நெல்லை ஆகாஷ் பைஜூஸ் மாணவர்கள் நீட் 2024 தேர்வில் சாதனை

தேர்வுத் தயாரிப்பு சேவைகளில் முன்னனியில் இருக்கும் ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் (ஏஇஎஸ்எல்) திருநெல்வேலியின் மாணவர்கள் சையத் அஹமத் மற்றும் ஜேசன் சந்திரராஜ் ஜே நீட் யுஜி 2024 தேர்வில் 715 மதிப்பெண்களுடன் அகில இந்திய தரவரிசைப்பட்டியலில் 113 மற்றும் 222வது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளதை பெருமையுடன் அறிவிக்கிறது. இந்த குறிப்பிடத்தக்க சாதனை அவர்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் ஏஇஎஸ்எல் வழங்கிய உயர்தர பயிற்சிக்கு ஒரு சான்றாகும். தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது.

ராஜ வீரப்பன் ஏ 691 மதிப்பெண், ஃபரீன் எல் 685 மதிப்பெண், கோமதி அம்மன் ஆர் 685 மதிப்பெண், ஆதித்யா சிவராம் 685 மதிப்பெண், எரின் ஆண்டோ ஜே 680 மதிப்பெண், தியானேஷ் 677 மதிப்பெண், ஸ்ரீநிதி 675 மதிப்பெண் பெற்று 99 சதவிதத்துடன் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
உலகளவில் கடினமான நுழைவுத் தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் நீட் தேர்வுக்குத் தயாராவதற்காக ஏஇஎஸ்எல் வகுப்பறைத் திட்டத்தில் மாணவர்கள் சேர்ந்தனர். கருத்தாக்கங்களைப் பற்றிய அவர்களின் கடுமையான புரிதல் மற்றும் ஒழுக்கமான படிப்பு அட்டவணையை கடைபிடித்ததே அவர்களின் குறிப்பிடத்தக்க வெற்றிக்கு காரணம்.  இதுகுறித்து பேசிய மாணவர்கள், "உள்ளடக்கம் மற்றும் பயிற்சி என இரண்டிலும் எங்களுக்கு உதவிய ஆகாஷிற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். ஏஇஎஸ்எல்-ன் உதவி இல்லாமல் குறுகிய காலத்தில் வெவ்வேறு பாடங்களில் பல கருத்துகளை நாங்கள் புரிந்துகொண்டிருக்க மாட்டோம்” என்றார்.

மாணவர்களின் சாதனையைப் பாராட்டி பேசிய ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் (AESL) முதன்மை கல்வி மற்றும் வணிகத் தலைவர் திரு.தீரஜ் குமார் மிஸ்ரா கூறுகையில், "மாணவர்களின் முன்மாதிரியான சாதனையை நாங்கள் வாழ்த்துகிறோம். நீட் 2024 தேர்வு எழுத 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களின் சாதனையானது அவர்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் அவர்களின் பெற்றோரின் ஆதரவை பறைசாற்றுகிறது. எங்கள் மாணவர்களின் வருங்கால முயற்சிகள் வெற்றிபெற எங்களின் வாழ்த்துக்கள்” என்றார்.

இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் இளங்கலை மருத்துவம் (MBBS), பல் மருத்துவம் (BDS) மற்றும் AYUSH (BAMS, BUMS, BHMS, முதலியன) படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்கள் மற்றும் வெளிநாட்டில் முதன்மை மருத்துவத் கல்வியை படிக்க விரும்புபவர்களுக்கான தகுதித் தேர்வாக தேசிய தேர்வு முகமையால் ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu