எச்டிஎஃப்சி வங்கி லட்சத்தீவில் உள்ள கவரட்டி தீவில் தனது கிளையைத் திறக்கிறது

எச்டிஎஃப்சி வங்கியானது லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தில் உள்ள கவரட்டி என்ற தீவில் தனது கிளையைத் திறந்துள்ளது. யூனியன் பிரதேசத்தில் கிளையை வைத்திருக்கும் ஒரே தனியார் துறை வங்கி இது மட்டுமே.

இந்திய கடற்படையின் கமாண்டிங் அதிகாரியான கேப்டன் லவ்கேஷ் தாக்கூர் மற்றும் பிரபல குடியுரிமையாளரான டாக்டர் கே பி முத்துக்கோயா ஆகியோர் இணைந்து இந்தக் கிளையைத் திறந்து வைத்தனர். எச்டிஎஃப்சி வங்கியின் சில்லறை வணிகக் கிளையின் குழுத் தலைவர் திரு. எஸ் சம்பத்குமார் மற்றும் தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகியவற்றின் வங்கிக் கிளைத் தலைவர் திரு சஞ்சீவ் குமார் மற்றும் பிற உள்ளூர் பிரமுகர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்தக் கிளையானது, யூனியன் பிரதேசத்தில் தனிப்பட்ட வங்கி மற்றும் டிஜிட்டல் பேங்கிங் ஆகியவற்றில் குறிப்பிட்ட முக்கியத்துவத்துடன், பல்வேறு வகையான சேவைகளை வழங்குவதன் மூலம் வங்கிக் கட்டமைப்பை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டுள்ளது. சில்லறை விற்பனையாளர்களுக்கான கியூஆர் அடிப்படையிலான பரிவர்த்தனைகள் போன்ற வடிவமைக்கப்பட்ட டிஜிட்டல் தீர்வுகள் இதில் அடங்கும்.

புதியக் கிளையைத் துவங்கியது குறித்து கருத்து தெரிவித்த, எச்டிஎஃப்சி வங்கியின் சில்லறை வணிகக் கிளையின் குழுத் தலைவர் திரு. எஸ் சம்பத்குமார் கூறியதாவது, “எச்டிஎஃப்சி வங்கியின் கிளைகள் குளிர்ச்சியான காஷ்மீரிலும், கன்னியாகுமரியின் தெற்கு முனையிலும் மற்றும் இப்போது லட்சத்தீவிலும் உள்ளன. வாடிக்கையாளர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு மிகவும் வசதியான முறையில் சேவை செய்வதற்கான எங்கள் கடமையுணர்வை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது. லட்சத்தீவில் உள்ள தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் வணிகங்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் அவர்களின் நிதிப் பயணத்தில் நம்பகமான பங்காளியாக மாறுவதற்கும் தீவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பங்களிப்பதற்கும் நாங்கள் ஆவலாக உள்ளோம்.”

டிசம்பர் 31, 2023 நிலவரப்படி, வங்கியின் டிஸ்ட்ரிபியூஷன் நெட்வொர்க் 8,091 கிளைகளையும், 3,872 மாநகரங்கள் / நகரங்களில்  20,688 ஏடிஎம்களையும் கொண்டுள்ளது. இது டிசம்பர் 31, 2022 நிலவரப்படி, 7,183 கிளைகளையும், 3,552 மாநகரங்கள்/ நகரங்களில் 19,007  ஏடிஎம்களையும் கொண்டிருந்தது. எங்கள் கிளைகளில் 52% பகுதியளவு நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் உள்ளந. கூடுதலாக, எங்களிடம் 15,053 வணிக நிருபர்கள் உள்ளனர், அவர்கள் முதன்மையாக பொது சேவை மையங்கள் (சிஎஸ்சி) மூலமாக நிர்வகிக்கப்படுகிறார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu