அதிரடி சலுகையாக வெறும் ₹19,999 முதல் Nothing Phone 3A அறிமுகம்

லண்டனை தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் தொழில்நுட்ப நிறுவனமான நத்திங் (Nothing),  மார்ச் 11 முதல் ஃபிளிப்கார்ட், விஜய் சேல்ஸ், க்ரோமா மற்றும் இந்தியாவின் அனைத்து முன்னணி ரீடெயில் ஸ்டோர்களிலும் Nothing Phone (3a) சீரிஸின் விற்பனையைத் துவங்குவதாக அறிவித்தது. முதல் நாளில் சிறப்பு அறிமுக சலுகையாக, Phone (3a) வெறும் ₹19,999-க்கும், Phone (3a) Pro  ₹24,999-க்கும் (அனைத்து சலுகைகள் உட்பட) கிடைக்கும்.

மார்ச் 4, 2025 அன்று நத்திங் நிறுவனம் Phone (3a) சீரிஸை, சில முக்கியமான கேமரா அப்கிரேடுகளுடன் உலகளவில் அறிமுகப்படுத்தியது. Phone (3a)-வில் 50MP மெயின் சென்சார், சோனி அல்ட்ரா-வைடு சென்சார் மற்றும் 50x ஆப்டிகல் ஜூம் வசதியுள்ள 2MP டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவை உள்ளன; அதுமட்டுமில்லாமல் பெரிஸ்கோப் கேமராவுடன் கூடிய Phone (3a) Pro-வில் 60x அல்ட்ரா ஜூம் அம்சம் உள்ளது. செல்ஃபீக்களுக்காக, Phone (3a)-வில் 32MP முன்புற  கேமரா உள்ளது; இதன் Pro மாடலில் 4K வீடியோ ரெக்கார்டிங் வசதியுடன் கூடிய 50MP சென்சார் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு போன்களும் ஸ்நாப்டிராகன்® 7s Gen 3  (Snapdragon®) மொபைல் பிளாட்ஃபார்ம் மற்றும் 5000mAh பேட்டரியுடன் வருவதால் – முழுமையாக சார்ஜ் செய்தால் இரண்டு நாட்கள் வரை பயன்படுத்த ஏதுவானது. மேம்படுத்தப்பட்ட இதன் 50W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தின் மூலமாக Phone (3a) சீரிஸினை 20 நிமிடங்களுக்குள் ஒரு  நாள் முழுவதற்கும் தேவையான சார்ஜினை (50%) நிரப்பிக் கொள்ளலாம். இரண்டு மொபைல்களும் Full HD+ ரெசல்யூசனுடன் கூடிய 6.77 இன்ச் இம்மர்சிவ் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளன. திரையின் ஒவ்வொரு இன்ச்சிலும் 387 பிக்சல்கள் மற்றும் ஃப்ளூயிட் 120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட்டும் இருப்பதால் காட்சிகள் மிகத் தெளிவாக  தெரிகிறது. கேமிங் மோடில் இதன் டிஸ்ப்ளே 1000 hz சாம்ப்லிங் ரேட்டினை கொண்டிருப்பதால்,  அனாயசமாகவும், ரெஸ்பான்சிவாகவும் கேம்ஸ் விளையாடுவது சாத்தியமாகிறது.

Nothing Phone (3a) சீரிஸ் - ஆண்ட்ராய்டு 15-ஐ அடிப்படையாகக் கொண்ட Nothing OS 3.1 இயங்குதளத்தில் செயல்படுகிறது; இதனால் நிலைத்தன்மை, அதிக பயன்பாடு மற்றும் தேவைக்கேற்ப பிரத்தியேகப்படுத்திக் கொள்வது சாத்தியமாகிறது. இதில் Nothing கேலரி, கேமரா மற்றும் வெதர் செயலிகளுக்கான அப்டேட்களும், ஆறு வருட அப்டேட்களுக்கான உத்தரவாதமும் உள்ளது - அதாவது மூன்று வருட ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் ஆறு வருடத்திற்கு செக்யூரிட்டி அப்டேட்களும் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்தத் சீரிஸில் புதிய அம்சமாக - குறிப்புகள் மற்றும் யோசனைகளை சேமித்து வைத்துக் கொள்வதற்காக செயற்கை நுண்ணறிவின் (AI) மூலம் இயங்கும் எசென்ஷியல் ஸ்பேஸ் (Essential Space) என்கிற வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது; மேலும், இந்த அம்சத்தை விரைவாக அணுக எதுவாக ஒரு பிரத்தியேக எசென்ஷியல் கீ (Essential Key) பட்டனும் (போனின் வலது பக்கத்தில்) கொடுக்கப்பட்டுள்ளது. இதனை அழுத்துவதன் மூலம் விவரங்களை சேமிக்கலாம், லாங் பிரஸ் செய்து வாய்ஸ் நோட்ஸ்களை (குரல் குறிப்புகள்) பதிவு செய்யலாம், மற்றும் சேமிக்கப்பட்ட தகவல்களைக் காண இந்த கீயை இருமுறை தட்டினால் போதுமானது.

Availability, Pricing and Offers:

● Phone (3a) will be available in Black, White, and Blue colour

○ 8+128 GB - ₹22,999 (Including bank offers)

○ 8+256 GB - ₹24,999 (Including bank offers)

● Phone (3a) Pro will be available in Grey and Black colour

○ 8+128 GB - ₹27,999 (Including bank offers)

○ 8+256 GB - ₹29,999 (Including bank offers)

○ 12+256 GB - ₹31,999 (Including bank offers)

பார்ட்னர் வங்கிகள்: HDFC வங்கி, IDFC வங்கி, OneCard

முதல் நாள் எக்ஸ்சேஞ்ச் சலுகை: ஃபிளிப்கார்ட், க்ரோமா, விஜய் சேல்ஸ் மற்றும் முன்னணி ரீடெயில் ஸ்டோர்களில் முதல் நாளன்று Phone (3a) சீரிஸை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு Phone (3a) மற்றும் Phone (3a) Pro ஆகிய இரண்டு மொபைல்களின் அனைத்து ரகங்களிலும்  ₹3000 கூடுதல் எக்ஸ்சேஞ்ச் சலுகையாக கிடைக்கும். சில முக்கிய பிராண்டுகளின் சாதனங்களுக்கான கியாரண்டியுடன் கூடிய எக்ஸ்சேஞ்ச் திட்டத்தையும் ஃபிளிப்கார்ட் வழங்குகிறது. 

கிடைக்குமிடம்: 

Phone (3a) வரும் மார்ச் 11 முதல் ஃபிளிப்கார்ட், ஃபிளிப்கார்ட் மினிட்ஸ் (Flipkart Minutes), விஜய் சேல்ஸ், க்ரோமா (Croma) மற்றும் அனைத்து முன்னணி ரீடெயில் ஸ்டோர்களிலும் விற்பனைக்கு கிடைக்கிறது

Phone (3a) Pro மார்ச் 11 முதல் ஃபிளிப்கார்ட், மற்றும் ஃபிளிப்கார்ட் மினிட்ஸ் மூலம் விற்பனைக்கு கிடைக்கிறது. மார்ச் 15 முதல், ஃபிளிப்கார்ட் டெலிவரிகள் துவங்குவதோடு; விஜய் சேல்ஸ், க்ரோமா மற்றும் அனைத்து முன்னணி ரீடெயில் ஸ்டோர்களில் இந்த  மாடலின் விற்பனையும் தொடங்குகிறது. 

மேலும், முதல் முறையாக Nothing Phone (3a) சீரிஸ் ஃபிளிப்கார்ட் மினிட்ஸ் தளத்தில் கிடைக்கவுள்ளது; அதாவது இதன் விற்பனை துவங்கிய 10 நிமிடங்களுக்குள் இந்த மொபைலை உங்கள் வீட்டிற்கு நீங்கள் டெலிவரி பெறலாம்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu