கோல்வாக்கருக்கு குருதட்சனை கொடுப்பதற்காக இந்தி சமஸ்கிருதத்தை புகுத்தி தமிழை அழிக்க முயல்வதா? என தென்காசி தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் மயிலவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாளிதழ்களில் வெளியாகியுள்ளன செய்தியில் ஒன்றிய கல்வி அமைச்சர் தேசிய கல்விக்கொள்கை 2020 தமிழ்நாடு கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். ஒன்றிய கல்வி அமைச்சர் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாவிட்டால் தமிழ்நாட்டிற்கான கல்விக்கான நிதியை ஒன்றிய அரசு நிறுத்தும் என்று கூறுவது ஏற்கத்தக்கதல்ல என்று முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் இருந்து இன்று ஒன்றிய அமைச்சராக இருக்கும் முருகன் அவர்கள், இது 1965 அல்ல அதனால் தமிழ்நாடு அரசு அரசியல் செய்யாமல் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டின் பாஜக தலைவர் அண்ணாமலை 1 3 2025 இல் இருந்து தமிழ்நாடு முழுவதும் தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மக்களிடையே கையொப்பம் வாங்க போவதாக அறிவித்துள்ளார்.
இந்த தேசிய கல்விக்கொள்கை நம் நாட்டின் மக்களுக்கு தேவையா? இது எதை வைத்து இந்த கொள்கையை வகுத்துள்ளார்கள் என்று பார்க்கும் பொழுது, தேசிய கல்விக் கொள்கை 2020 ல் பிரிவு 4.17 இல், கற்பிக்கப்படும் மூன்று மொழிகளில் ஒன்று கட்டாயமாக சமஸ்கிருதமாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பிரிவு 4.18 ல் சமஸ்கிருதம் தான் அனைத்து மொழிகளுக்கும் முதன்மையானது என்று கூறப்பட்டுள்ளது. 20.8, 20.15 மற்றும் 22.16 இல் சமஸ்கிருதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆகையால் சமஸ்கிருதத்துடன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஓடியா, மற்றும் இதர மொழிகளை வேண்டுமென்றால் கற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த தேசிய கல்விக் கொள்கையில் ஒரு மொழி நாட்டு மொழியாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் எல்லா அலோபதி மருத்துவ மாணவர்களும் ஆயுர்வேதா, யோகா, சித்தா போன்றவற்றை கற்க வேண்டும் என்று 20.5. ல் கூறப்பட்டுள்ளது.
ஆர் எஸ் எஸ் இன் குரு கோல்வாக்கர், 1939 ல் எழுதிய றுந ழச ழுரச யேவழைnhழழன னுநகiநென மற்றும் 1966 ல் எழுதிய டீரnஉh ழக வுhழரபாவ என்ற கட்டுரைகளில் இந்தி அல்லது சமஸ்கிருதம் நாட்டின் அலுவல் மொழியாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் தமிழ் மொழியையும் தமிழ் கலாச்சாரத்தையும் தனிப்பட்ட முறையில் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். உலகத்திலேயே தமிழ் மொழிதான் மிகத் தொன்மையான முதல் மொழி என்று பல ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்திற்கு முன்னரே தமிழ் தான் செம்மொழியாக இருந்தது என்று நிலைநாட்டப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்க தமிழ் மொழியையும் தமிழ் கலாச்சாரத்தையும் தனிப்பட்ட முறையில் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று கோல்வாக்கர் கூறியது சரியா? என்று மக்கள் கேட்கிறார்கள். பாஜக தலைவர் கையொட்பம் வாங்கும் போது இதற்கு பதில் கூறுவாரா? என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
உலகத்திலேயே முதல் செம்மொழியாக இருக்கும் தமிழை ஏன் பாஜகவின் தமிழ்நாட்டு தலைவர் அண்ணாமலையும், ஒன்றிய அமைச்சர் முருகனும், நாட்டின் கல்விக் கொள்கையில், நாடு முழுவதும் முதன்மையான தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை முதல் மொழியாக அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். சமஸ்கிருதம் இந்தி போன்ற பிற மொழிகளை தேவையானால் கற்றுக் கொள்ளலாம் என்று அமல்படுத்த ஏன் வலியுறுத்தவில்லை? என்று தமிழ் நாட்டு மக்கள் கேட்கிறார்கள்.
இதை பார்க்கும் பொழுது அண்ணாமலை அவர்களோ முருகன் அவர்களோ தமிழ் மொழிக்கு முக்கியம் தராமல் புறக்கணித்து விட்டார்களோ என்று மக்கள் ஐயப்படுகிறார்கள். ஏனெனில் ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்து சட்டசபையில் இருந்து வெளியேறிய பொழுது இவர்களோ அல்லது பாஜகவினரோ கண்டனம் தெரிவிக்கவில்லை. இதுதான் இவர்களின் மொழிபற்றா ? என்று மக்கள் கேட்கிறார்கள். அவ்வாறு இருக்க எதை வைத்து தமிழ்நாட்டு பாஜக தலைவர் தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக கையொப்பம் வாங்குவேன் என்று கூறுகிறார்? என்று மக்கள் கேட்கிறார்கள்.
மற்றொரு கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது மாணவ மாணவிகள் இரண்டு மொழிகளை கற்பது, படிப்பதற்கு எளிதாகவும் அது அவர்கள் அறிவை வளர்க்கும் விதத்திலும் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களும் அங்கு பேசும் தாய்மொழியை வைத்து மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆகையால் தமிழ் மொழியை தவிர வேறு எந்த ஒரு மொழியையும் மொழியும் கூடுதலாக படிக்கலாம். கேரளம் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் மாநிலங்களின் தாய்மொழியை முதன்மையாக கற்றுக்கொண்டு அதன் மூலம் ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக கற்றுக் கொண்டால் யாவரும் உலக அறிவு மற்றும் உலகளவில் வேலையை பெறுவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும். இத்துடன் சமஸ்கிருதத்தை படிக்க வேண்டும் என்றால், கோல்வாக்கர் கூறியபடி, நம் நாட்டில் அனைரும் சமஸ்கிருதம் இந்தியை தெரிந்து கொள்ள வேண்டும் இல்லை என்றால் நாட்டில் ஒற்றுமை ஏற்படாது என்று கூறுவது சரி அல்ல. 1952-ல் பொட்டு ஸ்ரீ ராமலூர் அவர்கள் உண்ணாவிரதம் இருந்து தனி தெலுங்கு தேசம் பெற்றார் அது தாய்மொழியின் மீதுள்ள பற்றினால் போராடினார். அவ்வாறு இருக்க சிலர் சலுகைக்காக தாய் மொழியின் பற்றை சில அரசியல்வாதிகள் விட்டுக் கொடுக்கக் கூடாது என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
தேசியக் கல்விக் கொள்கை 2020 ஆனது, ஆர்எஸ்எஸ் மற்றும் கோல்வாக்கரின் தத்துவங்களை கொண்டுதான் உருவானது என்று மக்கள் கருதுகிறார்கள். அதற்கு பதில் கூற முடியவில்லை இதனால் ஒவ்வொரு மாநிலத்தவரின் தாய்மொழியும் அழிக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. வடநாட்டில் பரவலாக பேசப்படும், சமீப காலத்தில் உருவாக்கப்பட்ட இந்தியைக் கொண்டு மற்ற மாநிலங்களில் பேசப்படும் தொன்மையான மொழிகளை அழிக்க வேண்டாம் என்று மக்கள் தங்கள் வீடுகளில் கோலமிடுவதன் மூலமாக வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கூடாது என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
தேசிய கல்விக் கொள்கையில் மாணவ மாணவிகள் வேறு ஒரு மாநில மொழியையும் கற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு அம்மாநிலங்களில் இருக்கும் ஆசிரியர்களை பணியவர்த்தி கற்றுக் கொடுக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது ஆகும். இவ்வாறு சாத்தியமில்லாதது என்று தெரிந்தும், சமஸ்கிருதம், இந்தியை முதன்மை மொழியாக கொண்டு வர வேண்டும் என்று நோக்கத்தில், ஏற்கனவே வடநாட்டில் 30 லட்சம் இந்தி ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்களை தென்பகுதிகளில் பணியமர்த்த வேண்டும் என்ற நோக்கத்திலும், தென் மாநிலங்களில் தாய்மொழி மற்றும் ஆங்கிலம் படித்தவர்கள் உலகம் முழுவதும் தகுந்த வேலைகளில் பணி புரிகின்றனர். அதனால், தமிழ், ஆங்கிலம் மொழிகள் மட்டுமல்லாமல் பிற மதங்கள் மற்றும் இட ஒதுக்கீட்டிற்கும் மீதும் கோல்வாக்கருக்கு இருந்த வெறுப்பை புதிய கல்விக் கொள்கை மூலம் நிறைவேற்ற முயல்கிறார்கள் என்று மக்கள் கருதுகிறார்கள்.
இது தவிர ஏற்கனவே மாணவ மாணவிகளுக்கு பணி பாடச் சுமை மிகுதியாக உள்ளது இந்நிலையில் சமஸ்கிருதம் போன்ற மொழிகளை கட்டாயமாக படிக்க வேண்டும் என்றால், அவர்களுக்கு சுமை மேலும் அதிகரித்து மன உளைச்சலுக்கு ஆளாவார்கள் இதனால் பெற்றோர்களும் வேதனை அடைவார்கள். சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்ற கண்ணதாசனின் பாடல் வரிகள் தான் இந்த புதிய கல்விக் கொள்கையை திணிப்பதால் மக்கள் மனதில் எழுகிறது. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் குரு கோல்வாக்கர் கருத்தை தேசிய கல்விக் கொள்கை மூலம் அமல்படுத்த, மாநிலங்கள் இந்த கொள்கையை ஏற்றால் தான் நிதி உதவி தருவோம் என்று ஒன்றிய கல்வி அமைச்சர் கூறுவதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும். இது வருங்கால மாணவ சந்ததியினரின் முன்னேற்றத்திற்கு எவ்வாறு உதவும் என்றும் மக்கள் கேட்கிறார்கள்.
ஆகையால் தேசிய கல்வித் திட்டத்திற்கு தமிழ்நாடு முதல்வர் எதிர்ப்பு தெரிவிப்பது சரியானது தான் என்று மக்கள் கருதுகிறார்கள் தமிழ்நாட்டில் தமிழ் தாய் மொழியைத் தவிர சமஸ்கிருதம், இந்தியை மாற்றாக புகுத்த வேண்டாம் என்ற மக்கள் கோரிக்கையை ஏற்று தேசிய கல்வி கொள்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இதுதான் மக்களின் ஒற்றை கோரிக்கையாக உள்ளது. இவ்வாறு திணிப்பதின் விளைவை பெற்றோர்கள் மட்டுமல்லாமல் மருத்துவ மாணவர்கள், வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் ஆராய்ந்து இதற்கு எவ்வித நடவடிக்கைகள் எடுப்பார்கள் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஏனென்றால் இதன் உள்நோக்கம் பாஜக சர்வாதிகாரமாக எப்பொழுதுமே ஆட்சியில் இருப்பதற்கு வழிவகை செய்கிறது. இந்த கொள்கையை ஒரே நாடு ஒரே தேர்தல் மற்றும் பொது சிவில் சட்டத்துடன் இணைத்து பார்க்கும் பொழுது பாஜக கோல்வாக்கரின் அடிப்படை வாதத்தை செயல்படுத்த தான் இவ்வாறு செயல்படுகிறதோ என்று மக்கள் அச்சப்படுகின்றனர். இந்திய பிரதமர் மோடி அவரது தாய் மொழி குஜராத்தில் எழுதியதில் ஜோதி பூஞ்ச் என்ற புத்தகத்தில் கோல்வாக்கர் பெரிய மகான் என்று கூறியுள்ளார். இது கோல்வாக்கருக்கு மோடியால் செய்யப்படும் குருதட்சணையாகவே மக்கள் அச்சப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்