இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப்) 18 புதிய ஏஜென்சி கிளைகளை அறிமுகம் செய்துள்ளது. #ஏனெஜ்சிநிர்மான் என்ற திட்டத்தின் கீழ் இந்தப் பரவலான நடவடிக்கை, இந்தியா முழுவதும் நிறுவனம் தனது பாதையை விரிவுபடுத்தவும், அதிக சமூகங்களுக்கு முழுமையான காப்பீட்டு தீர்வுகளை வழங்கவும் உதவுகிறது.
இதுபற்றி இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ருஷாப் காந்தி கூறுகையில், இந்தியா முழுவதும் நீளம் மற்றும் அகலத்தில் எங்கள் ஏஜென்சி சேனலின் விரிவாக்கம், நாட்டில் எங்கள் தளத்தை வலுப்படுத்துவதற்கான முக்கியமான முன்னேற்றமாகும். இந்த விரிவாக்கமானது, வெற்றிகரமாக செயல்படும் வங்கிக் காப்பீடு வணிகத்துக்கு கூடுதல் பயனளிக்கும். இது எங்கள் விநியோக முறைமையை விரிவுபடுத்தியும், பல்துறை விநியோக அமைப்பாக மாற்றும் நோக்கத்திற்கேற்பும் செயல்படுகிறது. அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில், நாடு முழுவதும் சுமார் 100 ஏஜென்சி கிளைகளை அமைக்க திட்டமிட்டு செயல்பட்டு வருகிறோம், என்றார்.இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப்-இன் ஏஜென்சி சேனல் தலைவர் திரு. சுமீத் சாஹ்னி கூறுகையில், இந்தியா முழுவதும் எங்கள் விரிவாக்கம், ஒரு வலுவான ஏஜென்சி சேனல் உருவாக்குவதில் எங்களின் கவனத்தை வெளிப்படுத்துகிறது. #ஏஜென்சிநிர்மான் என்ற திட்டத்தின் கீழ், இந்தியா முழுவதும் ஒரு வலுவான கிளை வலையமைப்பை உருவாக்குவதற்கான திட்டமிடல் எங்களுடையது. இதன் மூலம் கடைக்கோடியில் இருக்கும் வாடிக்கையாளரின் தேவைகளை பூர்த்தி செய்யலாம். எங்கள் விநியோகச் சேனலை பயன்படுத்தி, நாங்கள் தேவைக்கேற்ப காப்பீட்டு தீர்வுகளை வழங்கவும், வாடிக்கையாளர்களின் நிதி பாதுகாப்பை மேம்படுத்தவும் செயல்படுகிறோம். இந்த புதிய ஏஜென்சி கிளைகள், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், அந்த பகுதியின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும், என்றார்.
இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப், தனது #கஸ்டமர்ஃபர்ஸ்ட் தத்துவத்தில் உறுதிப்பாட்டுடன் இருக்கிறது. புதிய ஏஜென்சி கிளைகள் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன, மேலும் தனிப்பட்ட காப்பீட்டு தீர்வுகளை வழங்குவதற்கு திறமையான தொழில்நுட்ப பணியாளர்களால் நிரம்பியுள்ளன. இந்த கிளைகளின் மூலம், சமுதாயத்தில் காப்பீட்டின் முக்கியத்துவத்தையும் நிதி திட்டமிடலின் அவசியத்தையும் வலியுறுத்தும் பணிகளை முன்னெடுத்து, “2047க்குள் அனைவருக்கும் காப்பீடு” என்ற இலக்கை அடைய உதவும்.
தன்னம்பிக்கையான வலையமைப்பு, புதுமையான தயாரிப்புகள் மற்றும் வாடிக்கையாளர் மைய அணுகுமுறையுடன், இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் காப்பீட்டுத் துறையில் தனித்துவமான இடத்தை உருவாக்க தயாராக இருக்கிறது.

0 கருத்துகள்