ஹேயர் கிநொச்சி டார்க் எடிஷன் ஏர் கண்டிஷனர் அறிமுகம்

வீட்டு உபயோக பொருட்களை தயாரிக்கும் ஹேயர் இந்தியா, தொடர்ந்து 15 ஆண்டுகளாக உலகளாவிய முக்கிய சாதனங்களின் நம்பர் ஒன் பிராண்டாக தொடர்ந்து வருகிறது. பல்வேறு புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வரும் ஹேயர் இந்தியா நிறுவனம், தற்போது புதிய கிநொச்சி டார்க் எடிசன் ஏர் கண்டிஷனரை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. புதுமையான தொழில்நுட்பம் மற்றும் பிரீமியம் ரகத்தில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய ஏர் கண்டிஷனர் 10 வினாடிகளில் சூப்பர்சோனிக் கூலிங், அதிவேகமான ஸெல்ப் கிளீன் டெக்னாலஜி, ஏகலா இன்வெர்ட்டர் டெக்னாலஜி, இன் டெல்லி கன்வெர்டபிள் 7 இன் ஒன் மற்றும் பல்வேறு மேம்பட்ட தொழில்நுட்பங்களை இந்த புதிய ரக ஏர் கண்டிஷனில் புகுத்தப்பட்டுள்ளது. 1.6 டன் மற்றும் 1.0 டன் ஆகிய கிரகங்களில் கிடைக்கும், அனைத்து சில்லறை வணிக நிறுவனங்களிலும் இது விற்பனைக்கு வர உள்ளது.

இந்திய வாடிக்கையாளர்களுக்கு புதுமையான தயாரிப்புகளை தயாரித்து அழிப்பதில் தொடர்ந்து உறுதி கொண்டு உள்ள ஹேயர் இந்தியா, உத்வேகமான வாழ்க்கைக்கான வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளை பூர்த்தி செய்ய தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களால் இயக்கப்படும் கண்டுபிடிப்புகளை மையமாகக் கொண்டு, புதிய அறிமுகத்துடன் வாடிக்கையாளர்களுக்கான பிரீமியம் அனுபவத்தை வழங்குவதில் ஹேயர் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.

புதிய அறிமுகம் குறித்து ஹேயர் அப்ளையன்சஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் திரு என். எஸ். சதீஷ் கூறுகையில், "ஹேயர் இந்தியாவில், நுகர்வோரின் வளர்ந்து வரும் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பது எங்கள் நெறிமுறைகளுக்கு அடிப்படையாக உள்ளது என்றார். பல ஆண்டுகளாக அன்றாட வாழ்க்கையை சிறந்ததாகவும், வசதியாகவும் மாற்றும் வகையில் புதுமையான தீர்வுகளை வழங்குவதோடு, அழகியல் ரீதியாக வடிவமைக்கப்பட்ட பிரீமியம் தயாரிப்புகளுக்கான அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் தயாரிப்புகளின் சுற்றுச்சூழல் அமைப்பை நிர்வகிப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம் என்றார். வாடிக்கையாளர்களால் ஈர்க்கப்பட்ட புதுமைகளை உருவாக்க உறுதி பூண்டு அதற்கான தொடர் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், அதில் சமீபத்திய கிநொச்சி டார்க் எடிசன் உட்பட எங்களின் அனைத்து ஏர் கண்டிஷனர்களும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, இந்திய சந்தைக்காக என பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். இந்த ஏர் கண்டிஷனர் மூலம், நுகர்வோருக்கு மேம்பட்ட அம்சங்களுடன் கூடிய பிரிமியம் தயாரிப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் செயல் திறன் மற்றும் ஸ்டைல் என இரண்டிலும் கோடை வெப்பத்தை எதிர்த்து போராட முடியும் என்பதை உறுதி செய்கிறோம் என்றும் தெரிவித்தார்.

பிரிமியம் அழகியல் மற்றும் வடிவமைப்பு ஆகியவை அண்மை காலங்களில், இந்திய நுகர்வோர்கள் தங்கள் வீடுகளின் அழகிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, அவர்களின் ஆளுமையின் பிரதிபலிப்புகளாக அவற்றை பார்ப்பதில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த வளர்ந்து வரும் போக்கு மற்றும் வளர்ந்து வரும் தேவையை ஒப்புக்கொண்டு, ஹேயர் இந்தியா வின் கினோச்சி டார்க் எடிசன் ஏர் கண்டிஷனரை அறிமுகப்படுத்தியுள்ளது, இது குளிர்சாதன மட்டுமல்ல, மாடல் ப்ரீமியம் தொழில்நுட்பம், புதுமை மற்றும் புதுப் பாணியான வடிவமைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. இது வீட்டில் பொருத்தப்பட்டு இருப்பதன் மூலம் நேர்த்தியான சிறப்பையும் வெளிப்படுத்துகிறது.

10 நொடிகளில் சூப்பர் சோனி குளிர்ச்சி:
புதிய காற்று சீர் அமைப்பின் தனித்துவமான அம்சம், வழக்கமான குளிரூட்டிகளை விட 20 மடங்கு வேகமான குளிரூட்டும் அனுபவத்தை வழங்கும் திறன் கொண்டது. கூடுதலாக, இந்த மாடலில் 60 டிகிரி செல்சியஸ் வரை, தீவிர வெப்ப நிலையில் கூட திறமையான அற்புதமான குளிர்ச்சியை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புரோஸ்ட் சுய தூய்மையான தொழில்நுட்பம்:
புதிய கினோச்சி மாடல், இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஹேயர் இன் உறுதிப்பாட்டுடன் இணைந்து ஆரோக்கியமான, சுத்தமான காற்றை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. முழு இன்வெர்ட்டர் ஏர் கண்டிஷனர் வரம்பில் உள்ள புரோஸ்ட் சுய சுத்தமான தொழில்நுட்பம் 99.9 விழுக்காடு கிருமி நீக்கம் செய்வதை உறுதி செய்கிறது, 15 நிமிடங்களில் முற்றிலும் தூய்மையான காற்றை வெளிப்படுத்தும், ஆறு நிமிடங்களில் உணர்த்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஹெக்ஸா இன்வெர்ட்டர் தொழில்நுட்பம்
ஹேக்ஸா இன்வெர்ட்டர் தொழில்நுட்பம் மின்னணு விரிவாக்க வால்வ் மற்றும் இரட்டை டிசி கம்ப்ரஸர் கொண்ட முழு டிசி இன்வெர்ட்டர் தொழில்நுட்பத்தின் ஆதரவுடன், இந்த குளிரூட்டியானது மிகவும் வலுவான வடிவமைப்புடன் வருகிறது. இது கூடுதல் சக்தி வாய்ந்த செயல் திறனை வழங்குகிறது.

இன்டெல்லி மாற்றத்தக்கது - 7 இன் 1:
இந்த அறிவார்ந்த மாற்றத்தக்க அம்ச பயனர்கள் தங்கள் தேவைக்கேற்ப குளிரூட்டிகளின் குளிரூட்டும் திறனை குறைக்க அனுமதிக்கிறது. இன் டெல்லி ப்ரோ சென்சார் திறமையான செயல் திறனுக்காக சுய சரி செய்தலையும் வழங்குகிறது. இது பயனர்கள் தங்கள் தேவைக்கேற்ப ஏர் கண்டிஷனரின் திறன் தேவையை தேர்வு செய்ய உதவும், இதன் விளைவாக அதிக ஆற்றல் சேமிப்பும் கிடைக்கும்.

20 மீட்டர் நீளமுள்ள காற்றோட்டம்:
சமீபத்திய மாடல் "டர்போ" பயன்முறையை கொண்டுள்ளது, இது இந்திய பயனர்களுக்கு நிலையான மற்றும் சக்தி வாய்ந்த குளிர்ச்சியை உறுதி செய்கிறது. 20 மீட்டர் நீளமான காற்றோட்டத்துடன், அறையின் அனைத்து மூளைகளிலும் குளிர்ச்சியானது விரைவாக சென்று அடையும்.

நீண்ட ஆயுள்:
ஹேயர் இந்தியா வின் புதிய ஏர் கண்டிஷனர் மாடல் அதிக சுற்றுப்புற செயல்திறனுடன் வலுவூட்டப்பட்டுள்ளது. அதன் சிறப்பு வடிவமைப்பு மற்றும் பயனுள்ள கண்பார்மல் பூச்சு ஆகியவை சாதனத்தின் கூறுகளை வெளிப்புற உட்புறங்களில் இருந்து பாதுகாக்கின்றன, மேலும் நீண்ட காலத்திற்கு பயனுள்ள செயல் திறனை உறுதி செய்கின்றன. கூடுதலாக, இது ஒரு ஹைப்பர் பிசிபி (பிராண்டட் சர்க்யூட் போர்டு) இதில் பொருத்தப்பட்டுள்ளது. இது நிலையான செயல்பாடுகளை வழங்குவதற்கும், பராமரிப்பதற்கும், காற்று சீரமைப்புகளின் நீண்ட ஆயுளை மேம்படுத்துகிறது.

விலை மற்றும் கிடைக்கும் இடங்கள்:
  • Haier Kinouchi Dark Edition ஏர் கண்டிஷனர் இந்தியா முழுவதும் 46 ஆயிரத்து 990 ரூபாய் என்ற விலையில் கிடைக்கும்.
  • அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக ஹேயர் இந்தியா பத்து விழுக்காடு வரையிலான விலை தள்ளுபடிகள் உடன் சேர்த்து 15 ஆயிரத்து 990 ரூபாயில் ஐந்தாண்டு விரிவான உத்தரவாதத்தையும் வழங்குகிறது. மேலும் நேரடியாக வீட்டுக்கு வந்து தயாரிப்பை பொருத்துவதற்கும், வாழ்நாள் முழுவதும் கம்ப்ரஸர் உத்தரவாதமும் உடன் அளிக்கப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu