ஜெனரலி இன்சூரன்ஸ் நிறுவனம் தனது 26 சதவீத பங்குகளைசென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவுக்கு விற்பனை செய்துள்ளது. இதன் மூலம்தங்களது பங்குதாரராகசென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவை இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா கடந்த 1911-ம் ஆண்டு நிறுவப்பட்ட மிகப் பழமையான பொதுத்துறை இந்திய வங்கிகளில் ஒன்றாகும். இதன் சந்தை மூலதனம் ரூ.461 பில்லியனாக உள்ளது.இவ்வங்கி4,500க்கும் மேற்பட்ட கிளைகளுடன் 8 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான வங்கி சேவையை வழங்கி வருகிறது.
இந்த கூட்டாண்மை நடவடிக்கை மூலம் தங்கள் இன்சூரன்ஸ் திட்டங்களை நாடு முழுவதும் விரிவுபடுத்த ஜெனரலி திட்டமிட்டுள்ளது.
இது குறித்து ஜெனரலி குழுமத்தின் இன்சூரன்ஸ் பிரிவு துணை தலைமை நிர்வாக அதிகாரி ஜெய்ம் அஞ்சுஸ்டெகுய் கூறுகையில்,மிகவும் மதிப்புமிக்க சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவுடன் இணைந்து இந்தியாவில் எங்கள் வணிகத்திற்கான இந்தப் புதிய துவக்கத்தை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இதன் மூலம் எங்கள் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்த இருக்கிறோம். எங்களின் 'லைப்டைம் பார்ட்னர் 27: டிரைவிங் எக்சலன்ஸ்' திட்டத்தின்அடிப்படையில், இந்தியாவின்இன்சூரன்ஸ் துறையில்எங்கள் வணிக நடவடிக்கைகளை விரிவாக்கம் செய்ய இந்த கூட்டாண்மை எங்களுக்கு உதவும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று தெரிவித்தார்.
ஜெனரலி குழுமத்தின் ஆசிய பிராந்திய அதிகாரிராப் லியோனார்டி கூறுகையில்,இந்தக் கூட்டாண்மை இந்தியாவில் எங்கள் வணிகத்தில் ஒரு வலிமையான நம்பிக்கை ஏற்படுத்தும்.சிறப்பான வளர்ச்சிக்கு முக்கியமானதொரு துவக்கமாக இருக்கும்.இதன்மூலம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த திட்டங்களை வழங்குவதோடு சிறப்பான சேவைகளையும் வழங்க முடியும் என்று தெரிவித்தார்.
ஜெனரலி குழுமம்
ஜெனரலி என்பது உலகளவில் மிகப்பெரிய ஒருங்கிணைந்த இன்சூரன்ஸ் மற்றும் சொத்து மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றாகும். கடந்த 1831ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நிறுவனம், உலகின் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ளது, இதன் மொத்த பிரீமியம் வருமானம் 95.2 பில்லியன் ஸ்டெர்லிங் பவுண்ட் ஆகும்.இதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துமதிப்பு 863 பில்லியன் ஸ்டெர்லிங் பவுண்ட் ஆகும்.சுமார் 87 ஆயிரம்ஊழியர்களுடன் 71 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையாற்றி வரும் இந்நிறுவனம், ஐரோப்பாவில் முன்னணி இடத்தையும், ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் சிறப்பான வளர்ச்சி அடைந்து வரும் நிறுவனமாகவும் உள்ளது.
0 கருத்துகள்