தேசிய திறனாய்வு தேர்வில் ஆவுடையானூர் புனித அருளப்பர் பள்ளி மாணவர்கள் 35 பேர் தேர்ச்சி பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தனர்.
2024-2025 ஆம் கல்வியாண்டின் 8 ஆம் வகுப்புகளுக்கான தேசிய திறனாய்வு தேர்வுக்கான தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில் ஆவுடையானூர் புனித அருளப்பர் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய 62 மாணவ, மாணவிகளில் 35 பேர் தேர்ச்சி பெற்றனர். மாவட்ட அளவில் 368 பேர் தேர்ச்சி பெற்றதில் இப்பள்ளியில் மட்டும் 35 பேர் தேர்ச்சி பெற்று தென்காசி மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தனர்.
இம்மாணவர்களுக்கு 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆண்டுக்கு ரூ.12,000 என ரூ. 48000 கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும். சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளியில் நடைபெற்ற விழாவில், பள்ளி நிர்வாகி அருட்திரு மோயீசன் அடிகளார், தலைமை ஆசிரியர் அந்தோணி அருள் பிரதீப், நிர்வாக அலுவலர் அருள் செல்வராஜ், உதவித்தலைமை ஆசிரியர்கள் ஹெலன் கெவின், சாந்தி மற்றும் திறனாய்வு தேர்வு பொறுப்பு ஆசிரியர்கள் ஜானி, ஜோஸ்பின் கோல்டா, சகாய ஜோதி, மேரி ஜானா, பிரேம் திவ்யா மற்றும் பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் பாராட்டினர்.
0 கருத்துகள்