அகமதாபாத்தில் சமீபத்தில் நடந்த ஏர் இந்தியா ஏஐ 171 விமான விபத்துக்கு காரணம்அதில் ஏற்பட்ட எந்திர கோளாறோ அல்லது மனித தவறோ எதுவும் இல்லை, இதற்கு பிரபஞ்சத்திலிருந்து வந்த சிக்னலே காரணம் என்று சேவ் எர்த் மிஷனின் இந்தியாவிற்கான தலைவர் சந்தீப் சவுத்ரி, கிப்ட்நகரில் நடந்த குளோபல் விஷன் வெளியீட்டு நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
இது குறித்து சந்தீப் சவுத்ரிகூறுகையில், அது ஒரு குழப்பம் அல்ல, அது ஒரு குறியீடு. பிரபஞ்சம் எண்கள், அலைகள் மற்றும் ஆற்றலில் பேசுகிறது. ஏஐ 171க்கு ஏற்பட்ட சோகம் என்பது வெறும் தொழில்நுட்ப தோல்வி அல்ல, மாறாக அது பிரபஞ்சத்தில் இருந்து வந்த சிக்னல் ஆகும். நான் அதை எண்களில் உணர்ந்தேன்என்றும் சவுத்ரி தெளிவுபடக் கூறினார்.
விமான எண், தேதி மற்றும் விபத்து நடந்த நேரம், தற்செயலானதாகத் தோன்றும்.ஆனால் அவர் அதை ஒப்பிட்டுப் பார்த்து பகுப்பாய்வு செய்திருப்பது என்பதுஉலக அளவில் கவனம் பெற்றுள்ளது மற்றும் விஞ்ஞானிகள், ஆன்மீகவாதிகள் மற்றும் பொது மக்களிடையே இது குறித்த விவாதத்தையும் தூண்டியுள்ளது.
அவரது விளக்கம் பின்வரும் வடிவங்களை உள்ளடக்கி உள்ளது:
விபத்து நடந்த தேதி : 12/06/2025
1 + 2 = 3
0 + 6 = 6
2 + 0 + 2 + 5 = 9
மறைக்கப்பட்ட வரிசை: 3 - 6 - 9
விமானத்தின் எண் ஏஐ 171, அதில் 1 + 7 + 1 = 9, இது கர்ம நிறைவைக் குறிக்கிறது.
விபத்து நடந்த நேரம்மதியம் 1:38 மணி மற்றும் 1 + 3 + 8 = 12, மற்றும் 1 + 2 = 3.
விமானத்தில் இருந்து மூன்று அதிசய விஷயங்கள் பற்றியும் பேசினார், அவற்றில் ஒரு பகவத் கீதை புத்தகம் ஒன்று எந்தவித சேதமும் இல்லாமல் இருந்தது, ஒரு பயணி உயிர் பிழைத்தது, மற்றும் ஒருவர் விமானத்தை தவறவிட்டது என்பதும் அடங்கும். 1 + 1 + 1 = 3, இது மும்மூர்த்திகளைக் குறிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், விமானம் சென்ற அடைய வேண்டியஇடம் லண்டன் ஆகும் (6 எழுத்துக்கள்) அது புறப்பட்ட இடம் அகமதாபாத் (9 எழுத்துக்கள்) என்றும் சவுத்ரி குறிப்பிட்டார். முடிக்கப்பட்ட வரிசை: 3 (அடையாளங்கள்) - 6 (லண்டன்) - 9 (அகமதாபாத்).
"எண்கள் இப்படி சீரமைக்கப்படும்போது, அது தற்செயல் நிகழ்வு அல்ல, மாறாக தொடர்பு. இது ஒரு சாதாரண விமான விபத்து மட்டுமல்ல, பிரபஞ்சத்திலிருந்து வந்த ஒரு சிக்னல் ஆகும்.விண்மீன் திரள்களிலிருந்து நமது கிரகத்திற்கு வந்த தெய்வீக செய்தி. இது ஒவ்வொரு மனிதனையும் சுயபரிசோதனை செய்து, பிரதிபலிக்க, புரிந்துகொள்ள மற்றும் பரிணமிக்க அழைக்கிறதுஎன்றும்அவர் தெரிவித்தார்.
இந்த விஷயம் பத்திரிக்கை,ஆன்லைன் மற்றும் சமூக ஊடகங்களில் உலகம் முழுவதும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. #AI171DecodedBySandeepஎன்ற ஹேஷ்டேக் எக்ஸ், இன்ஸ்டாகிராம், யூடியூப் ஷார்ட்ஸ்மற்றும் திரெட்ஸ்ஆகியவற்றில்லட்சக்கணக்கான மக்கள் இதை பார்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்