ஹிந்த்வேர் கோயம்புத்தூரில் அடியெடுத்து வைத்து தன் சில்லறை வணிகத்தை விரிவாக்குகிறது

இந்தியாவின் முன்னணி பாத்வேர் பிராண்டான ஹிந்த்வேர் லிமிடெட் கோயம்புத்தூரில் ஒரு புதிய கடையைத் திறந்து தமிழ்நாட்டில் அதன் சில்லறை விற்பனையை விரிவாக்கியுள்ளது. குனியமுத்தூரில் சமீபத்தில் தொடங்கப்பட்ட ஹிந்த்வேர் பவுட்டிக் ஸ்டோர் பராஸ் என்ற ஸ்டோர் கழிப்பறை, வாஷ் பேசின், குழாய் மற்றும் ஷவர் ஆகியவற்றுக்குத் தேவையான செராமிக்ஸ் ஹிந்த்வேர் மற்றும் ஹிந்த்வேர் இத்தாலியன் கலக்‌ஷன் பிராண்டு பொருட்களை விரிவான வகையில் காட்சிப்படுத்தியுள்ளது.

ஹிந்த்வேர் தயாரிப்புகள் எந்த ஒரு குளியலறைக்கும் அழகிய தோற்றத்தைத் தருவதுடன் செயல்பாட்டை மேம்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய ஸ்டோர் வாடிக்கையாளருக்கு நிறைவு தரும் வண்ணம் தயாரிப்பைத் தேர்வுசெய்வது முதற்கொண்டு நிறுவல் மற்றும் பராமரிப்பு வரை சிக்கலற்ற ஷாப்பிங் அனுபவத்தை வழங்குகிறது.

கோயம்புத்தூரில் ஹிந்த்வேரின் விரிவாக்கம் நகரின் வளர்ந்து வரும் ரியல் எஸ்டேட் சந்தைக்கு ஏற்றதாக அமைகிறது. கோயம்புத்தூர் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதால் உள்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க அளவில் முதலீடுகள் செய்யப்படுவதால் பிரீமியம் குளியலறைப் பொருட்களின் தேவையும் அதிகரித்து வருகிறது. ஹிந்த்வேரின் இந்தப் புதிய ஸ்டோர் வளர்ந்துவரும் தேவையைப் பூர்த்தி செய்வதோடு குளியலறை அனுபவத்தை மேம்படுத்த புதுமையான மற்றும் ஸ்டைலான தயாரிப்புகளையும் வழங்குகிறது.

கடை திறப்பு குறித்து கருத்து தெரிவித்த பாத் & டைல்ஸ், ஹிந்த்வேர் லிமிடெடின் தலைமைச் செயல் அதிகாரி திரு. சுதன்ஷு பொக்ரியால் கூறும்போது, "சமீபத்தில் கோயம்புத்தூரில் எங்கள் கடை திறப்பை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த நடவடிக்கை மூலம் வாடிக்கையாளர்களுக்குத் தமிழகத்தில் எங்கள் சில்லறை விற்பனையை விரிவுபடுத்தியுள்ளோம். வாடிக்கையாளர்களின் பேரில் தனிக்கவனம் செலுத்துவதோடு பரந்த அளவிலான புதுமையான மற்றும் ஸ்டைலான தயாரிப்புகளுக்கான அணுகலையும் வழங்குகிறோம். இப்போது மாநிலம் முழுவதும் 32 பிராண்ட் ஸ்டோர்கள் உள்ளன. தரம், வடிவமைப்பு மற்றும் வாடிக்கையாளர் திருப்தி ஆகியவற்றில் கவனம் செலுத்துவதனால் தமிழ்நாட்டில் எங்களுடைய வளர்ச்சியும் வெற்றியும் தொடரும்” என்றார்

ஹிந்த்வேரின் விரிவான நெட்வொர்க் 35,000+ செயல்படும் ரீடெய்ல் டச்பாயிண்ட்கள், 700+ மாவட்டங்களில் 500+ விநியோகஸ்தர்கள் மற்றும் 575+ க்கும் மேற்பட்ட பிராண்ட் ஸ்டோர்களை உள்ளடக்கி வாடிக்கையாளர்களுக்கு இந்தியா முழுவதும் பரவலான அணுகலை உறுதி செய்கிறது. 1,090+ தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட வலுவான சேவை நெட்வொர்க்குடன் பெருநகர வட்டாரங்களில் 24 மணிநேரமும், பிற பகுதிகளில் 48 மணிநேரமும் விரைவான வழங்கும் நேரத்துடன் துரித சேவையை ஹிந்த்வேர் உறுதி செய்கிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu