் இருந்து 3.86%-க்கு குறைந்துள்ளது.

டெபாசிட் செலவுகள் 5.48% ஆக இருந்த நிலையில் 5.77%-க்கு உயர்ந்துள்ளன. கடன்களின் மீதான வருமானம் 10.12%-இல் இருந்து 10% ஆகி 12 பிஸ்கள் குறைந்துள்ளது. கமிஷன் மற்றும் கட்டண வருவாய் ரூ.239 கோடியில் இருந்து 5.02% உயர்ந்து ரூ.251 கோடியாகியிருக்கிறது. இயக்க செலவுகள் ரூ.667 கோடியில் இருந்து ரூ.721 கோடியாக அதிகரித்துள்ளன. வருவாய்க்கான செலவுப் விகிதம் 47.24% ஆக உள்ளது (ஓர் ஒப்பீட்டுக் காலாண்டில் 47.20% ஆக இருந்தது).

சொத்தின் தரம் முன்னேற்றத்தை வெளிப்படுத்துகிறது. மொத்த வராக்கடன்கள் (GNPA) கடந்த ஆண்டின் 1.32% விகிதத்திலிருந்து 0.66%-க்கு (ரூ.593 கோடி) குறைந்துள்ளன. நிகர வராக்கடன்கள் (NNPA) 0.38%-இல் இருந்து 0.19% (ரூ.170 கோடி) ஆக சிறந்த நிலையில் உள்ளது. வராக்கடன்களில் இழப்பை ஈடுசெய்யும் விகிதம் (PCR) 94.91%-இல் இருந்து 96.76% ஆக உயர்ந்துள்ளது.

மூலதன போதுமான நிலை 2025 ஜூன் 30 அன்று BASEL III வழிகாட்டல்களின் படி 17.36% ஆக உள்ளது, இது அவசியமான 11.50%-ஐ விட அதிகம். Tier I Capital 16.33% ஆகவும், 2024-இல் இருந்த 15.58% உடன் ஒப்பிடுகையில் முன்னேற்றத்தைக் காட்டுகிறது. இடர் ஆபத்தைக் குறிக்கும் கடன் சொத்துகள் ரூ.69,441 கோடியாகும்.

சேவை வலையமைப்பில் வங்கியின் கிளைகள் எண்ணிக்கை 888 ஆகவும், 2,226 ஏடிஎம்கள்/ரீசைக்கிளர்களும் உள்ளன. மேலும் 1 டிஜிட்டல் பேங்கிங் பிரிவு மற்றும் 374 வர்த்தக முகவர்கள் சேவை செய்கின்றனர். கிளைகளில் 55% சிறுநகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் இயங்குகின்றன.

பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டு, வங்கியின் இயக்குநர்கள் குழு ரூ.2 மதிப்புள்ள ஒவ்வொரு ஐந்து ஈக்விட்டி பங்குகளுக்கும் ஒரு போனஸ் பங்காக ரூ.2 மதிப்புடைய பங்கு வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது (1:5 விகிதம்). இது பங்குதாரர்களுக்கு ஒரு விருப்பமான செய்தியாக அமையும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu