பிரிட்டானியா நியூட்ரிசாய்ஸ் - நியூட்ரிப்ளஸ் செயலி அறிமுகம்

இந்தியாவின் முன்னணி பிஸ்கட் பிராண்டுகளில் ஒன்றான பிரிட்டானியா நியூட்ரிசாய்ஸ், இன்று அதன் நியூட்ரிப்ளஸ் (NutriPlus app) செயலியின் வாயிலாக சுகாதார-தொழில்நுட்பத் துறையில் நுழைவதாக அறிவித்துள்ளது. பிரிட்டானியா நியூட்ரிசாய்ஸின் இந்த ‘நியூட்ரிப்ளஸ்  செயலியை <https://aktivolabs.com/about/><https://aktivolabs.com/about/><https://aktivolabs.com/about/> ( <https://aktivolabs.com/about/>Aktivo Labs <https://aktivolabs.com/about/>)  <https://aktivolabs.com/about/> நிறுவனத்துடன்  இணைந்து வடிவமைத்துள்ளது. ஆதாரங்களின் அடிப்படையிலான மருத்துவ மற்றும் நல்வாழ்வு தீர்வுகளை உருவாக்குவதில் நிபுணத்துவம் பெற்ற ஒரு முன்னோடி தொழில்நுட்ப நிறுவனமாக ஆக்டிவிகோ உள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) சமீபத்திய அறிக்கையின்படி, நாடு முழுவதும் தொற்றும் தன்மையில்லாத வளர்சிதை மாற்ற நோய்கள் (NCDs) அதிகரித்துவருவது தெரியவந்துள்ளது. 2021-ஆம் ஆண்டில் மட்டும், 101 மில்லியன் நபர்களுக்கு நீரிழிவு நோய் இருப்பதாக அதன் ஆய்வுகளில் கண்டறியப்பட்டது; அதே நேரத்தில் 136 மில்லியன் பேர் சர்க்கரை நோயின் ஆரம்ப நிலையான ப்ரீடியாபயாட்டீஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், அதிர்ச்சியூட்டும் விதமாக உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதனோடு தொடர்புடைய உடல்நல பிரச்சினைகளால் 315 மில்லியன் மக்கள் போராடி வருவதும் தெரியவந்துள்ளது. அதிகரித்து வரும் இந்த உடல்நலப் பிரச்சினைகள் பாதிக்கப்பட்ட நபர்களின் மீது மிகப்பெரிய சவால்களை சுமத்தியுள்ளன. அதுமட்டுமில்லாமல், இது போன்ற நிலைமைகள் இந்தியா போன்ற அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டின் சுகாதார உட்கட்டமைப்பிலும் கணிசமான நெருக்கடியை ஏற்படுத்துகின்றன.

சரியாக முறைப்படுத்தப்பட்டு கணக்கிட ஏதுவாக இருக்கும் சுகாதாரம் என்பது - ஒரு நாட்டின் பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பல்வேறு மொழிகளைப் பேசும் அனைத்து தரப்பு மக்களுக்கும் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கான ஊக்கத்தை அளிக்கிறது. ஆக்டிவோ லேப்ஸின் தொழில்நுட்பமானது ஒருவரது உடல்நலனை வெளிப்படுத்தும் அளவீடுகளை தொடர்ந்து கண்காணிக்க உதவுகிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சாத்தியமான பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிய முடிகிறது. இப்படி முன்னதாக கண்டறிவதால் உரிய மருத்துவ சிகிச்சைகளை பெற முடிவதோடு, நோய்கள் அடுத்தகட்டத்திற்கு நகராமல் தடுக்கவும் முடிகிறது. நாட்டின் மருத்துவ அமைப்புகளின் மீதுள்ள ஒட்டுமொத்த சுமைகளைக் குறைக்கவும் உதவுகிறது.

ஆக்டிவோ லேப்ஸ் நிறுவனத்தின் உயரிய மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் குழுவால் உருவாக்கப்பட்ட, “ நியூட்ரிப்ளஸ் (NutriPlus) செயலியானது - நலமாக வாழவேண்டும் என முயலும் அதன் பயன்பாட்டாளர்களுக்கு  ஆதார அடிப்படையிலான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உதவுகிறது.

நியூட்ரிப்ளஸ் செயலியானது தினசரி நியூட்ரி_ஸ்கோரை (உடல்நல மதிப்பீட்டை) வழங்குகிறது; அதாவது எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்கிறார்கள், எவ்வளவு நேரம் உறங்குகிறார்கள் என்பன போன்ற காரணிகளின் அடிப்படையில் செயலியை பயன்படுத்துவோருக்கு ஒரு மதிப்பெண்ணை வழங்கும். இதன் மூலம் அவர்கள் தங்கள் ஆரோக்கியம் குறித்த ஒரு கண்ணோட்டத்தை பெறலாம்.

ஆரோக்கியத்தைக் குறிக்கும் இந்தவொரு மதிப்பெண் மூலம் அந்த நபர் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்தும், அவரது தனிப்பட்ட உடல்நல போக்கு குறித்தும் தெளிவாக புரிந்துகொள்ளலாம். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், நியூட்ரிப்ளஸ் செயலியானது கையில் அணியக்கூடிய ஸ்மார்ட் வாட்ச் போன்ற சாதனங்களை நம்பியில்லாமல், சுயமாக செயல்படுகிறது; ஒருவரது உடல் செயல்பாடுகள் மற்றும் உட்கொள்ளும் ஊட்டச்சத்தைக் கண்காணிக்கவும், நிர்வகிக்கவும் அவரது ஸ்மார்ட்போன் மட்டுமே போதுமானதாகும். நியூட்ரிப்ளஸ் செயலியானது ஒரு விரிவான வாராந்திர உடல்நல  மதிப்பீட்டையும் வழங்குகிறது; பயன்பாட்டாளரின் பிராந்தியம் உள்ளிட்ட இதர அடிப்படைகளை கருத்தில் கொள்ளாமல், பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட நுண்ணறிவுகளுடன் இந்த மதிப்பீடு அவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

இங்கிலாந்தின் லண்டன் கிங்ஸ் கல்லூரியின், ஏஜிங் ரிசர்ச் (வயது முதிர்வு ஆராய்ச்சி) துறையின், இயக்குநர், பேராசிரியர், ரிச்சர்ட் சியோவ் அவர்கள் இதுகுறித்து கூறுகையில்,  "பிரிட்டானியா மற்றும் ஆக்டிவோ லேப்ஸ் நிறுவனங்களுக்கு இடையேயான இந்த கூட்டணியின் மூலம் உருவாக்கப்பட்ட  நியூட்ரிப்ளஸ் செயலியானது - வயது காரணமாக ஏற்படும் பரவாத வளர்சிதை மாற்ற நோய்களின் (NCDs) அபாயத்தைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்; வாழ்க்கை முறையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து மில்லியன் கணக்கான இந்திய மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஆற்றலும் இந்த செயலிக்கு உள்ளது. ஒருவரது தனிப்பட்ட உடல்நல ஸ்கோர்களை தொடர்ந்து அறிவியல் பூர்வமாக கண்காணிக்க உதவும் ‘நியூட்ரிப்ளஸ்’  தளத்தினை ஜனநாயக அடிப்படையில் அனைவரும் அணுகும் வகையில் வெளியிட்டுள்ளதன் மூலம் - மேற்கூறிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தினை சாத்தியமாக்கியுள்ளனர். இதன் மூலம் இந்திய மக்கள் தொகையில் கணிசமான அளவில் தொற்றா நோய்கள் அதிகம் ஏற்படுவதை குறைப்பதற்கும், மருத்துவத் துறை சார்ந்த சமூக மற்றும் பொருளாதார சுமையைக் குறைப்பதற்கும் இந்த முன்முயற்சி உதவியாக இருக்கும்”, என்று தெரிவித்தார்.

 இந்த செயலியின் அறிமுகம் குறித்து பேசிய பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைமை மார்கெட்டிங் அலுவலர், திரு. அமித் தோஷி அவர்கள்,  "நல்ல சிற்றுண்டிகளை தேடுவதில் அதிக நாட்டம் காட்டும்  நுகர்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது - அவர்களின் தேவையை பிரிட்டானியா நியூட்ரிசாய்ஸ் சரியாக பூர்த்தி செய்கிறது. இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான வீடுகளை சென்றடையும் பலவகையான பிரிட்டானியா நியூட்ரிசாய்ஸ் பேக்கேஜில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம், நுகர்வோர் நியூட்ரிப்ளஸ் (NutriPlus) செயலியை பதிவிறக்கம் செய்யலாம். அன்றாடம் நாம் தேர்ந்தெடுக்கும் சின்னச்சின்ன விஷயங்களில் மறைந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத சக்தியை நாங்கள் நம்புகிறோம்; நலமான வாழ்வு மற்றும் சிறந்த வாழ்வியல் முறைகளைத் நாடும் மில்லியன் கணக்கான இந்தியர்களின் உற்ற பார்ட்னராக நியூட்ரிசாய்ஸ் இருக்க வேண்டும் என்கிற முன்முயற்சியில் ஒரு படியாக இந்த நியூட்ரிப்ளஸ் செயலி இருக்கும்”, என்று கூறினார்.

ஆக்டிவோ லேப்ஸ் நிறுவனத்தின், தலைமை செயல் அலுவலர் (CEO) மற்றும் இணை நிறுவனரான, திரு. கௌரப் முகர்ஜி, அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், "பிரிட்டானியா போன்ற முன்னோக்கு சிந்தனையுள்ள நிறுவனங்கள், அவர்கள் சேவை செய்யும் சமூகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த புதுமையான தொழில்நுட்பங்களை பயன்படுத்த விரும்புகிறார்கள். இத்தகைய முன்முயற்சியில் ஆக்டிவோ லேப்ஸின் தொழில்நுட்ப அனுபவம் மூலம் அவர்களுக்கு செயலூக்கம் அளிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். இந்த முன்முயற்சியின் எதிர்வரும் பயணம் குறித்து நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம்; இந்தியர்கள் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ உதவும் ஒரு நிகழ்நேர- டிஜிட்டல்-சுகாதார தரவுகளின் சக்தியை பிரிட்டானியா நிறுவனம் ஆக்கபூர்வமாக பயன்படுத்தவுள்ளதைக் காண ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம்”, என்றார்.

மேலும், இந்த நியூட்ரிப்ளஸ் செயலியானது நுகர்வோருக்கு சுய முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்கு உதவுவது மட்டுமில்லாமல்; அவர்களது சாதனைகளைக் கொண்டாடி, தொடர் பங்கேற்பையும் ஊக்குவிக்கிறது. பயனர்கள் நியூட்ரிஸ்கோரின் பல்வேறு நிலைகளுக்கு முன்னேறும்போது - ஸ்டார்ட்டர் (Starter), அச்சீவர் (Achiever), ஸ்டார் (Star) மற்றும் புரோ (Pro)- என அவர்களை உற்சாகப்படுத்தும். மேலும் அற்புதமான வெகுமதிகளையும் சலுகைகளையும் ஒவ்வொரு நிலையிலும் வழங்கும். பிரபலமான உடற்பயிற்சி நிலையங்களில் பயன்படுத்திக்கொள்ளும் விதமாக பிரத்யேக வவுச்சர்களாகவும்; 20,000 புள்ளிகளை எட்டியவுடன் சர்வதேச சுற்றுலா செல்லும் வாய்ப்பளிப்பது என எண்ணற்ற சலுகைகளை வழங்குகிறது. இதன் மூலம் நுகர்வோரின் உடல் நலம் சார்ந்த பயணத்தில் ஒவ்வொரு படிநிலையிலும் அவர்களுக்கு சரியான அங்கீகாரம் மற்றும் ஊக்கத்தையும் அளிப்பதை இந்த செயலி உறுதி செய்கிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Close Menu