பா.ஜ.க. மீதான ஊழலை திசைதிருப்ப திமுக மீது வீண் பழி சுமத்துவதா? திமுக கண்டனம்

 பா.ஜ.க. மீதான ஊழல்கள் திசைதிருப்புவதற்காக திராவிட மாடல் ஆட்சி நடத்தும் திமுக வீண் பழி சுமத்துவதா? என தென்காசி தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மயிலவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இது குறித்து தென்காசி தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் எஸ்.கே.மயிலவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர்,  திமுகவினர் மீது வழக்குகள் போடப்படும் என்று கூறியதாக நாளிதழ்களில் செய்திகள் வெளிவந்துள்ளது. அதே நேரத்தில் ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் பாராளுமன்றத்தில் பேசும் போது, வராக்கடனை நாங்கள் தள்ளுபடி செய்யவில்லை. 'ரைட் ஆப் " செய்துள்ளோம். ஏனெனில் வங்கிகளின் கணக்கில் வராக்கடன் வரக்கூடாது என்பதற்காக அதை செய்துள்ளோம் என்று  கூறியுள்ளார். இதற்கு காரணம் என்னவென்றால் வங்கிகள் வராக்கடன் தொகையை செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கைகள் எடுத்து மீண்டும் பணத்தை வசூலிக்கலாம் என்பதற்காகத்தான் என்று கூறியுள்ளார்.

இந்த இரண்டு செய்திகளை உற்று நோக்கும்பொழுது பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 2014 இல் இருந்து வங்கிகளில் மோசடி செய்த தொகை சுமார் 14 லட்சம் கோடி ஆகும். இதில் 70 சதவீத வங்கி மோசடிகள் பாஜக ஆளும் மாநிலங்களான மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், குஜராத், ஹரியானா, மற்றும் டெல்லியில்தான் நடந்துள்ளது என்பது வலைதள தகவல்கள் மூலமாக தெரிய வருகிறது. எதற்காக கடன் வழங்கினார்கள்? ஏன் கடன் வழங்கினார்கள்? இதற்கு என்ன என்ன ஆதாரத்தை அடிப்படையாக வைத்து கடன் கொடுத்தார்கள்? என்ற விவரங்களை ஏன் பொது தளத்தில் வழங்கவில்லை? என்று மக்கள் கேட்கிறார்கள். பதில் கூற முடியவில்லை. ஒன்றிய நிதியமைச்சர் இதை பற்றி விளக்கம் கூறுவாரா? என்று மக்கள் கேட்கிறார்கள். இதற்கு அவர்தான் பதில் கூற வேண்டும்.

இந்த வங்கிகளின் மீதோ அல்லது கடனை செலுத்த தவறியவர்கள் மீதோ சிபிஐயோ, அமலாக்கத்துறையோ, வருமானவரித்துறையோ என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? என்று ஏன் இதுவரை ஒன்றிய நிதியமைச்சர் தெரிவிக்கவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அதனை முடிவுக்கு கொண்டு வருவதற்கு கால தாமதமாகும் என்று ஒரு பக்கம் கூறிவிட்டு, வங்கிகள் கடன் தொகையை செலுத்த தவறியவர்கள் மீது வழக்கு போட்டு அந்த பணத்தை மீட்க வேண்டும் கூறினால் அது சரியா? என்று மக்கள் கேட்கிறார்கள். 70 சதவீத  கடன் கட்ட தவறியவர்கள் பாஜக ஆளும் மாநிலங்களில் இருப்பதால் அவர்களுக்காக இந்த சலுகை கொடுக்கப்பட்டதா? என்று மக்கள் கேட்கிறார்கள். பதில் கூற முடியவில்லை. 14 லட்சம் கோடிக்கு மேலுள்ள இந்த வராக்கடன்களை மீட்பதற்கு எவ்வளவு காலமாகும்? இந்த விபரத்தையும் மக்களுக்கு ஏன் தெரிவிக்கவில்லை? என்று மக்கள் கேட்கிறார்கள்.

வலைதளங்களில் பார்க்கும் பொழுது காப்பீடு நிறுவனங்கள்  2014ல் இருந்து 20,000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பை சந்தித்து இருக்கின்றன. இதைப் போன்றே பொதுத்துறை நிறுவனங்களும் பல லட்சம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்திருக்கின்றன. இதனை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்று இதுவரை ஒன்றிய அரசின் நிதி அமைச்சரோ உள்துறை அமைச்சரோ ஏன் மக்களிடம் தெரிவிக்கவில்லை? என்று மக்கள் கேட்கிறார்கள். இதற்கும் பதில் கூற முடியவில்லை.

இந்தியாவின் பொருளாதாரம் இவ்வாறு சரிந்து கொண்டிருக்கும் பொழுது, அம்பானியும், அதானியும் 2014 இல் இருந்ததை விட 2024 ல் உலக பணக்காரர்களாக  உயர்ந்துள்ளதும், பாஜக கட்சியின் சொத்து மதிப்பு பல்லாயிரம் மடங்கு உயர்ந்துள்ளதும் எப்படி? என்று மக்கள் கேட்கிறார்கள். 2014 லிருந்து 2024 வரை அம்பானிக்கும், அதானிக்கும் என்னென்ன  தொழில்களுக்கு அரசு அனுமதி கொடுத்தது? என்று இதுவரை தெரிவிக்கவில்லை. உள்துறை அமைச்சர் மகன் உலக கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக எந்த தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்பட்டார் ?  என்று மக்கள் கேட்கிறார்கள். இதற்கும் பதில் கூற முடியவில்லை. இந்திய பிரதமர் ஒரு நாளில் மூன்று முறை உடைகளை மாற்றுவதாகவும், அவர் அணியும் கண்ணாடி போன்ற பொருட்கள் எல்லாம் பல கோடி மதிப்புள்ளது என்றும், அவர் அணியும் ஒரு ஆடையின் மதிப்பே பல கோடி என்றும் வலைதள தரவுகள் மூலம் தெரிய வருகிறது. இது எப்படி சாத்தியம் என்று மக்கள் கேட்கிறார்கள்?

இது மட்டுமின்றி பாஜக ஆளும் மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று நாளிதழ் செய்திகள் மூலமாகவும், வலைதள தரவுகள் மூலமாகவும் தெரிய வருகிறது. குஜராத் மாநிலத்தில் 40 பள்ளி குழந்தைகள் வீடியோ விளையாட்டில் கிடைக்கும் பத்து ரூபாய்க்காக கையை பிளேடால் கீறி கொண்ட சம்பவம் நடந்துள்ளது. இந்த மாநிலத்திலும் உத்திரபிரதேச மாநிலத்திலும் பள்ளி குழந்தைகள் தேர்வு எழுதும் பொழுது புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் நிலையை பல காணொளி காட்சிகள் மூலம் காண முடிகிறது. இதே நிலைதான் அங்கு நடக்கும் உயர் கல்வி தேர்வுகளிலும், போட்டித்தேர்வுகளிலும், நுழைவுத் தேர்வுகளிலும் நடப்பதாக பல காணொளி காட்சிகள் மூலம் காணமுடிகிறது.  பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள்  உச்ச நீதிமன்றம் கூறிய பிறகும் அதற்கு எதிராக புல்டோசர் நீதி வழங்கப்படும் என்று கூறி மத சிறுபான்மையினரையும் மற்றும் ஏழை எளிய மக்களையும் மிரட்டுகிறார்கள் என்று நாளிதழ்களில் செய்திகள் வெளிவந்துள்ளது. சிஐஜி அறிக்கையில் ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் நடந்த முறைகேடுகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

ஒருபக்கம் பொருளாதார குற்றங்கள், மற்றொரு பக்கம் சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் ஊழல்கள் இதை சட்டப்படி தண்டிக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் வருமானவரித்துறை ஆட்களை அனுப்பி மிரட்டி வருகிறார்கள் என்று நாளிதழ்கள் மூலமும் வலைதளம் மூலமும் தெரிய வருகிறது. இது ஏன்? என்று  மக்கள் கேட்கிறார்கள். பதில் கூற முடியவில்லை. இதைத் தவிர தேசிய கல்விக் கொள்கையை தினித்து குழந்தைகளை கட்டாயமாக சமஸ்கிருதமும்  இந்தியும் படிக்க வேண்டும் என்று, மும்மொழி மாணவர்களுக்கு பாரமாக இருந்தாலும் அதை திணிக்க வேண்டும் என்று ஏன் வற்புறுத்துகிறார்கள்? என்று மக்கள் கேட்கிறார்கள்.

சமஸ்கிருதமோ மட்டாணி என்ற சிரியா நாட்டிலிருந்து வந்த மொழியாகும். இந்தி பெர்சியா மட்டுமல்லாமல் பல இதர மொழிகள் சேர்ந்து உருவாக்கப்பட்ட ஒரு கலப்பட மொழியாகும். இஸ்லாமிய மக்களுக்கு எதிராக பல செயல்களை செய்து வரும் இவர்கள், அவர்கள் பேசும் மொழியை இறக்குமதி செய்தது மட்டுமல்லாமல் அந்த மொழியை வற்புறுத்தி படிக்க சொல்வது ஏன்? என்று மக்கள் கேட்கிறார்கள். இதனால் குழந்தைகளுக்கு என்ன பயன் ஏற்படும்? என்று மக்கள் கேட்கிறார்கள். பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை இதற்கு விளக்கம் தெரிவிக்காமல், இரண்டு கோடி கையெழுத்தை மக்களிடம் மார்ச் 31ம் தேதிக்குள் வாங்குவோம் என்று கூறியுள்ளார். ஆனால் கையெழுத்தை  தமிழ்நாட்டின் மக்களிடம் வாங்குவாரா?  இல்லை வடநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு பிழைக்க வந்த மக்களிடம் வாங்குவாரா? என்று மக்கள் கேட்கிறார்கள். இதற்கு அவர் தான் பதில் கூற வேண்டும்.

இவ்வாறு நாடே சீரழிந்து கொண்டிருக்கும் பொழுது, அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமி தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக ஒன்றிய உள்துறை அமைச்சரிடம் ஒப்பந்தம் பேசியுள்ளதாக நாளிதழ் செய்திகள் மூலமாகவும் வலைதள தரவுகள் மூலமாகவும் தெரிய வருகிறது. கோவை,ஈரோடு,கரூர், பொள்ளாச்சி, திருப்பூர் மற்றும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் , பாஜக 2026ம் தேர்தலுக்காக 74 தொகுதிகளை அதிமுகவிடம் கேட்டுள்ளது என்று பரவலாக பேசுகிறார்கள். இது உள்துறை அமைச்சர், மகா சிவராத்திரி அன்று கோவை வந்த பொழுது பேசி முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மக்கள் பேசுகிறார்கள். இதற்கு அதிமுக ஒத்துக் கொண்டால் அதனுடன் கூட்டணி சேரும் கூட்டணி கட்சிகளுக்கு குறைவாகத்தான் தொகுதிகளை ஒதுக்க முடியும். இதனை அதிமுக தொண்டர்களுக்கும் கூட்டணி கட்சி தொண்டர்களும் ஏற்றுக் கொள்வார்களா? என்று மக்கள் கேட்கிறார்கள். அதற்கு பழனிச்சாமி தான் பதில் கூற வேண்டும்.

இந்தியை திணிக்க வேண்டாம், தொகுதி மறுவரையறையை எதிர்ப்போம் என்று கூறிவிட்டு, தமிழ்நாட்டின் உரிமையை ஏன் அமித்ஷாவிடம் அடகு வைக்க வேண்டும்? என்று மக்கள் கேட்கிறார்கள். அதற்கு அவர்கள் தான் பதில் கூற வேண்டும். திராவிட மாடலை பின்பற்றி சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் திராவிட முன்னேற்ற கழக ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் செயல்படும் அதிமுகவும் பாஜகவும் சேர்ந்தால் தமிழ்நாட்டின் ஒற்றுமையும், அமைதியும், வளர்ச்சியும் பாதிக்கும் என்று மக்கள் அச்சப்படுகிறார்கள். அதனால், ஒன்றிய உள்துறை அமைச்சர் பல வழக்குகளை போடுவோம் என்று மிரட்டுவது சரியா? என்று மக்கள் கேட்கிறார்கள். ஒன்றிய பாஜக அரசு தங்கள் மீது உள்ள ஊழல்களையும் பொருளாதார சிக்கல்களையும், சட்ட ஒழுங்கு சீர்கேடுகளையும் திசை திருப்புவதற்காக தமிழ்நாட்டின் மீது ஏன் வீண் பழி சுமத்த வேண்டும். என்று மக்கள் கேட்கிறார்கள் பதில் கூற முடியவில்லை.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu