ஸ்கோடா ஆட்டோ இந்தியா இந்தியாவில் ஆல்-னியூ ஸ்லேவியா மாண்டே கார்லோ எடிஷனை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்திய விளையாட்டுக் கருதுகோளை விரிவுபடுத்தும் வகையில், குஷாக் மற்றும் ஸ்லேவியா வரிசையில், ஆல்-நியூ ஸ்போர்ட்லைன் ரகத்தையும் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்திய வாடிக்கையாளர்களுக்கான மதிப்பு மற்றும் தேர்வு விகிதத்தை அதிகரிக்கும் வகையில் புதுமையான சலுகையை அறிவித்துள்ளது.
புதிய அறிமுகங்கள் குறித்து ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் பிராண்ட் இயக்குனர் பீட்டர் ஜனேபா கூறுகையில் ‘ விளையாட்டு மற்றும் வெற்றி உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில், மாண்டே கார்லோ பேட்ஜ் வாடிக்கையாளர்களுடன் வலுவான தொடர்பைக் கொண்டுள்ளது. ஸ்லேவியா மாண்டே கார்லோவை இன்றைக்கு நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம் என்பதைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். ஐரோப்பாவிற்கு வெளியே எங்களுக்குள்ள மிகப் பெரிய சந்தைகளில் ஒன்றான இந்தியாவில், ஸ்கோடா பிராண்டை வளர்ப்பதற்கான எங்கள் மூலோபாயத்தில் இதுவொரு பகுதியாகும். பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த மகிழுந்து, தனித்துவமான, நுட்பமான, வித்தியாசமான பணி மற்றும் ஸ்போர்ட்டியான அழகியலைத் தேடும் வாடிக்கையாளர்களுக்கான சரியான தேர்வாகும். இது ராலி மாண்டே கார்லோவின் 112 ஆண்டுகளுக்கும், 129 ஆண்டு வளமான பாரம்பரியத்திற்கும், இந்தியாவில் 24 ஆண்டுகளுக்கும் செலுத்தும் மரியாதை ஆகும்.ஸ்லேவியா ஸ்போர்ட்லைன் மற்றும் குஷாக் ஸ்பொர்ட்லைன் ஆகிய இரு புதிய டிரிம்களையும் நாங்கள் அறிமுகப்படுத்தி உள்ளோம். இது வாடிக்கையாளர்களுக்கு அதிகத் தேர்வு மற்றும் மதிப்பை வழங்குவதன் மூலம் வரம்பை மேம்படுத்தி நிகழ்நிலையில் வைத்திருப்பதற்கான எங்கள் நோக்கத்தைப் பிரதிபலிக்கிறது. மாண்டே கார்லோவின் ஸ்போர்ட்டி அழகியல் மிகவும் அணுகக் கூடிய விலையில் தேடும் வாடிக்கையாளர்களுக்கு இந்த ஸ்போர்ட்லைன் சரியான தேர்வாகும். புதிய மாண்டே கார்லோ மற்றும் ஸ்போர்ட்லைன் சலுகைகளுடன் இணைந்து, இந்தியாவில் ஸ்கோடா குடும்பத்தைக் கணிசமாக வளர்க்கும் தருணத்தை நாங்கள் ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்’ என்றார்.
ஆண்டுவிழாச் சலுகை
இந்தப் புதிய ரகத்தின் வெளியீடு, ராலி மாண்டே கார்லோவில் நிறுவனம் அறிமுகமான 112ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும். மேலும், விளையாட்டு ஈர்ப்பும், ஊக்கமும் பெற்ற மாண்டே கார்லோ மற்றும் குஷாக் & ஸ்லேவியாவின் ஸ்போர்ட்லைன் ரகங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, ஸ்கோடா ஆட்டோ இந்தியா, சில சலுகைகளை அறிவித்துள்ளது. மேற்கூறிய நான்கு மகிழுந்துகளில் ஏதேனும் ஒன்றை முன்பதிவு செய்யும் முதல் 5000 வாடிக்கையாளர்களுக்கு ரூ 30,000/- மதிப்பிலான சலுகைகளைப் பெறுவர். இந்த சலுகை உடனடியாக அமலுக்கு வரும். 2024 செப்டம்பர் 6 வரை செல்லுபடியாகும்.
உலோகத்தில் மாண்டே கார்லோ
இந்த மகிழுந்தில் நன்கு பரிசோதிக்கப்பட்ட மற்றும் நிரூபிக்கப்பட்ட 1.0 மற்றும் 1.5 டிஎஸ்ஐ எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன. 1.0 டிஎஸ்ஐ சிக்ஸ் ஸ்பீட் மேனுவல் மற்றும் அட்டோமேடிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. 1.5 டிஎஸ்ஐ டர்போ சார்ஜ்ட் பெட்ரோல் எஞ்சின், ஏழு ஸ்பீட் டிஎஸ்ஜி ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் மூலம் முன்புறச் சக்கரங்களுக்குச் சக்தியை அனுப்பும். இந்த மகிழுந்துகள் பிரத்யேக டொர்னாடோ ரெட் மற்றும் கேண்டி ஒயிட் வண்ணங்களில் கிடைக்கும்.
இவ்விரண்டு மகிழுந்துகளும் மாறுபட்ட வண்ணத்தில் ஆழமான கருப்புக் கூரையுடன் வருகின்றன. ஓஅர்விஎம்-களைப் போலவே, விண்டோ கார்னிஷும் முழுக் கருப்பு கருப்பொருளைக் கொண்டுள்ளது. ரேடியேட்டர் க்ரில் சர்ரவுண்ட், ஃபாக் விளக்கைச் சுற்றியுள்ள சர்ரவுண்ட், கருப்பு ஆர் 16 அல்லாய் சக்கரங்களைச் சுற்றியும், இந்தக் கருப்பு வண்ணம் தொடர்கிறது.
மாண்டே கார்லோ முன் ஃபெண்டர்கள் மற்றும் டார்க் டெயில் லைட்களிலுள்ள பேட்ஜிங் ஆகியவற்றில் நுட்பமான அலங்காரங்கள் தொடர்கின்றன. மகிழுந்தின் முன் மற்றும் பக்கவாட்டு ஓரங்கள், பின்பக்க பூட்டின் லிப்களுக்கு, ஸ்போர்ட்டி, கருப்பு ஸ்பாய்லர்கள் எழில் சேர்க்கின்றன. பின்புறத்தை, பிளாக் ஸ்போர்ட்டி ரியர் டிஃப்யூசர் மற்றும் பிளாக் ப்ம்பர் கர்னிஷ் மெருகூட்டுகின்றன. மாண்டே கார்லோ வெளிப்புறச் சிறப்பம்சங்களாக, டார்க் க்ரோமில் நுட்பமான மற்றும் கம்பீரமான கதவுகளின் கைப்பிடிகள் விளங்குகின்றன. அழகுக்கு அழகூட்டும் வகையில் ஸ்லேவியா மாண்டே கார்லோவின் வெளிப்பக்கத்தில் உள்ள அனைத்து எழுத்துக்களும் கருப்பு வண்ணத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.

மாண்டே கார்லோ உட்புறம்
கருப்பு ஸ்போர்ட்டி கேபின் கொண்ட மகிழுந்தின் உட்புறம், மாண்டே கார்லோ ரெட் வண்ண கருப்பொருளைக் கொண்டிருக்கும். டெக்கர் ஃப்ரேம், ஏர் வெண்ட்ஸ், லோயர் டாஷ் பொர்ட், செண்டர் கன்சோல் டெக்கர் மற்றும் ஹேண்ட் பிரேக் புஷ் பட்டன் உள்ளிட்ட அனைத்தும் கருப்பு நிறத்தில் தோன்றும். ஸ்டீயரிங்க் வீல், கியர் நாப் ஆகியவையும் கருப்பு வண்ணத்தில் கண்ணைக் கவரும். ஸ்கோடா ஆட்டோவின் கருப்பு ஸ்போர்ட்டி கருதுகோள், அதன் உட்புறத்தின் ஏனைய பகுதிகளுக்கும் பரவி மெருகூட்டுகிறது.
ஸ்போர்ட்டி டைனமிசத்தின் கிடைமட்டக் கோடுகளுடன், கருப்பு உட்புறங்களை வழங்குவதற்கு உட்புறத்தே சிவப்பு வண்ணத்தில் நுட்பமான சாய்வுக் கோடுகளும் உள்ளன. கோட்டின் மையத்தில் துளைகள் வழியாகத் தொடரும் ஒற்றைச் சிவப்பு அம்சம் உள்ளது. கருப்பு நிறத்திலுள்ள மாண்டே கார்லோ லெதரெட் தோல் இருக்கைகளின் ஓரங்கள் சிவப்பு வண்ணத்தில் அமைந்துள்ளன. இரு ஸ்போக்குகள் கொண்ட ஸ்டீரிங்க் சக்கரம் சிவப்பு நிறத்தில் தையலைக் கொண்டுள்ளது.
கருப்பு மற்றும் சிவப்பு மாண்டே கார்லோ கருப்பொருள், இன்ஃபோடெயின்மெண்ட் மற்றும் ஓட்டுனரின் மெய்நிகர் காக்பிட் வரை நீண்டுள்ளது. இருப்பினும், ஸ்போர்ட்டி கேபினுக்குள் நுழைவதற்கு முன், காட்சி தருவது முன்பக்கக் கதவுகளில் பொறிக்கப்பட்ட காண்டே கார்லோ ஸ்கஃப் தகடுகள் ஆகும். காண்டே கார்லோ கருப்பொருள் அலங்காரத்தில் இதே கருப்பு சிவப்பு வண்ணங்களில், கால்களை வைக்கும் பகுதியில், தனித்துவமாகக் காணப்படும் ஸ்போர்ட்டி ஆலு பெடல்களை, நிச்சயம் ஓட்டுனர் கவனிக்கத் தவறமாட்டார்.
தி ஸ்போர்ட்லைன்
ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம், அதிக விற்பனையாகும் மிகச் சிறந்த இரு ஸ்கோடா மகிழுந்துகளான குஷாக் மற்றும் ஸ்லேவியா ரகங்களில் ஸ்போர்ட்லைன் அறிமுகம் மூலம் விரிவுபடுத்தி உள்ளது. வாடிக்கையாளர் விருப்பத்தின் விளைவாக, ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம், தற்போது, குஷாக் மற்றும் ஸ்லேவியா மகிழுந்துகளின் கிளாசிக், சிக்னேசர், மாண்டே கார்லோ மற்றும் பிரெஸ்டிஜ் ரகங்களுக்கும் ஸ்போர்ட்லைனை அறிமுகப்படுத்தி உள்ளது. இது வாடிக்கையாளர்களின் தேர்வையும், மதிப்பையும் உயர்த்தி உள்ளது.
மேம்பாடுகள்
குஷாக் மற்றும் ஸ்லேவியா ஆகிய இரண்டின் ஸ்போர்ட்லைன் டிரிம், மாண்டே கார்லோவின் டெயில்லைட், ஏரோ கிட் மற்றும் பிறவற்றிலிருந்து பிளாக்ட்-அவுட் வடிவமைப்பை பெறுகின்றன. ஸ்லேவியா ஸ்போர்ட்லைன் ஆர்16 பிளாக் அல்லாய் வீல்களையும், குஷா ஆர்17 பிளாக் அல்லாய் வீல்களையும் பெறுகின்றன. குஷாக் மற்றும் ஸ்லேவியா மகிழுந்துகளிலுள்ள ஸ்போர்ட்லைன் எல்இடி முகப்பு விளக்குகளையும், டிஆர்எல் விளக்குகளையும் கொண்டுள்ளன.
உள்ளிருக்கும் அம்சங்கள்
குஷாக் மற்றும் ஸ்லேவியா வரிசையில், ஏனைய அம்சங்களைப் போலவே, ஸ்போர்லைனிலும் ஆறு ஏர்பேக்குகள் தாமாகவே வருகின்றன. கூடுதலாக, இந்த ஸ்போர்ட்டி டிரிம்-இல், மின்சார சன்ரூஃப், அல்லாய் ஃபுட் பெடல்கள், இணைப்பு டாங்கிள், ரெயின் ஸென்கிங்க் வைப்பர், ஆட்டோ டிம்மிங்க் இண்டர்னல் ரியர் வியூ கண்ணாடி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன.
மேம்பட்ட தேர்வு மற்றும் பாதுகாப்பு
ஸ்போர்ட்லைன் சேர்க்கப்பட்டதன் காரணமாக, குஷாக் மற்றும் ஸ்லேவியா ரகம் மேலும் விரிவடைந்துள்ளது. இரு மகிழுந்துகளும் இப்போது க்ளாசிக், சிக்னேசர், ஸ்போர்ட்லைன், மாண்டே கார்லோ மற்றும் பிரெஸ்டிஜ் வகைகளில் கிடைக்கின்றன. ஒவ்வொரு ஸ்கோடாவிலும் குறைந்தபட்சம் ஆறு ஏர்பேக்குகள் இருக்கின்றன. மேலும், குஷாக் மற்றும் ஸ்லேவியா ஆகிய இரண்டும் குளோபல் என்சிஏபி தரக் கட்டுப்பாட்டின் கீழ், வயது வந்தோர் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக முழு 5 நட்சத்திர தர மதிப்பீட்டைப் பெற்றுள்ளன.
சூப்பர்ப் மற்றும் கோடியாக் ஆகியவற்றுக்கும், யூரோ என்சிஏபி தரக் கட்டுப்பாட்டின் கீழ், அதே தர மதிப்பீடு கிடைத்துள்ளது. ஸ்லேவியா மாண்டே கார்லோ மற்றும் ஸ்போர்ட்லைன் டிரிம் ஆகியவை குஷாக் மற்றும் ஸ்லேவியாவில் சேர்க்கப்பட்டதன் காரணமாக, ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் தனது 5 நட்சத்திரப் பாதுகாப்பான மகிழுந்துகளின் தொகுதியை மேலும் விரிவுபடுத்தி உள்ளது.

0 கருத்துகள்