பிரிட்டானியா நியூட்ரிசாய்ஸின் நியூட்ரிபிளஸ் செயலி அறிமுகம்

இந்தியாவின் முன்னணி பிஸ்கட் பிராண்டுகளில் ஒன்றான பிரிட்டானியா நியூட்ரிசாய்ஸ், நியூட்ரிபிளஸ் என்ற மொபைல் செயலியை (ஆப்) அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் மூலம் தினசரி ஆரோக்கியத்தை கடைபிடிப்பதை எளிமைப்படுத்த வேண்டுமென்கிற அதன் நிலைபாட்டை உறுதி செய்துள்ளது. இந்தியாவில் உடல் ஆரோக்கியத்தைக் கண்காணிப்பதை எளிமையானதாகவும், அனைவரும் அணுகக்கூடியதாகவும், முழுமையாக ஸ்மார்ட்போனால் இயக்கப்படுவதாகவும் மாற்றும் பணியில் நியூட்ரிசாய்ஸ் ஈடுபட்டுள்ளது. அக்டிவோ லேப்ஸ் (Aktivo Labs)  நிறுவனத்துடன் இணைந்து வடிவமைக்கப்பட்ட ஆதாரங்களின்-அடிப்படையிலான இந்த செயலியை, பிரிட்டானியா நியூட்ரிசாய்ஸ் பேக்கை ஸ்கேன் செய்வதன் மூலம் தரவிறக்கம் செய்யலாம். பொதுவாக சிக்கலாக கருதப்படும் தொழில்நுட்பத்தை இந்த செயலி எளிதில் அணுகக்கூடிய வகையில் வழங்குகிறது. ஒரு வருடத்தில், நியூட்ரிபிளஸ் இதற்கு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது - 1.5 லட்சத்துக்கும் அதிகமான பயனர் இதில் பதிவு செய்துள்ளனர். நமது அன்றாட ஆரோக்கியத்திற்கான தீர்வுகளை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை இது வெளிக்காட்டியுள்ளது.

பிரிட்டானியா நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவின் பொது மேலாளர், அர்ச்சனா பலராமன் அவர்கள் கூறுகையில், “நியூட்ரிபிளஸ் செயலி ஆரோக்கியத்தினை கண்காணிப்பதை அனைவருக்கும் எளிதாக்கியுள்ளது. சாதனங்களை தொடர்ந்து அணிந்திருக்க வேண்டிய கட்டாயம், அல்லது சிக்கலான கண்காணிப்பு சிஸ்டம்களின் தேவையை எங்கள் செயலி  நீக்கியுள்ளது. அதிக மக்கள் தங்கள் தினசரி நடவடிக்கைகளில் சிறிய, அர்த்தமுள்ள முயற்சிகளை மேற்கொள்ள நாங்கள் உதவியுள்ளோம். தனிநபர்கள் ஆரோக்கியத்திற்கான சிறந்த பழக்கங்களை எளிதாகப் பின்பற்ற உதவ வேண்டும் என்பதில் பிரிட்டானியா நியூட்ரிசாய்ஸ் உறுதியாக உள்ளது, இதற்காக நாங்கள் நியூட்ரிபிளஸ் செயலியை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம்”, என்று தெரிவித்தார்.

இந்த செயலியில் ஆதார அடிப்படையிலான நியூட்ரிஸ்கோர் என்கிற ஒற்றை மதிப்பீட்டை நியூட்ரிபிளஸ் வழங்குகிறது; அதாவது நடக்கும் அடிகளின் எண்ணிக்கை, உறக்கத்தின் தரம், உட்கொள்ளும் ஃபைபர் அளவு மற்றும் அருந்தும் தண்ணீரின் அளவு போன்ற முக்கிய வாழ்க்கை முறை நடப்புகளை கண்காணிக்க இந்த செயலி உதவுகிறது. கடந்த ஆண்டில்*, சராசரி நியூட்ரிஸ்கோர் 60 முதல் 62 வரை அதிகரித்துள்ளது; இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் குறிக்கிறது. இதன் பயனர்கள் தங்கள் நடைமுறைகளில் நிலையான முன்னேற்றத்தைக் காட்டியுள்ளனர், தினசரி அவர்கள் நடக்கும் அடிகள் (ஸ்டெப்ஸ்) 10% அதிகரித்துள்ளது, அவர்களது உடற்பயிற்சி நேரம் 16% அதிகரித்துள்ளது மற்றும் உறங்கும் நேரம் 6 மணிநேரம் 46 நிமிடங்களில் இருந்து 7 மணிநேரம் 08 நிமிடங்களாக உயர்ந்துள்ளது. இந்த நிலையான மேம்பாடுகள் சிறியதாக தெரியலாம், ஆனால் அர்த்தமுள்ள வகையில் தினசரி நடவடிக்கைகளில் மாற்றங்களை ஊக்குவிப்பதில் நியூட்ரிபிளஸ் செயலியின்  செயல்திறனை வெளிக்காட்டியுள்ளது.

சிறந்த வாழ்க்கை முறைக்கு பங்களிக்கும் சிறிய மற்றும் எளிமையான விஷயங்களைத் தேர்வு செய்வதற்கு பிரிட்டானியா நியூட்ரிசாய்ஸ் அதன் நுகர்வோருக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. நியூட்ரிபிளஸ் உடன், இந்த தத்துவம் உணவுக்கு அப்பாலும் பின்பற்ற ஏதுவாக மாறியுள்ளது; தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் ஆரோக்கிய கண்காணிப்பு முறைகளை வழங்கும் இந்த செயலியானது, நிலையான தினசரி நடைமுறைகள் மற்றும் அன்றாடம் சாத்தியமான மேம்பாடுகளை மேற்கொள்ள தனிநபர்களை ஊக்குவிக்கிறது. இந்த செயலியில் தற்போது பயனரின் தேவைக்கேற்ப பிரத்தியேகப்படுத்தப்பட்ட உணவு பழக்க விளக்கப்படம் (டயட் சார்ட்) அம்சமும் உள்ளது. இது பயனர்களுக்கு அவர்களின் இலக்குகளின் அடிப்படையில் பிரத்தியேகப்படுத்திய உணவுத் திட்டங்களை வழங்குகிறது. இதனால் நியூட்ரிபிளஸ், ஒருவரது ஆரோக்கிய கண்காணிப்பில் ஒரு எளிமையான மற்றும் முழுமையான துணையாக இருக்கிறது.  இந்த செயலியின் பயன்பாடு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து - ஆரோக்கியம் சார்ந்த நுண்ணறிவுகளை அனைவரும் அணுகக்கூடியதாகவும், செயல்படத்தக்க தகவல்களை வழங்குவதிலும் நியூட்ரிபிளஸ் கவனம் செலுத்துகிறது.

பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு: App Store, Play Store

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu